Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Ayothi ramar temple

 

அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள இடம்? அயோத்தியின் வரலாறு என்ன? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எவ்வாறு பகை மூண்டது? இக்கோவில் தொடர்பான வழக்கு எத்தனை முறை விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது? உச்சநீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ன? அயோத்தியின் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? இது ராமஜென்ம பூமியாக கருதப்பட காரணம் என்ன? 

அயோத்தி ராமர் கோவில் பற்றிய முழு விபரம்:

அயோத்தி இருக்கும் இடம்:

அயோத்தி, உத்தர பிரதேச மாநிலத்தில் பைசாபாத் எனும் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சரயு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்தியானது, இராமாயண காவியத்தில் கூறப்படும், விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமர் பிறந்த இடமாகவே மக்களால் நம்பப்படுகிறது. அயோத்தியை அவாத் என்றும் சகேதம் என்றும் அழைப்பர்.


பாபர் வரலாறு:

பாபர் எனப்படும் சாகிருதின் பாபர் அல்லது ஜலாலுதின் முகம்மது பாபர் பிப்ரவரி திங்கள் 14-ஆம் நாள் 1483-வது வருடத்தில் உசுபெக்கிஸ்தானில் பிறந்தார். இவர் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த இஸ்லாமியர் ஆவார். மத்திய ஆசியாவில் தைமூரியப் பேரரசை உருவாக்கியவரான தைமூர் பின் தராகே பர்லாஸ் மற்றும் மங்கோலியப் பேரரசை உருவாக்கியவரான கெங்கிஸ் கான், பாபரின் முன்னோர்கள் என்று கருதப்படுகின்றனர். 

இந்தியா வந்த பாபர், இங்கு முகலாய வம்சத்தை உருவாக்கினார். இவரது தந்தை, ஓமர் ஷேக் மீர்சா ஆவார்; தாய், குத்லுக் நிகர் கானும் ஆவார். தில்லி சுல்தானின் உறவினரான அல்லாவுதீன் மற்றும் பஞ்சாப் ஆளுநரான தௌலத்கான் இருவரையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு, தில்லி சுல்தானான இப்ராகிம் லோடியுடன் 1526-ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் வீரர்களுடன் பானிப்பட் போரை மேற்கொண்டார். தில்லி சுல்தானுக்கு எதிரான பானிப்பட் போரில், பாபர் தன் முதல் வெற்றியைத் தழுவினார். அதன் பின் 1527, 1528 மற்றும் 1529-ஆம் ஆண்டுகளிளும் தொடர்ந்து வெற்றியைக் கண்டார். இவர் இந்தியாவை, 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார். 

தன் இறுதி காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த பாபர், திசம்பர் திங்கள் 26-ஆம் நாள் 1530-வது வருடத்தில், தன் 47-வது அகவையில் இயற்கை எய்தினார். 


பாபர் மசூதி உருவாக்கம்:

இவர் வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்ட மசூதி, பாபர் மசூதி என்று இஸ்லாமிய மக்களால் பெருமளவில் போற்றப்பட்டது. மேலும், இம்மசூதியின் மூன்று கல்வெட்டுகள், பாபரின் தளபதியான மிர் பாகியால் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இராமர் பற்றிய வரலாறு:



அயோத்தியின் அரசரான தசரத சக்கரவர்த்திக்கும் அவரது மூன்று மனைவிகளில் மூத்தவரான கோசலைக்கும் ஒரே மகனாகப் பிறந்தார் இராமர். தசரத சக்கரவர்த்தியின் நான்கு மகன்களில் மூத்தவரும் இவரே. இவர் இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்தவராவார். சிறு வயது முதலே, மிகுந்த திறமையும் அன்பும் பண்பும் பணிவும் மூத்தோர்களிடம் அதிக மரியாதையும் கொண்டு விளங்கினார். இவர் விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகக் கருதப்படுகிறார். 

