1000 கோடி ஊழல் PM kissan திட்டம் முறைகேடு
- Get link
- X
- Other Apps
பிரதமரின் கிசான் திட்டத்தில் ஊழல் ? விவசாயம் அல்லாதவர்கள் திட்டத்தில் இணைந்து எப்படி ?
பிரதமரின் கிசான் திட்டம் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6000 ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வந்தது. இந்த உதவித்தொகை கிசான் திட்டத்தில் இணைந்து உள்ள விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும்.
கிசான் திட்டத்தில் இணைய முதல் தகுதி விவசாயியாக இருக்க வேண்டும். விவசாய நிலம் உள்ளவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற முடியும். விவசாயிகள் வைத்துள்ள நிலத்தின் அதிகபட்ச வரம்பு விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். கிசான் திட்டத்தில் இணையும்போது விவசாயி பற்றிய அனைத்து தகவல்களையும் விவசாய நிலங்களையும் உள்ளீடு செய்தால் மட்டுமே இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற முடியும்.
எளிமையான விண்ணப்பிக்கும் வசதி:
கிசான் திட்டத்திற்கு என தனியாக வலைதளம் உள்ளது. இதில் விவசாயிகள் தாமாக தங்களது தகவல்களை பதிவேற்றி விண்ணப்பித்துக் கொள்ள முடியும். இந்தத் திட்டம் மிகவும் வெளிப்படை தன்மையானது நாம் விண்ணப்பித்த படிவத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும். இதுமட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எத்தனை விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர் என்பது குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும்.
இவ்வளவு பாதுகாப்பான வெளிப்படைத்தன்மை உடைய திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இந்த ஊழல் காரணமாக பல விவசாயிகள் தங்கள் உதவித்தொகையை இழந்துள்ளனர். உதவித்தொகை கிடைக்காத விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை அணுகி முறையிட்டுள்ளனர்.
விவசாயிகள் பிரதமருக்கு கடிதம்:
பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயம் அல்லாதவர்கள் முறைகேடாக இணைந்து பயன்பெற்றுள்ளனர். கடந்த மாதம் உதவித்தொகை அவர்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளது. இதனையடுத்து விவசாயிகள் பிரதமருக்கு முறைகேடு தொடர்பாக கடிதம் எழுதியுள்ளனர்.
முறைகேடு புகாரில் குற்றவாளிகள் சிக்கியது எப்படி ?
தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் புதிதாக கிசான் திட்டத்தில் இணைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து சந்தேகம் எழத்தொடங்கியது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணையில் மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள இ சேவை மையத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு முறைகேடாக பல லட்சம் பேரை இந்த திட்டத்தில் இணைத்தது தெரியவந்துள்ளது.
இதில் விவசாயம் அல்லாதவர்கள், விவசாய கூலிகள் போன்ற பலர் முறைகேடாக இணைந்துள்ளனர். இவர்களிடமிருந்து வேளாண்மை துறை துணை மற்றும் உதவி இயக்குனர்கள் ஆயிரம் கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களை இணைத்தது தெரியவந்துள்ளது.
முறைகேடாக கிசான் திட்டத்தில் இணைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர்.
எந்தெந்த மாவட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது ?
கடலூர் , கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக அளவில் விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்ததால் சந்தேகம் எழத் தொடங்கியது.
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் உள்ள விவசாயம் அல்லாதவர்கள் முறைகேடாக இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற்றுள்ளனர்.
தற்காலிகமாக திட்டத்தின் இணையதளம் இந்த 14 மாவட்டங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை:
திட்டத்தைப் பற்றிய முழு விபரங்கள் தெரியாமல் இடைத்தரகர்களை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சிலர் பணம் வாங்கி தருவதாக கூறி இதுபோன்ற முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களிடமிருந்து விழிப்புடன் இருக்குமாறு மக்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.
அரசை ஏமாற்றி திட்டத்தில் இணைந்து பயன்பெறுவதும் குற்றமாகும்.
தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக. எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க,
40 வருடங்களுக்கு ஒரு முறை காட்சிதரும் அற்புத கடவுள்.....
உங்க போன் ஆபத்தில் உள்ளதா பிராசசர் செக்யூரிட்டி வார்னிங்.....
D614g வகை புதிய வைரஸ் பற்றி தெரியுமா ? கொரானாவை விட 10 மடங்கு வேகமாக பரவும்....
இ பாஸ் நடைமுறை மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு என்ன ?...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.