Posts

Showing posts from August, 2020

Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Red Mercury tv, radio fact in tamil சிவப்பு பாதரசம்

Image
சிவப்பு பாதரசம் என்றால் என்ன ? இது கோடிக்கணக்கில் விற்க காரணம் என்ன ? சிவப்பு பாதரசத்திற்கு உண்மையில் சக்திகள் உள்ளதா ? சிவப்பு பாதரசம் பற்றி கூறப்படும் கதைகளும் உண்மையான அறிவியல் விளக்கங்களையும் இந்த பதிவில் பார்ப்போமா ? சிவப்பு பாதரசம் எனப்படும் உலோகம் திரவ நிலையில் காணப்படும் உலோகம், இது அணு ஆயுதங்களில் பயன்படுகிறது என்று பல கதைகள் யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவதை பார்த்திருப்பீர்கள்.  இந்த சிவப்பு பாதரசத்தை வீட்டில் வைத்திருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம், இதனை காயங்கள் மீது வைத்தால் அனைத்து காயங்களும் குணமாகும், இந்த சிவப்பு பாதரசம் அதிர்ஷ்டம் நிறைந்தது என்னும் பல கதைகள் செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் பரவிவருகிறது. சிவப்பு பாதரசம் விலை என்னவாக இருக்கும் ? இந்த சிவப்பு பாதரசம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என்கிறார்கள் இதனை வைத்து ஏமாற்றும் மோசடிகாரர்கள். உண்மையில் சிவப்பு பாதரசம் என்ற ஒன்று இருக்கிறதா ? இதுவரை அறிவியலாளர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளில் சிவப்பு பாதரசம் என்ற ஒன்று இல்லை. சிவப்பு பாதரசம் பற்றிய அறிவியல் நிரூபணங்கள் ஏதுமில்லை. இதன் ...

Defence production and export promotion policy 2020 draft in tamil

Image
வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை:- வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை 2020-ஐ பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நமது நாட்டின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் கொள்கைகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு எவ்வளவு இயற்கை வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் எவ்வளவு தொகை பாதுகாப்பிற்காக முதலீடு செய்யப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது நம் கடமை. வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை பற்றிய தகவல்கள்:- பாதுகாப்பு உற்பத்தியில் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்காகவே இந்த கொள்கை துவங்கப்பட்டது. பாதுகாப்பு உற்பத்தியில் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதற்காகவே, ''தன்னம்பிக்கை இந்தியா''  (Atma nirbhar Bharath Package ) என்ற தொகுப்பின் கீழ் பல அறிக்கைகள் உருவாக்கப்பட்டன. இந்த கட்டமைப்பைத் துவக்குவதற்காகவும், பாதுகாப்பிலும் விண்வெளித் துறையிலும் மேலோங்கிய நாடுகளில் இந்தியாவைக் கொண்டு வருவதற்காகவும், பாதுகாப்பு அமைச்சகம், வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும...

Ayothi ramar temple

Image
  அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள இடம்? அயோத்தியின் வரலாறு என்ன? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எவ்வாறு பகை மூண்டது? இக்கோவில் தொடர்பான வழக்கு எத்தனை முறை விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது? உச்சநீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ன? அயோத்தியின் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? இது ராமஜென்ம பூமியாக கருதப்பட காரணம் என்ன?  அயோத்தி ராமர் கோவில் பற்றிய முழு விபரம்: அயோத்தி இருக்கும் இடம்: அயோத்தி, உத்தர பிரதேச மாநிலத்தில் பைசாபாத் எனும் மாவட்டத்தில் அமைந்துள்ளது.   சரயு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்தியானது, இராமாயண காவியத்தில் கூறப்படும், விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமர் பிறந்த இடமாகவே மக்களால் நம்பப்படுகிறது. அயோத்தியை அவாத் என்றும் சகேதம் என்றும் அழைப்பர். பாபர் வரலாறு: பாபர் எனப்படும் சாகிருதின் பாபர் அல்லது ஜலாலுதின் முகம்மது பாபர் பிப்ரவரி திங்கள் 14-ஆம் நாள் 1483-வது வருடத்தில் உசுபெக்கிஸ்தானில் பிறந்தார். இவர் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த இஸ்லாமியர் ஆவார். மத்திய ஆசியாவில் தைமூரியப் பேரரசை உருவாக்கியவரான தைமூர் பின் தராகே பர்லாஸ் மற்று...

