Posts

Showing posts with the label Entertainment

Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

5 steps easy tom and jerry drawing

Image
How to draw tom and jerry easily in 5 steps:  Step 1:  டாம் உருவத்தை கீழே உள்ளது போல் மெல்லியதாக வரையவும். Step 2: டாமின் மற்றொரு கையை கீழே உள்ளவாறு வரையுங்கள். Step 3: டாம் கையில் ஜெர்ரி உள்ளவாறு வரையவும். Step 4: டாம் மற்றும் ஜெர்ரி பொம்மையை டார்க்காக வரையவும். Step 5: டாம் மற்றும் ஜெர்ரி பொம்மைக்கு கீழே உள்ளவாறு வண்ணம் நீட்டுங்கள் டாம் மற்றும் ஜெர்ரி கார்ட்டூன் பொம்மையை 5 படிகளில் எளிதாக வரைந்துவிட்டீர்கள். மேலும் இதுபோன்ற வரைபடங்கள் காண இணைந்து இருங்கள். RiyAshoKshades 

Ayothi ramar temple

Image
  அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள இடம்? அயோத்தியின் வரலாறு என்ன? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எவ்வாறு பகை மூண்டது? இக்கோவில் தொடர்பான வழக்கு எத்தனை முறை விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது? உச்சநீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ன? அயோத்தியின் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? இது ராமஜென்ம பூமியாக கருதப்பட காரணம் என்ன?  அயோத்தி ராமர் கோவில் பற்றிய முழு விபரம்: அயோத்தி இருக்கும் இடம்: அயோத்தி, உத்தர பிரதேச மாநிலத்தில் பைசாபாத் எனும் மாவட்டத்தில் அமைந்துள்ளது.   சரயு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்தியானது, இராமாயண காவியத்தில் கூறப்படும், விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமர் பிறந்த இடமாகவே மக்களால் நம்பப்படுகிறது. அயோத்தியை அவாத் என்றும் சகேதம் என்றும் அழைப்பர். பாபர் வரலாறு: பாபர் எனப்படும் சாகிருதின் பாபர் அல்லது ஜலாலுதின் முகம்மது பாபர் பிப்ரவரி திங்கள் 14-ஆம் நாள் 1483-வது வருடத்தில் உசுபெக்கிஸ்தானில் பிறந்தார். இவர் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த இஸ்லாமியர் ஆவார். மத்திய ஆசியாவில் தைமூரியப் பேரரசை உருவாக்கியவரான தைமூர் பின் தராகே பர்லாஸ் மற்று...

D614G virus mutation in Tamil

Image
மலேசியாவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் தொற்று  ? கொரோனவைரஸ் அடைந்த பரிணாம வளர்ச்சி ? டி614ஐி வைரஸ் தொற்று என்றால் என்ன ? D614G வைரஸ் தொற்று கொரோனாவைவிட மிகவும் ஆபத்தானதா ? கொரோனா வைரஸ் பற்றிய தற்போதைய நிலை என்ன ? கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய பயன்படும் புதிய கண்டுபிடிப்புகள் ? வணக்கம் நண்பர்களே சீனாவின் வூகான் மாகாணத்தில் தோன்றிய கொடூரமான வைரஸ் தொற்று காரணமாக அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் வணிகம் விவசாயம் மற்றும் பல துறைகள் மக்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் செயலிழந்து உள்ளன. நாம் சந்தித்துள்ள இந்தப் பெரும் தொற்று பாதிப்பை சரி செய்ய இன்னும் எவ்வளவு நாட்கள் தேவைப்படும் என்பது இதுவரை தெரியவில்லை. நம்மிடம் உள்ள அனைத்து உணவுப் பொருட்களும் ஆற்றலும் பயன்பாட்டின் காரணமாக குறைந்து கொண்டே செல்கிறது. புதிய வேலைகளை செய்யாத காரணத்தினால் உற்பத்தி திறன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆகியவை தோன்ற காரணமாக இருக்கும். அனைத்து நாடுகளும் மற்றும் முன்னணி நிறுவனங்களும் தன்னார்வ ஆராய்ச்சியாளர்களும் கொரோனாவிற்க...