ஜனக மகாராஜாவின் ஆட்சி நாடான மிதிலையில் அரசரின் மகள்களுக்கு திருமணத்திற்காக சுயம்வரம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட இராமர், சிவதனுசு எனும் வில்லை உடைத்து சீதையை மணந்தார். திருமணம் முடிந்த வெகு சில நாட்களிலேயே, தசரதரின் இரண்டாம் மனைவியும் இராமரின் மாற்றாந்தாயுமான கைகேயியின் சூழ்ச்சியினாலும் தன் தந்தையின் கட்டளையினாலும் இராமர், தன் மனைவியான சீதை மற்றும் தன் இளையனான இலட்சுமணன் இருவருடனும் 14 வருடங்கள் தண்டக வனத்திற்கு வனவாசம் சென்றார். காட்டில் மூவரும் பல இன்னல்களை சந்தித்தனர்.

தண்டக வனத்தில் ஜனஸ்தானம் எனும் இடத்தில் ஒரு புள்ளி மானின் அழகில் கவரப்பட்ட சீதை, அந்த மானைப் பிடித்துத் தருமாறு கேட்டாள். அவளின் ஆசையை நிறைவேற்ற, மானை வேட்டையாட இராமர் போக, தனிமையில் இருந்த சீதை இராவணனால் கடத்திச் செல்லப்படுகிறாள். இராவணனிடமிருந்து சீதையை போரிட்டு மீட்டுக்கொண்டு வனவாசம் முடிந்து மீண்டும் அயோத்தியை அடைந்து அயோத்தியின் மன்னராக பட்டாபிஷேகம் சூட்டப்பெறுகிறார்.


அயோத்தி நிலம் தொடர்பான கருத்துக்கள்:

கி.பி.16-ஆம் நூற்றாண்டில் அயோத்தியில் பாபரால் கட்டப்பட்ட மசூதியே பாபர் மசூதி ஆகும். ஆய்வாளர்களின் கூற்றின் படி, இந்த மசூதி 16-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே (1528-1529) கட்டப்பட்டதாகும். இந்த இடம் முழுவதும் இஸ்லாமியர்களின் பயன்பாட்டில் தான் இருந்தது. 1611-ஆம் ஆண்டில் ஆங்கிலேய பயணியான வில்லியம் ஃபிஞ்ச் என்பவர் அயோத்திக்கு வந்துள்ளார். அவர் தம் பதிவின் படி, அயோத்தியில் இராமரின் கோட்டையும் சில இடிந்த வீடுகளும் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் 1634 அயோத்தி வந்த தாமஸ் ஹெர்பர்ட்டும் அழகான பழமை வாய்ந்த அரண்மனை இருந்ததாகவும் அது நினைவுக்குரிய சின்னமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

1722-ஆம் ஆண்டில் முகலாயர்களின் ஆட்சியில் பைதாபாத் நகரை, சரயு நதிக்கரையில் அயோத்திக்கு அருகில் உருவாக்கியவர், சதாத் அலி கான் என்பவர் ஆவார். அவரே அந்நாளில் அயோத்தியின் முதல் ஆளுநராக விளங்கினார். அயோத்தியின் இரண்டாம் ஆளுநர், சப்தார் ஜங் ஆவார்.


அயோத்தி நில பிரச்சினை தொடக்கம்:

கி.பி.19-ஆம் நூற்றாண்டு தான் அயோத்தி பிரச்சனையின் அடித்தளமாக அமைந்தது. கி.பி.19-ஆம் நூற்றாண்டில் இந்துக்கள் சிலர், அயோத்தியில் பிறந்த இராமர், துல்லியமாக பாபர் மசூதி கட்டப்பட்டிருக்கும் இடத்தில் தான் பிறந்தார். மேலும், அது இந்துக்களுக்கு சொந்தமான இடம் என்றும் இங்கு மசூதி இருக்கக்கூடாது என்றும் கூறினர். இவ்வாறே முதலில் பிரச்சனை ஆரம்பித்தது.

பின்னாட்களில் பிரச்சனை தீவிரமடையத் தொடங்கியது. இந்த பிரச்சனையினாலேயே இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் கடும் பகை மூண்டது. பிரச்சனை வலுவடைந்து கொண்டே போனது.