1000 கோடி ஊழல் PM kissan திட்டம் முறைகேடு

Image
பிரதமரின் கிசான் திட்டத்தில் ஊழல் ? விவசாயம் அல்லாதவர்கள் திட்டத்தில் இணைந்து எப்படி ?  பிரதமரின் கிசான் திட்டம் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6000 ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வந்தது. இந்த உதவித்தொகை கிசான் திட்டத்தில் இணைந்து உள்ள விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும். கிசான் திட்டத்தில் இணைய முதல் தகுதி விவசாயியாக இருக்க வேண்டும். விவசாய நிலம் உள்ளவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற முடியும். விவசாயிகள் வைத்துள்ள நிலத்தின் அதிகபட்ச வரம்பு விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். கிசான் திட்டத்தில் இணையும்போது விவசாயி பற்றிய அனைத்து தகவல்களையும் விவசாய நிலங்களையும் உள்ளீடு செய்தால் மட்டுமே இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற முடியும். எளிமையான விண்ணப்பிக்கும் வசதி: கிசான் திட்டத்திற்கு என தனியாக வலைதளம் உள்ளது. இதில் விவசாயிகள் தாமாக தங்களது தகவல்களை பதிவேற்றி விண்ணப்பித்துக் கொள்ள முடியும். இந்தத் திட்டம் மிகவும் வெளிப்படை தன்மையானது நாம் விண்ணப்பித்த படிவத்தின் செயல்பாடுகள் அனைத்தைய...

இ பாஸ் இனி தேவையில்லை e pass latest news

Image
மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லையா ? மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவை தொடங்கலாமா ? மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வெளியிட்ட இனிப்பு செய்தி ?  வணக்கம் நண்பர்களே கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை தடுக்க பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதில் பொது சேவைகள் முடக்கம் மற்றும் 144 தடை உத்தரவு போன்ற பல தடுப்பு நடவடிக்கைகள் கொரோனா நோய்த்தொற்று சமூக பரவலாக மாறுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்டது. கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் நிறைய விதிக்கப்பட்டன. தற்பொழுது மக்களுக்கு தனிமனித இடைவெளி கடைபிடிப்பது மற்றும் தூய்மையாக இருப்பது பற்றிய விழிப்புணர்வு வர தொடங்கியதால் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இ பாஸ் நடைமுறை மற்றும் பொதுப் போக்குவரத்து தொடங்குவது தொடர்பான செய்தியை வெளியிட்டது. இந்த செய்தி அனைத்து மக்களுக்கும், நீண்ட தூரம் வேலை செய்வோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரியான கா...

D614G virus mutation in Tamil

Image
மலேசியாவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் தொற்று  ? கொரோனவைரஸ் அடைந்த பரிணாம வளர்ச்சி ? டி614ஐி வைரஸ் தொற்று என்றால் என்ன ? D614G வைரஸ் தொற்று கொரோனாவைவிட மிகவும் ஆபத்தானதா ? கொரோனா வைரஸ் பற்றிய தற்போதைய நிலை என்ன ? கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய பயன்படும் புதிய கண்டுபிடிப்புகள் ? வணக்கம் நண்பர்களே சீனாவின் வூகான் மாகாணத்தில் தோன்றிய கொடூரமான வைரஸ் தொற்று காரணமாக அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் வணிகம் விவசாயம் மற்றும் பல துறைகள் மக்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் செயலிழந்து உள்ளன. நாம் சந்தித்துள்ள இந்தப் பெரும் தொற்று பாதிப்பை சரி செய்ய இன்னும் எவ்வளவு நாட்கள் தேவைப்படும் என்பது இதுவரை தெரியவில்லை. நம்மிடம் உள்ள அனைத்து உணவுப் பொருட்களும் ஆற்றலும் பயன்பாட்டின் காரணமாக குறைந்து கொண்டே செல்கிறது. புதிய வேலைகளை செய்யாத காரணத்தினால் உற்பத்தி திறன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆகியவை தோன்ற காரணமாக இருக்கும். அனைத்து நாடுகளும் மற்றும் முன்னணி நிறுவனங்களும் தன்னார்வ ஆராய்ச்சியாளர்களும் கொரோனாவிற்க...