Atthivarathar kancheepuram temple unknown facts

Image
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளிவரும் அதிசயம் நிறைந்த கடவுள்? இந்தப் பெருமாள் எங்கே உள்ளார்? இந்த 40 ஆண்டுகள் அவர் எங்கே இருப்பார்? இந்தக் கோவில் அதிசயமாக கருதப்பட நிறைய காரணங்கள் உள்ளன அவை அனைத்தையும் இந்த பதிவில் பார்ப்போம். இந்த அதிசய கோயில் பற்றிய பல அறிய தகவல்களை அறிந்து கொள்வோம் வாருங்கள். தமிழகத்தின் கோவில் நகரம் என்னும் சிறப்பை பெற்றது காஞ்சிபுரம் இத்தகைய சிறப்பு கொண்ட காஞ்சிபுரம் நகரில் தான் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. வரதராஜர் பல கோவில்களில் எழுந்தருளினாலும் இக்கோவில் தனிச்சிறப்பு உடையது. இதற்கு காரணம் இக்கோவிலில் உள்ள அத்திவரதர் சிலை. தனிச்சிறப்புடைய இந்த சிலை கோவிலின் குளத்தில் வைக்கப்பட்டுள்ளது இது 9 அடி உயரம் கொண்டது. இந்த சிலை முழுவதும் அத்தி மரத்தால் ஆனது. இந்த சிலை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிவருவதாக பார்த்தோம்.  அப்போது 40 ஆண்டுகள் இந்த சிலை எங்கே இருக்கும்? ஆம் கோவில் குளத்தில் உள்ள தண்ணீருக்கு அடியில் இந்த சிலை வைக்கப்பட்டிருக்கும். இந்த சிலை 40 ஆண்டுகள் தண்ணீரில் வைக்கப்படும் ரகசியத்தை தெரிந்து கொள்வதற்கு முன் அத்தி வரதர் எவ்வாறு தோன்றினார் என்பதைப் பற்றிய வரல...

India Bharat independence day kavithai in tamil

Image
  சுதந்திர தின கவிதை: பஞ்சம் பிழைக்க வந்தவன்.... நம்மை கொத்தடிமையாய் நடத்தினான்.... வந்தவனுக்குப் பயந்து.... வாழும் நாட்டைப் பணயம் வைத்தோம்.... ஆடும் வரை ஆடிக்கிடந்தான்.... இந்தியர்களை இழிவாய் நடத்தினான்.... தன்னலத்தைக் காப்பதையே குறிக்கோளாய்க் கருதினான்.... மனிதத் தன்மையை மறந்தான்.... அனைவரையும் துன்புறுத்தினான்.... அத்தனை பாவங்களையும் செய்யும் பொழுதில்.... அவன் அறிந்திருக்கவில்லை.... இந்தியர்களின் கைகளும் ஒருநாள் ஓங்குமென்று.... அவன் எதிர்பாரா.... அந்நாளும் வந்தது.... வீழ்ந்து சோர்ந்து பொலிவற்றிருந்த மனங்களில்.... திடீரென ஒரு புரட்சிக்கனல் துளிர் விட்டது.... இந்தியர்களின் கைகள் ஓங்க வேண்டிய காலத்தை.... இந்திய மக்களின் மனங்களில் வித்திட்டது.... அடிமைத்தனத்தை எதிர்க்க விதைத்தக்கப்பட்ட வித்திற்கு.... வீரம் எனும் நீரூற்றி.... போராட்டம் எனும் வெயில் காட்டி.... தன்மான உணர்ச்சி எனும் உரமிட்டு.... தன்னம்பிக்கை எனும் பூச்சிக்கொல்லியைத் தெளித்து.... விடாமுயற்சி எனும் மழை தந்து.... விதைத்த வித்தை செடியாக்கி.... மரமாக்கி.... சுதந்திரம் எனும் கனியையும் பறித்தனர்.... நம் முன்னோர்களான.... சுதந்...

leach fruit drawing for kids

Image
மழலை கைவண்ணம் ஹாய் குழந்தைகளே இன்றைய வகுப்பில் லீச் பழம் வரைவது எப்படி என கற்றுக்கொள்வோம். இதற்கு முந்தைய வகுப்பில் வாழைப்பழம் வரைய கற்றுக்கொண்டீர்கள். வாருங்கள் குழந்தைகளே இன்றைய வகுப்பிற்குள் செல்வோம். படி 1: முதலில் உங்கள் வரைபட புத்தகம் மற்றும் பென்சில் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். நீள்வட்டம் ஒன்றை வரையுங்கள். இப்போது அதன் மேல் பகுதியை அழித்துவிட்டு ஒரு வளைவினால் இரண்டு கோடுகளையும் மூடுங்கள். அடுத்ததாக பழத்தின் கீழ்பகுதியை அழித்துவிட்டு சற்று அகலமான வளைவினால் மூடுங்கள்.  இப்போது உங்கள் வரைபடம் கீழே உள்ளவாறு வடிவத்தை பெற்றிருக்கும். படி 2: லீச் பழத்தின் வடிவத்தை வரைந்துவிட்டீர்கள். இப்போது பழத்தின் இலை பகுதியை வரையலாம். முதலில் இலையின் நரம்பு பகுதியை வரையலாம். இப்போது இலையின் மேல் பகுதியை இலை நரம்பிற்கு மேலே சற்று அகலமாக வரையுங்கள். அடுத்ததாக நரம்பின் கீழ்பகுதியை சற்று அகலம் குறைவாக வரையவும். லீச் பழத்தின் இலை வடிவத்தை வரைந்துவிட்டீர்கள்.                           ...