பிரிட்டிஷ் ஆட்சி தீர்ப்பு:

பிரச்சனை உலகளவில் பெரிதானது மட்டுமல்லாது 2000-க்கும் மேற்பட்டோர் இறந்து போயினர். அந்நாளில் இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டன் அரசு இப்பிரச்சனையைக்கு தீர்வு காண முடிவு செய்தது. எனவே, மசூதிக்கு மத்தியில் சுவர் எழுப்பி மசூதியை இரண்டாய் பிரித்த பிரிட்டன் அரசு, ஒரு பகுதியில் இந்துக்களும் மற்றொரு பகுதியில் இஸ்லாமியர்களும் அவரவர் மதக் கடவுள்களை வணங்கலாம் என்று 1863-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

1949-ஆம் ஆண்டு வரை கடைபிடிக்கப்பட்ட இந்த விதிமுறையில் தளர்ச்சி ஏற்பட்டு மீண்டும் பிரச்சனை தலை தூக்கியது. இந்த பிரச்சனை 20-ஆம் நூற்றாண்டுகளில் தொடர்ந்து கொண்டே இருந்தது.


சுதந்திர இந்தியாவில் அயோத்தி நில பிரச்சினை:

1970-ஆம் ஆண்டில் அயோத்தி விவகாரம் இந்திய அரசாங்கத்தாரின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது. பழங்கால இராமரின் அரண்மனையை இடித்து அதன் மேல் தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று இந்துக்களும், பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கு எந்த விதமான கோவிலும் இல்லை என்று இஸ்லாமியர்களும் அவரவர் கருத்துகளை முன் வைத்தனர். வழக்கை தீர விசாரித்த நீதிபதி, அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருக்கும் இடத்தில் அகழாய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். அகழாய்வு முடிவில், பாபர் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன் வேறு ஏதோ ஒரு கட்டிடக்கலை இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தனர்.


மசூதி இடிப்பு:

பிரச்சனைகளும் வழக்குகளும் ஒரு புறம் போய்க்கொண்டிருக்க 1992-ஆம் ஆண்டு, இந்துக்கள் சிலர் ஒன்றிணைந்து பாபர் மசூதியை மொத்தமாக இடித்து விட்டனர். இஸ்லாமியர்களின் ஆத்திரம் மேலும் தூண்டப்பட்டது. இதனால் 1992-ஆம் ஆண்டு மீண்டும் அந்த இடத்தில் அகழாய்வு மேற்கொள்ள அரசாங்கம் உத்தரவிட்டது. 1970-ஆம் ஆண்டு கிடைத்த விபரங்களே இம்முறையும் கிடைத்தன.


அயோத்தி நிலம் இரு தரப்பினருக்கும் சொந்தம் இல்லை:

இப்படியே நாட்கள் செல்ல, 2003 ஆம் ஆண்டு மீண்டும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள அரங்சாங்கத்தின் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசாணையின் படி அகழாய்வு நடைபெற்றது. அகழாய்வின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பே அங்கு வேறு ஒரு கட்டிட அமைப்பு இருந்ததற்கான சான்று நிரூபிக்கப்பட்டது. மேலும், அழிந்த அந்த அமைப்பு இஸ்லாமிய கட்டிடக்கலையை ஒத்ததாக இல்லை என்றும் நிரூபிக்கப்பட்டிருந்தது.

இதனால் இந்த இடம் இந்துக்களுக்குச் சொந்தமானது என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்ற போதிலும், இந்த இடம் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான இடம் இல்லை என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.


அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு:

எனவே, இராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியின் 2.77 ஏக்கர் நிலமானது மூன்று பங்காக பிரிக்கப்பட வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதி மன்றமானது செப்டம்பர்த் திங்கள் 30-ஆம் நாள் 2010-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. மேலும், அந்த இடத்தில் மூன்றில் ஒரு பங்கானது, இராமர் கோவில் கட்டுவதற்காகவும்; மற்றொரு பங்கானது, பாபர் மசூதியைக் கட்டுவதற்காகவும்; மீதமுள்ள பங்கானது, நிர்மோகி அஹாரா சங்கத்திற்கும் பிரித்து அளிக்கப்பட வேண்டும் என்றும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்த தீர்ப்பில் எந்த குழுவினருக்கும் உடன்பாடு இல்லை. இந்த தீர்ப்பு அனைவராலும் எதிர்க்கப்பட்டது. இதனால் அயோத்தி வழக்கு முற்று பெறாமலேயே இருந்தது.