Atthivarathar kancheepuram temple unknown facts

Image
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளிவரும் அதிசயம் நிறைந்த கடவுள்? இந்தப் பெருமாள் எங்கே உள்ளார்? இந்த 40 ஆண்டுகள் அவர் எங்கே இருப்பார்? இந்தக் கோவில் அதிசயமாக கருதப்பட நிறைய காரணங்கள் உள்ளன அவை அனைத்தையும் இந்த பதிவில் பார்ப்போம். இந்த அதிசய கோயில் பற்றிய பல அறிய தகவல்களை அறிந்து கொள்வோம் வாருங்கள். தமிழகத்தின் கோவில் நகரம் என்னும் சிறப்பை பெற்றது காஞ்சிபுரம் இத்தகைய சிறப்பு கொண்ட காஞ்சிபுரம் நகரில் தான் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. வரதராஜர் பல கோவில்களில் எழுந்தருளினாலும் இக்கோவில் தனிச்சிறப்பு உடையது. இதற்கு காரணம் இக்கோவிலில் உள்ள அத்திவரதர் சிலை. தனிச்சிறப்புடைய இந்த சிலை கோவிலின் குளத்தில் வைக்கப்பட்டுள்ளது இது 9 அடி உயரம் கொண்டது. இந்த சிலை முழுவதும் அத்தி மரத்தால் ஆனது. இந்த சிலை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிவருவதாக பார்த்தோம்.  அப்போது 40 ஆண்டுகள் இந்த சிலை எங்கே இருக்கும்? ஆம் கோவில் குளத்தில் உள்ள தண்ணீருக்கு அடியில் இந்த சிலை வைக்கப்பட்டிருக்கும். இந்த சிலை 40 ஆண்டுகள் தண்ணீரில் வைக்கப்படும் ரகசியத்தை தெரிந்து கொள்வதற்கு முன் அத்தி வரதர் எவ்வாறு தோன்றினார் என்பதைப் பற்றிய வரல...

India Bharat independence day kavithai in tamil

Image
  சுதந்திர தின கவிதை: பஞ்சம் பிழைக்க வந்தவன்.... நம்மை கொத்தடிமையாய் நடத்தினான்.... வந்தவனுக்குப் பயந்து.... வாழும் நாட்டைப் பணயம் வைத்தோம்.... ஆடும் வரை ஆடிக்கிடந்தான்.... இந்தியர்களை இழிவாய் நடத்தினான்.... தன்னலத்தைக் காப்பதையே குறிக்கோளாய்க் கருதினான்.... மனிதத் தன்மையை மறந்தான்.... அனைவரையும் துன்புறுத்தினான்.... அத்தனை பாவங்களையும் செய்யும் பொழுதில்.... அவன் அறிந்திருக்கவில்லை.... இந்தியர்களின் கைகளும் ஒருநாள் ஓங்குமென்று.... அவன் எதிர்பாரா.... அந்நாளும் வந்தது.... வீழ்ந்து சோர்ந்து பொலிவற்றிருந்த மனங்களில்.... திடீரென ஒரு புரட்சிக்கனல் துளிர் விட்டது.... இந்தியர்களின் கைகள் ஓங்க வேண்டிய காலத்தை.... இந்திய மக்களின் மனங்களில் வித்திட்டது.... அடிமைத்தனத்தை எதிர்க்க விதைத்தக்கப்பட்ட வித்திற்கு.... வீரம் எனும் நீரூற்றி.... போராட்டம் எனும் வெயில் காட்டி.... தன்மான உணர்ச்சி எனும் உரமிட்டு.... தன்னம்பிக்கை எனும் பூச்சிக்கொல்லியைத் தெளித்து.... விடாமுயற்சி எனும் மழை தந்து.... விதைத்த வித்தை செடியாக்கி.... மரமாக்கி.... சுதந்திரம் எனும் கனியையும் பறித்தனர்.... நம் முன்னோர்களான.... சுதந்...

