Android Qualcomm security warning in tamil
- Get link
- X
- Other Apps
குவால்காம் ஸ்னாப்ட்ராகன் ப்ராசசர் ல் பாதுகாப்பு குறைபாடா ?....நீங்கள் என்ன மொபைல்போன் பயன்படுத்துரிங்க ?...உங்கள் மொபைல்போன் பாதுகாப்பாகதான் இருக்கா ?....என்ன என் மொபைல்போன் என்னை கண்காணிக்கிறதா ?.... இந்த மொபைல்போன் வரிசையில் உங்கள் மொபைல்போன் உள்ளதா ?...வாங்க பார்க்கலாம்...
எல்லாரும் மொபைல்போன் பயன்படுத்துறோம் அதில் உள்ள processor பற்றி தெரியுமா?... Qualcomm snapdragon chip என்ற processor பயன்படுத்தப்படும் முன்னனி நிறுவனங்களின் மொபைல்போன்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக check point எனப்படும் cyber security solutions expert ஆய்வு செய்து கூறியுள்ளனர்.
இந்த வரிசையில் Oppo, Vivo, Xiaomi, LG, Samsung, Nokia, OnePlus, Google பல முன்னனி நிறுவனங்களின் மொபைல்போன்கள் உள்ளன இதில் உங்கள் மொபைல்போன் உள்ளதா என்று பாருங்கள்.
Qualcomm snapdragon chip ல் என்ன பிரச்சனை?
Qualcomm ஒரு முன்னனி நிறுவனம் இது மொபைல்போன் நிறுவனங்களுக்கு தேவையான processor யை தயாரித்து கொடுக்கிறது.
DSP எனப்படும் digital signal processor ல் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதன் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் புரிந்துகொள்வதற்கு கடினமாக உள்ளதால் இதனை சரிசெய்ய வழி கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கான அப்டேட் வெளியிட Qualcomm மற்றும் மொபைல்போன் நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அப்டேட் கிடைக்கும் வரை உங்களை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Qualcomm snapdragon ல் குறைபாடு உள்ள சிப் என்னவா இருக்கும்?
- இதில் snapdragon 845, snapdragon 855, snapdragon 730, snapdragon 710, snapdragon 675 மற்றும் பலவற்றை தாக்கியுள்ளது.
எவ்வளவு மொபைல்போன் பாதிக்கப்பட்டிருக்கும்?
- ஒட்டுமொத்த மொபைல்போன்களில் 40% பாதிக்கப்பட்டிருக்கலாம்.
- கூகுள் தகவல் படி 2.5 பில்லியன் ஆன்ட்ராய்டு மொபைல்போன் உபயோகத்தில் உள்ளது ( ஏப்ரல் 2019 ).
எப்படி ஹேக் செய்யப்படுகிறது உங்கள் ஆன்ட்ராய்டு மொபைல்போன் ?
ஆன்ட்ராய்டு மொபைல்போன்களை ஹேக் செய்ய ஏதாவது ஒரு கருவியை பயன்படுத்துவார்கள் அல்லது பயன்பாட்டாளரிடம் இருந்து அக்சஸ் பெறுவர்.
ஆனால் இந்த processor பயன்படுத்தப்படும் ஆன்ட்ராய்டு மொபைல்போன்களில் எந்தவித அக்சஸ் இன்றி நமக்கு தெரியாமல் நம்முடைய தகவல்களை திருடிவிட முடியும் என்பது தான் அதிர்ச்சியான செய்தி. ஏற்கனவே இதில் பலருடைய தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம்.
என் ஆன்ட்ராய்டு மொபைல்போனில் திருட ஏதும் இல்லை என்று நினைப்பவரா நீங்கள்?
மிகவும் மோசமான நிலையில் உள்ளவர் நீங்கள் தான். இணையதள பாதுகாப்பு குறித்து அரசு மேற்கொள்ளும் பாதுகாப்பை பற்றி அறியாமல் உள்ளீர்கள். உங்களை போன்று அலட்சியமாக உள்ளவர்களால் தான் இவ்வளவு திருட்டுகள் நிகழ்கிறது.
இந்த பாதுகாப்பு குறைபாடு மூலம் உங்கள் இருப்பிடம், நண்பர்களின் செல்போன் நம்பர், உங்கள் வங்கி கணக்கு, மைக் கட்டுப்பாடு, இன்னும் பல தகவல்களை திருடிவிட முடியும்.
இதைவிட எளிமையாக சொல்ல வேண்டுமானால் உங்கள் ஆன்ட்ராய்டு மொபைல்போன் உங்களை கண்காணிக்கும் சாதனமாக செயல்படும்.
என்னென்ன ஆன்ட்ராய்டு மொபைல்போன்கள் பாதிக்கப்பட்டுள்ளது?
Google ஆன்ட்ராய்டு மொபைல்போன்கள்:
- Google pixel 3,
- Google pixel 3XL
- Google pixel 3A XL
- Google pixel 3A
Oneplus ஆன்ட்ராய்டு மொபைல்போன்கள்:
- OnePlus 7,
- OnePlus 7 pro,
- OnePlus 6T,
- OnePlus 6
Samsung ஆன்ட்ராய்டு மொபைல்போன்கள்:
- Samsung A70,
- Samsung M40
Vivo ஆன்ட்ராய்டு மொபைல்போன்கள்:
- Vivo V15 pro,
- Vivo Z1 pro,
- Vivo Nex
Nokia ஆன்ட்ராய்டு மொபைல்போன்கள்:
- Nokia 8 sirocco,
- Nokia 8.1,
- Nokia 6.1 plus
LG ஆன்ட்ராய்டு மொபைல்போன்கள்:
- LG V30 plus,
- LG G7,
- LG ThinQ
Asus ஆன்ட்ராய்டு மொபைல்போன்கள்:
- Asus max pro M2,
- Asus max pro M1,
- Asus Zenfone 5Z,
- Asus Zenfone 6Z
Oppo ஆன்ட்ராய்டு மொபைல்போன்கள்:
- Oppo R17 pro,
- Oppo Reno,
- Realme X
Xiaomi ஆன்ட்ராய்டு மொபைல்போன்கள்:
- Redmi K20 pro,
- Mi A2,
- Redmi note 7 pro,
- Redmi 6 pro,
- Redmi K20,
- Redmi note 5 pro,
- Xiaomi poco F1,
- Black shark 2
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரே வழி குறைபாட்டை ஆன்ட்ராய்டு மொபைல்போன் நிறுவனங்கள் சரிசெய்வதுதான். சரிசெய்யப்பட்ட புதிய அப்டேட் வரும்போது பதிவிரக்கம் செய்துகொள்ளுங்கள்.
தற்காலிகமாக பாதுகாத்துக்கொள்ள
- தவறான வலைதளங்களை பயன்படுத்தாதீர்கள்.
- ஆன்லைன் பணபரிவர்த்தனையில் கவனமாக இருங்கள்.
- ஆபத்தான மற்றும் பாதுகாப்பு குறைபாடுள்ள செயலிகளை பயன்படுத்தாதீர்கள்.
- பாதுகாப்பு தொடர்பான செய்திகளை செக்பாய்ன்ட் போன்ற வலைதளங்களில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த பதிவு பாதுகாப்பு தொடர்பான செய்திகளை அனைவரும் தெரிந்துகொள்ள உருவாக்கப்பட்டது உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் உங்கள்
Read more,
- Social media awareness series 1
- Social media awareness series 2
- Social media awareness series 3
- EIA draft 2020 details
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.