உச்சநீதிமன்றம் விசாரணை:

னவரித் திங்கள் 27-ஆம் நாள் 2013-ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம், அயோத்தி இராமர் கோவில் சம்பந்தமான இந்த வழக்கை விசாரித்தது. விசாரணையின் முடிவில், அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தின் மொத்த பொறுப்பையும் அயோத்தி அமைந்துள்ள மாநிலமான உத்திர பிரதேச அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது. மேற்கொண்டு தீர்ப்புகளையும் ஒத்தி வைத்தது.


மார்ச்சுத் திங்கள் 8-ஆம் நாள் 2019-ஆம் ஆண்டு, ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு ஒன்று பைசாபாத்தில் தங்கி இருந்து அயோத்தி வழக்கை விசாரித்து சமாதானம் பேச சென்றது. பக்கிர் மொஹமது இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான குழுவில், தலைமை நீதிபதி ஶ்ரீராம் பஞ்சு மற்றும் வாழும் கலை சங்கத்தின் நிறுவரான ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கரும் இருந்தனர். அனைத்துத் தரப்பினரின் வாதங்களையும் விசாரித்து, விசாரணை அறிக்கையை எட்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று குழுவினருக்கு உச்ச நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது.


அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு:

உத்தரவின் படி வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு, வழக்கின் தீர்ப்பை நவம்பர்த் திங்கள் 9-ஆம் நாள் 2019-ஆம் ஆண்டு அறிவித்தது. இக்குழுவிற்கு, நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமை வகித்தார்.

விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் படி, அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடமானது இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானதல்ல என்பது நிரூபனமானது. மேலும், இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் கீழ், இஸ்லாமிய கட்டிடக் கலையை ஒத்தாக அல்லாத ஒரு கட்டிட அமைப்பு இருந்ததும் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அயோத்தியில் பிரச்சனைக்குரிய இடமாக இருந்த 2.77 ஏக்கர் நிலமும் இஸலாமியர்களுக்குச் சொந்தமானது அல்ல என்றும் அந்த இடத்திற்கு இஸ்லாமியர்கள் உரிமை கேட்கக் கூடாது என்றும் கூறினர். மேலும், அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் முழுவதும் இராமர் கோவிலைக் கட்டுவதற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அயோத்தியில் வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் இஸ்லாமியர்கள் பாபர் மசூதியைக் கட்டுவதற்காக வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர். மேலும், அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்திற்கு உர்மை கோரி சன்னி வாக் சங்கம் மற்றும் நிர்மோகி அஹோரா சங்கம் தொடுத்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாது, அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் குழந்தை இராமர் கோவிலை மூன்று மாதங்களுக்குள் கட்டவும் உத்தரவிட்டது.

நீதிபதி குழுவின் இந்த தீர்ப்பு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அயோத்தியில் இராமர் கோவில் கட்டும் பணியை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கமான, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா சங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.


ராமர் கோவில் அடிக்கல் நாட்டுதல்:

ஆகத்துத் திங்கள் 5-ஆம் நாள் 2020-ஆம் ஆண்டு அயோத்தியில் இராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோவிலுக்கு அடிக்கல் நாட்டி, இராமர் கோவில் கட்டும் பணியைத் துவக்கி வைத்தார். இராமர் கோவிலின் அடிக்கல் நாட்டும் விழாவிற்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். 

இந்த கட்டுரையில் அயோத்தி அமைந்துள்ள இடம் ,ராமர் வரலாறு ,பாபர் வரலாறு, பாபர் மசூதி உருவாக்கம், இந்து-முஸ்லிம் இடையேயான நிலப் பிரச்சனை, பாபர் மசூதி இடிப்பு ,அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள், நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் இறுதியாக அடிக்கல் நாட்டு விழா போன்ற அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளோம். மேலும் இதுபன்ற சுவாரசியமான பல பதிவுகளை காண நோட்டிபிகேஷன் பட்டனை கிளிக் பண்ணுங்க.

தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக.

RiyAshoK shades

மேலும் படிக்க ,

நீங்கள் எங்களைப் டுவிட்டரில் பின் தொடரலாம். கமெண்டில் கேட்கப்படும் சந்தேகங்களுக்கு அது தொடர்பான பதிவுகள் வெளியிடப்படும்.


Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Tamil kavithai collection for all relationship

News paper, hope, god Tamil kavithai