Android Qualcomm security warning in tamil

Image
குவால்காம் ஸ்னாப்ட்ராகன் ப்ராசசர் ல் பாதுகாப்பு குறைபாடா ?....நீங்கள் என்ன மொபைல்போன் பயன்படுத்துரிங்க ?...உங்கள் மொபைல்போன் பாதுகாப்பாகதான் இருக்கா ?....என்ன என் மொபைல்போன் என்னை கண்காணிக்கிறதா ?.... இந்த மொபைல்போன் வரிசையில் உங்கள் மொபைல்போன் உள்ளதா ?...வாங்க பார்க்கலாம்... எல்லாரும் மொபைல்போன் பயன்படுத்துறோம் அதில் உள்ள processor பற்றி தெரியுமா?... Qualcomm snapdragon chip என்ற processor பயன்படுத்தப்படும் முன்னனி நிறுவனங்களின் மொபைல்போன்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக check point எனப்படும் cyber security solutions expert ஆய்வு செய்து கூறியுள்ளனர். இந்த வரிசையில்  O ppo, Vivo, Xiaomi, LG, Samsung, Nokia, OnePlus, Google  பல முன்னனி நிறுவனங்களின் மொபைல்போன்கள் உள்ளன இதில் உங்கள் மொபைல்போன் உள்ளதா என்று பாருங்கள் . Qualcomm snapdragon chip ல் என்ன பிரச்சனை? Qualcomm ஒரு முன்னனி நிறுவனம் இது மொபைல்போன் நிறுவனங்களுக்கு தேவையான processor யை தயாரித்து கொடுக்கிறது. DSP எனப்படும் digital signal processor ல் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதன் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் ...

Social media awareness series 3

வணக்கம் நண்பர்களே  வலைதள விழிப்புணர்வு பகுதி 3ல் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு முந்தைய பகுதிகளில் வலைதள பயன்பாடு, பெற்றோர்கள் வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது, வலைதள பாதிப்பு, குழந்தைகளை கையாலுதல் போன்ற பயனுள்ள தகவல்களை கொடுத்துள்ளோம் அவற்றை படித்து பயன்படுத்தி கொள்ளுங்கள். மாணவர்கள் இணையவழியில் கல்வி கற்கும் இந்த வேளையில் அவர்களின் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்வது பெற்றோர்கள் கடமை. மாணவர்கள் தங்கள் வகுப்பை தொடங்கும்போது பெற்றோரும் உடன் இருக்க வேண்டும்.  இணையதள விளம்பரங்கள்: இணையதளத்தில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களை பார்த்து இருப்பீர்கள். ஒரு இணையதளத்தின் லாப நோக்கத்திற்காக அவை ஒளிபரப்பப்படுகிறது.  இதில் சில விளம்பரங்களில் தவறான காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அவற்றை பார்க்கும் குழந்தைகள் மனதில் தவறான எண்ணங்கள் தோன்றும். சில விளம்பரங்கள் உங்களை கட்டாயமாக பார்க்க வைக்கும் இதனை நீங்கள் தடுக்க இயலாது. இத்தகைய விளம்பரங்கள் வலைதளத்தில் இருந்து நீங்கள் வெளியேற அனுமதிக்காது. சில விளம்பரங்களை நீங்கள் தெரியாமல் தொடுவதால் உங்கள் வங்கிக் கணக்கு வ...

leach fruit drawing for kids

Image
மழலை கைவண்ணம் ஹாய் குழந்தைகளே இன்றைய வகுப்பில் லீச் பழம் வரைவது எப்படி என கற்றுக்கொள்வோம். இதற்கு முந்தைய வகுப்பில் வாழைப்பழம் வரைய கற்றுக்கொண்டீர்கள். வாருங்கள் குழந்தைகளே இன்றைய வகுப்பிற்குள் செல்வோம். படி 1: முதலில் உங்கள் வரைபட புத்தகம் மற்றும் பென்சில் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். நீள்வட்டம் ஒன்றை வரையுங்கள். இப்போது அதன் மேல் பகுதியை அழித்துவிட்டு ஒரு வளைவினால் இரண்டு கோடுகளையும் மூடுங்கள். அடுத்ததாக பழத்தின் கீழ்பகுதியை அழித்துவிட்டு சற்று அகலமான வளைவினால் மூடுங்கள்.  இப்போது உங்கள் வரைபடம் கீழே உள்ளவாறு வடிவத்தை பெற்றிருக்கும். படி 2: லீச் பழத்தின் வடிவத்தை வரைந்துவிட்டீர்கள். இப்போது பழத்தின் இலை பகுதியை வரையலாம். முதலில் இலையின் நரம்பு பகுதியை வரையலாம். இப்போது இலையின் மேல் பகுதியை இலை நரம்பிற்கு மேலே சற்று அகலமாக வரையுங்கள். அடுத்ததாக நரம்பின் கீழ்பகுதியை சற்று அகலம் குறைவாக வரையவும். லீச் பழத்தின் இலை வடிவத்தை வரைந்துவிட்டீர்கள்.                           ...