Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

EIA 2020 India trends in tamil

வணக்கம் நண்பர்களே, சூழல் தாக்க மதிப்பாய்வு 2020 வரைவு பற்றிய செய்தியை கேட்டிருப்பீர்கள். சூழல் தாக்க மதிப்பாய்வு என்றால் என்ன?... ஏன் நாம் அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வினா உங்கள் மனதில் எழலாம். இந்த பதிவு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சூழல் தாக்க மதிப்பாய்வு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வெளியிடுகிறோம்.

சூழல் அறிவியல்

  • சூழலியல் காரணிகளால், மனித உடல் நலத்தில் ஏற்படும் தாக்கங்களை பற்றி அறிய செல்வழிப் பகுப்பாய்வு என்ற முறையை ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு முகமை பயன்படுத்தியது.
  • இந்த பகுப்பாய்வு தொழில்நுட்பம் சூழல் அறிவியல் எனப்பட்டது.

சூழல் தாக்க மதிப்பாய்வு ( EIA-Environmental Impact Assessment ) தோற்றம்

  • சுற்றுச்சூழலை பாதுக்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் உடனடி தோற்றத்திற்கு காரணம் போபால் விஷவாயு கசிவு விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவம். இது மக்கள் மனதில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியது. 
  • சூழல் தாக்க மதிப்பாய்வு 1994 ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது. 
  • 1994 முதல் 2006 வரை சூழல் தாக்க மதிப்பாய்வு எந்த திட்டத்தையும் தடுக்கவில்லை. 
  • 2006 ஆம் ஆண்டு இதில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

சூழல் தாக்க மதிப்பாய்வு என்றால் என்ன?

  • இது மனிதனுடைய சூழல்சார் உடல் நலத்தில் ஏற்படக்கூடிய தாக்கம், வாழ்சூழல் நலம் மற்றும் இயற்கையின் சேவைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகியவற்றில் ஒரு திட்டத்தினால்(தொழிற்சாலை,அணை,...) ஏற்படும் தாக்கங்களை மதிப்பாய்வு செய்தல். 
  • ஒரு திட்டத்தை முன்னெடுப்பவர்கள் அதனால் ஏற்படும் தாக்கத்தை கவனத்தில் கொள்ள உதவுவதற்காக இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

முன்னனித் தாக்கம் ஏற்படுவதற்கான வழிகள்

  • மண் மாசடைதல் தாக்கம்
  • வளி மாசடைதல் தாக்கம்
  • சத்தம் சார் உடல்நலத் தாக்கம்
  • நீர் மாசடைதல் தாக்கம்
  • வாழ்சூழலில் ஏற்படும் தாக்கம்
  1. அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள் தொடர்பான தாக்க ங்கள்.
  2. நிலவியல் ஆபத்துகள் மதிப்பாய்வு.

சூழல் தாக்க மதிப்பாய்வு 2006

திட்டங்களின் வகைபாடு
அனைத்து திட்டங்களும் இடம்சார்ந்த விரிவாக்க விளைவு , இயற்கை, மனித உற்பத்தி பொருட்கள் மற்றும் மனித நலம் சார்ந்து இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.

திட்டம் A வகை

  • சூழல் தாக்க மதிப்பாய்வு சான்று கட்டாயமாக வேண்டும்.
  • மத்திய அரசு மதிப்பாய்வு சான்று வழங்கும்.

திட்டம் B வகை

  • மாநில அரசு மதிப்பாய்வு சான்று வழங்கும்.
  • B1- மதிப்பாய்வு சான்று கட்டாயமாக வேண்டும்.
  • B2- மதிப்பாய்வு சான்று கட்டாயமில்லை.

