D614G virus mutation in Tamil
- Get link
- X
- Other Apps
மலேசியாவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் தொற்று ? கொரோனவைரஸ் அடைந்த பரிணாம வளர்ச்சி ? டி614ஐி வைரஸ் தொற்று என்றால் என்ன ? D614G வைரஸ் தொற்று கொரோனாவைவிட மிகவும் ஆபத்தானதா ? கொரோனா வைரஸ் பற்றிய தற்போதைய நிலை என்ன ? கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய பயன்படும் புதிய கண்டுபிடிப்புகள் ?
வணக்கம் நண்பர்களே சீனாவின் வூகான் மாகாணத்தில் தோன்றிய கொடூரமான வைரஸ் தொற்று காரணமாக அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் வணிகம் விவசாயம் மற்றும் பல துறைகள் மக்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் செயலிழந்து உள்ளன. நாம் சந்தித்துள்ள இந்தப் பெரும் தொற்று பாதிப்பை சரி செய்ய இன்னும் எவ்வளவு நாட்கள் தேவைப்படும் என்பது இதுவரை தெரியவில்லை.
நம்மிடம் உள்ள அனைத்து உணவுப் பொருட்களும் ஆற்றலும் பயன்பாட்டின் காரணமாக குறைந்து கொண்டே செல்கிறது. புதிய வேலைகளை செய்யாத காரணத்தினால் உற்பத்தி திறன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆகியவை தோன்ற காரணமாக இருக்கும்.
அனைத்து நாடுகளும் மற்றும் முன்னணி நிறுவனங்களும் தன்னார்வ ஆராய்ச்சியாளர்களும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்தி உள்ளனர். பல நாடுகள் கண்டுபிடித்த கொரோனா மருந்து சோதனை நிலையில் உள்ளன. இந்த மருந்துகள் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வெற்றிபெறும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலுமாக அழிக்கப்படும்.
கொரானா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல் என்ன ?
கொரோனா வைரஸ் மரபணு தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால் இதற்கு சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் சிக்கலாக உள்ளது.
மலேசியாவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் தொற்று ?
மலேசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தற்போது புதிய மரபணு மாறுபட்ட கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்த புதிய வைரஸ் தொற்றுக்கு D614G என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மலேசிய அமைச்சகத்தின் பொது ஆணையர் நூர்சியா தெரிவித்துள்ளார்.
இந்த நோய் தொற்று சிவகங்கையில் இருந்து சென்றவர் மூலம் பரவியதால் இதற்கு சிவகங்கா கிளஸ்டர் என்று பெயரிட்டுள்ளனர்.
மலேசியாவில் எவ்வாறு இந்த தொற்று பரவியது ?
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மலேசியா சென்ற நபர் மூலம் அங்கு கொரோனா மீண்டும் பரவ தொடங்கியது. இவர் மலேசியாவில் ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்தியாவில் இருந்து மலேசியா சென்ற இவர் தன்னை 14 நாட்கள் தனிமைபடுத்திக் கொள்ளவில்லை இதுவே நோய்த்தொற்று பரவ காரணமாக அமைந்தது.
இவருக்கு மலேசியா அரசு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ளது. இவரது ஓட்டலில் உணவருந்திய 45 பேருக்கு D614G நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
D614G வைரஸ் தொற்று தன்மை ?
மரபணு மாற்றம் அடைந்த இந்த புதிய கொரோனா வைரஸ் தொற்று கோவிட் 19 யை விட 10 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. இதனால் வைரஸ் மிக எளிதாக பரவும் அபாயம் உள்ளது.
வேகமாக பரவும் இதன் தன்மையால் இது சூப்பர் ஸ்ப்ரெடர் என்று அறியப்படுகிறது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மூத்த மருத்துவரும் சர்வதேச தொற்று நோயியல் அமைப்பின் தலைவருமான பால் தம்பியா ரெய்டர்ஸ் செய்தி முகமைக்கு அளித்த பேட்டி ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பால் தம்பியா அளித்த பேட்டியில் டி614ஐி எனப்படும் மரபணு மாற்றம் அடைந்த கொரானா வைரஸ் பரவிய பிறகு உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளார். பெரும்பாலான வைரஸ் மரபணு மாற்றம் அடையும்போது அவற்றின் வீரியம் குறைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நோய்த்தொற்று வேகமாக பரவினாலும் உயிரிழப்புகள் குறைவது நன்மை அளிக்கக் கூடியதாக உள்ளதாக அவர் தெரிவித்தார். இது மக்கள் மனதில் கொரானா வைரஸ் பற்றிய பயத்தை சற்று குறைப்பதாக உள்ளது.
D614G வைரஸ் தொற்று காணப்படும் நாடுகள் ?
எகிப்து ,பாகிஸ்தான், ஐரோப்பா ,வட அமெரிக்கா ,ஆசியா ஆகிய நாடுகளில் D614G வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் காணப்பட்ட D614G வகை வைரஸ் தொற்று தொடர்ச்சியான தடுப்பு நடவடிக்கை காரணமாக அதிக பரவல் குறைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நிறுவனத்தின் விஞ்ஞானி செபாஸ்டியன் கூறியுள்ளார்.
நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் :
கொரோனா வைரஸ்க்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் இதற்கு பலன் தராது என்று கூறுகின்றனர். நாம் நம்மை தனிமை படுத்திக் கொள்வதும்,சமூக இடைவெளி பின்பற்றுவதும், நம்மை தூய்மையாக வைத்துக் கொள்வதும் மட்டுமே நம்மை தற்போது பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கை ஆகும்.
கொரானா வைரஸ் தடுப்பு மருந்து கிடைக்கும்வரை நாம் விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்.
D614G வகை கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் குறைவாக இருந்தாலும் அனைவரும் விழிப்புடன் இருப்பதே கொரானா என்னும் கொடிய நோய்த்தொற்றை முடிவுக்கு கொண்டு வரும் வழி.
இந்த கொடிய நோய்த்தொற்றை பற்றிய செய்திகள் தமிழில் அதிகம் வெளிவரவில்லை. சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த பதிவை உருவாக்கியுள்ளோம்.மேலும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் படிக்க எங்கள் பக்கத்தை பின்தொடருங்கள். ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.
தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக.
மேலும் படிக்க,
- அத்தி வரதர் கோவில் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்
- 40 சதவீத ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் ஆபத்தில் உள்ளன உங்கள் மொபைல் உள்ளதா என்று செக் பன்னுங்க
- லீச் பழம் வரைய கற்றுக்கொள்ள
- சுதந்திர தின சிறப்பு கவிதை நூல்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.