வணக்கம் நண்பர்களே வலைதள விழிப்புணர்வு பகுதி 3ல் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு முந்தைய பகுதிகளில் வலைதள பயன்பாடு, பெற்றோர்கள் வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது, வலைதள பாதிப்பு, குழந்தைகளை கையாலுதல் போன்ற பயனுள்ள தகவல்களை கொடுத்துள்ளோம் அவற்றை படித்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மாணவர்கள் இணையவழியில் கல்வி கற்கும் இந்த வேளையில் அவர்களின் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்வது பெற்றோர்கள் கடமை. மாணவர்கள் தங்கள் வகுப்பை தொடங்கும்போது பெற்றோரும் உடன் இருக்க வேண்டும்.
இணையதள விளம்பரங்கள்:
இணையதளத்தில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களை பார்த்து இருப்பீர்கள். ஒரு இணையதளத்தின் லாப நோக்கத்திற்காக அவை ஒளிபரப்பப்படுகிறது.
இதில் சில விளம்பரங்களில் தவறான காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அவற்றை பார்க்கும் குழந்தைகள் மனதில் தவறான எண்ணங்கள் தோன்றும்.
சில விளம்பரங்கள் உங்களை கட்டாயமாக பார்க்க வைக்கும் இதனை நீங்கள் தடுக்க இயலாது. இத்தகைய விளம்பரங்கள் வலைதளத்தில் இருந்து நீங்கள் வெளியேற அனுமதிக்காது.
சில விளம்பரங்களை நீங்கள் தெரியாமல் தொடுவதால் உங்கள் வங்கிக் கணக்கு விவரம், அந்தரங்க தகவல்களை திருடி உங்களை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடும்.
விளம்பரங்கள் பற்றி மேலே கூறியுள்ள செய்திகள் மூலம் இது எவ்வளவு ஆபத்தானது என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.
சில தடுக்கும் வழிகள்:
- நம்பிக்கையான பெரிய நிறுவனங்களின் செயலிகளை பயன்படுத்துங்கள்.
- தேவையற்ற லிங்க் யை பயன்படுத்தாதீர்கள்.
- குழந்தைகளிடம் செல்போன் தரும்போது அவர்களின் அருகில் இருங்கள்.
- செயலியை பதிவேற்றும்போது தேவையற்றவைக்கு அனுமதி வழங்காதீர்கள்.
- பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட செயலிகளை பயன்படுத்துங்கள்.
- விளம்பரங்களை தொட்டதால் உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டால் வங்கி மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுங்கள்.
மன சோர்வு:
தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளின் மனம் சோர்வடைகிறது. இந்த சோர்வு அவர்களின் கற்றல் செயல்பாடுகளை குறைக்கிறது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் விளையாட்டு செயல்பாடுகளில் பின்னடைவு தருகிறது.
ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருப்பதால் உடல் எடை அதிகரித்து நோய்த்தொற்று ஏற்பட வழிவகுக்கிறது. இது நமக்கும் நம் சந்ததியின் எதிர்காலத்திற்கும் நன்மை அல்ல. படிக்கும் குழந்தைகள் மனம் சோர்வு அடைவது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆபத்தை கொடுக்கும்.
மனச்சோர்வை நீக்க சில வழிகள்:
- இணையதள வகுப்பு முடிந்தவுடன் செல்போனை அனைத்து விடுங்கள்.
- படிப்பது வரைவது போன்ற செயல்களில் ஈடுபாடு செலுத்துங்கள். வெளியே சென்று விளையாடுங்கள்.
- நன்னெறி கதைகள் புதிர்கள் போன்ற ஆர்வத்தை அதிகரிக்கும் புத்தகங்களை படிக்கலாம்.
- உடற்பயிற்சி செய்யுங்கள். மனதை ஒருநிலை படுத்த தியானம் செய்யுங்கள்.
- வீட்டில் உள்ளவர்களுடன் நன்றாக பேசுங்கள்.
- மேலே உள்ள செயல்களை பின்பற்றுவதால் குழந்தைகளின் மனச்சோர்வு நீங்கும்.
அத்தியாவசியமாகிய செல்போன்:
இன்றைய உலகில் நம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய செல்போனை பயன்பாடு தேவைப்படுகிறது. தொலைதூரத்தில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம் இன்று நம் அனைத்து தேவைகளையும் எளிமையாக்கிவிட்டது.
இந்த பயன்பாடே நம் செயல்களை கண்காணிக்கும் செல்போனை தூக்கி எறியவிடாமல் தடுக்கிறது. இன்றைய உலகில் தனிமனித தகவல் பாதுகாப்பு என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டது.
இத்தகைய சூழலில் செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது நம் தகவல்களை நாம் பாதுகாத்துக்கொள்ளும் வழி.
சமூக வலைதளங்களினால் சிறார்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்:
பச்சிளங்குழந்தை....
பால் பருகும்....
காலம் தொடங்கி....
பள்ளி சென்று....
பட்டம் பெற்று....
பால்யம் கடந்து....
படுத்த படுக்கையாகி....
பாடையில் செல்லும்....
காலம் லரை....
மனதில்....
தன்னம்பிக்கை....
இருக்கிறதோ....
இல்லையோ....
கையில்....
அலைபேசி....
எல்லோரிடமும் இருக்கிறது....
காலம் மாறிவிட்டதென்று சொல்லும்....
இக்கால பெற்றோர்கள்....
பிள்ளைகளின் கைகளில்....
அலைபேசி கொடுப்பதன் மூலம்....
தங்கள் பிள்ளைகளின்....
வாழ்க்கையின் வழித்தடமே....
மாறுகின்றதென்று....
உணரத் தவறுகின்றனர்....
சமூக வலைதளங்களில்....
நேரம் செலவிடும் பிள்ளைகளை....
அவர்களின் மீது....
நாம் நம்....
கவனத்தை செலுத்தி....
அவர்களின் வாழ்வை....
வளம்பெறச் செய்வோம்....
வளரும் இளம்பிஞ்சுகளைக்....
காப்போம்....
இந்த கவிதை வரிகள் ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை செல்போன் பயன்படுத்துகின்றனர் என்பதை அருமையாக கூறியுள்ளார் கவிஞர். குழந்தைகளிடம் செல்போன் தருவதை தவிர்க்க வேண்டும் இல்லையேல் அவர்களின் வாழ்க்கை தடம் மாறிப்போகும் என்பதை கூறுகிறார்.
இன்று இணையத்தில் கல்வி கற்கும் சூழல் உருவாகியுள்ளதால் செல்போன் பயன்பாடு மேலும் அதிகரித்துள்ளது. இது கல்விக்கு அத்தியாவசிமாதலால் இதனை தவிர்க்க முடியாது. பாதுகாப்பாக பயன்படுத்துவது மூலம் மட்டுமே இணையதள தீமைகளில் இருந்து உங்களையும் உங்கள் குழந்தைகளையும் காக்கும்.
"விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் இளைய தலைமுறை காப்போம்"
தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக. எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.