Banana drawing for kids

Image
மழலை கைவண்ணம் ஹாய் குழந்தைகளே இன்றைய வகுப்பில் வரையப்போகும் பழம் வாழைப்பழம். இதற்கு முந்தைய வகுப்பில் மாம்பழம் மற்றும் ஆரஞ்சு பழத்தை வரைய கற்றுக்கொண்டோம். வாழைப்பழத்தை எவ்வாறு வரையலாம் என்பதை படிப்படியாக கற்றுக்கொள்வோமா... வாருங்கள் குழந்தைகளே வகுப்பிற்குள் செல்லலாம். படி 1: வாழைப்பழத்தின் மேற்பரப்பை பார்த்திருப்போம்  முதலில் மெல்லிய வில்வடிவ கோடுகளால் வாழைப்பழத்தின் புறப்பரப்பை வரையுங்கள். இப்போது பழத்தின் அடிப்பகுதியை ஒரு வளைவினால் இணையுங்கள். அடுத்ததாக பழத்தின் நுனி பகுதியை மெல்லிய கோடு மூலம் சிறியதாக நீட்டிவிடுங்கள். அனைத்து பழத்தின் காம்புகளையும் இணைக்கும்படி ஒரு பரப்பை கீழே உள்ளவாறு வரையுங்கள். வாழைப்பழத்தை சுற்றி சிறிய வட்டம் ஒன்றை வரையுங்கள். இப்போது வாழைப்பழம் ஒரு தட்டு மீது இருப்பது போன்ற வடிவத்தை வரைந்துவிட்டீர்கள். படி 2: இப்போது வாழைப்பழம் காம்பு பகுதியை பென்சில் கொண்டு வண்ணம் தீட்டுங்கள்.   படி 3: வாழைப்பழத்தின் மேற்பரப்பில் காணப்படும் கரும்புள்ளிகளை வரையப்போகிறோம். படத்தில் உள்ளவாறு சில கரும்புள்ளிகளை பழத்தின் ...

Orange step by step drawing for kids

Image
மழலை கைவண்ணம் ஹாய் குழந்தைகளே, இன்று நம் வகுப்பில் வரையப்போகும் பழம் ஆரஞ்சு. சென்ற வகுப்பில் மாம்பழம் வரைவது எப்படி என கற்றுக்கொண்டீர்கள். இன்று ஆரஞ்சு பழம் வரையலாம் வாருங்கள். படி 1: உங்களின் பென்சில் மற்றும் வெள்ளை காகிதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரஞ்சு பழம் வடிவத்தை பார்த்துள்ளீர்கள் அல்லவா? ஆம் அது ஒரு கோளக வடிவத்தில் இருக்கும்.  முதலில் மெல்லியதாக ஒரு வட்டம் வரையுங்கள்.  மேற்பகுதியை அழித்துவிட்டு சிறிய வளைவினால் இணையுங்கள். இப்போது ஆரஞ்சு பழத்தின் வடிவத்தை வரைந்துவிட்டீர்கள். படி 2: இப்போது ஆரஞ்சு பழத்தை தாங்க உதவும் காம்பு பகுதி மற்றும் பழத்தின் மீது உள்ள வளைவான பகுதிகளை வரையப்போகிறோம். சிறிய வட்டம் வரைந்து அதனை சுற்றி கீழே உள்ள படத்தை போல சில கோடுகள் வரையுங்கள். படி 3: காம்பு பகுதியில் இருந்து இலைக் காம்புகளை நீட்டி விடுங்கள்.  ஒரு பகுதியில் சிறிய இலை வரையுங்கள்.  மற்றுமொரு பகுதியில் பெரிய இலை வரையுங்கள். இலை வரையும் முறை: முதலில் இலைக்காம்பிலிருந்து மைய நரம்பை வரையுங்கள்.  நரம்பு பகுதியின் மேற்...