சூழல் தாக்க மதிப்பாய்வு படிநிலைகள்

  1. திட்டங்களை அதன் தன்மையை பொருத்து வகைபடுத்துதல்.
  2. சூழல் தாக்க மதிப்பாய்வு அறிக்கையை ஆய்வு செய்து தயாரித்தல்.
  3. பொதுமக்கள் கேட்பு குழு 
  • தொழிற்சாலை அமையவுள்ள இடத்தில் உள்ள மக்களிடம் தொழிற்சாலை பற்றிய விவரங்களை எடுத்து கூற வேண்டும். 
  • அவர்களின் சந்தேகங்களை விளக்க வேண்டும் அவர்களின் கேள்விக்கு பதில் கூற வேண்டும். 
  • தொழிற்சாலையின் அமைப்பு, தயாரிக்கும் பொருட்கள், கழிவுகளை அப்புறப்படுத்தும் நடைமுறை ஆகியவற்றை விரிவாக அப்பகுதி மக்களிடம் கூறி தெரிவிக்க வேண்டும்.
  • இந்த கூட்டத்தில் அனைத்து மக்களும் தங்களது கருத்துகளை கூறலாம்.
  • இந்த பொதுமக்கள் கேட்பு குழுவுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்குவார், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர்கள், வட்டார அலுவலர், கிராம சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொள்வார்கள்.
  • இந்த பொதுமக்கள் கேட்பு குழு கூட்டம் 30 நாட்கள் நடைபெறும்.

சூழல் தாக்க மதிப்பாய்வு 2020 வரைவு

சூழல் தாக்க மதிப்பாய்வு 2020 நன்மை

  • வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகள் ஈர்க்கப்படும்.
  • வேலைவாய்ப்பு கிடைக்கும்.
  • பொருளாதாரம் அதிகரிக்கும்.

திட்டங்கள் வகைபாடு மத்திய மற்றும் மாநில குழு என்ற வகைபாடு தற்போது நடைமுறையில் உள்ளது.

புதிய வரைவின்படி இரண்டு அனுமதி வழங்கப்படுகிறது. 

  • வல்லுநர் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தி பின்னர் சூழலியல் அனுமதி வழங்குவது.
  • வல்லுநர் குழு ஆய்வு ஏதும் இன்றி அனுமதி வழங்குவது.
இது மக்கள் நலனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதன் பாதிப்பை கூறுகின்றனர்.

பொதுமக்கள் கேட்பு குழு கூட்டம்

  • தற்போதைய சூழல் தாக்க மதிப்பாய்வு படி 30 நாட்கள் கூட்டம் நடைபெறும்.
  • புதிய வரைவின்படி இது 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இது மக்கள் திட்டங்களை பற்றி புரிந்துகொள்ள தேவைப்படும் நேரத்தை குறைக்கிறது. 

சூழல் தாக்க மதிப்பாய்வு புதுப்பித்தல்

  • தற்போதைய சூழல் தாக்க மதிப்பாய்வு படி 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.
  • புதிய வரைவின்படி வருடத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்து அறிக்கையை சமர்பித்தால் போதும்.
நீண்ட காலதாமதம் காரணமாக பாதிப்புகளை கண்டறிந்து தடுக்க இயலாது.

மேலும் சில தீமைகள்

  • சதுப்பு நில காடுகளில் மணல் போட்டு சமன்படுத்த அனுமதி.
  • இதற்கு சூழலியல் தாக்க மதிப்பாய்வு செய்ய வேண்டியதில்லை.
  • வறண்ட புல்வெளிக் காடுகள் இந்த சட்ட வரைவினால் தரிசு நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • பாதுகாப்பிற்காக அரசு கொண்டுவரும் திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படாது.
  • அரசின் திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கு எதிரானது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பக்கூடாது.
  • பாதுகாப்பிற்காக அரசு கொண்டுவரும் திட்டங்களை பொதுமக்கள் எதிர்க்க கூடாது.
இந்த புதிய வரைவில் உள்ள திருத்தங்கள் சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தையும் பறிப்பதாக உள்ளது. திட்டங்கள் பற்றி மக்களுக்கு தெரிய வேண்டும். 

மக்களுக்கு கருத்து சுதந்திரம் வேண்டும் என்ற நோக்கத்தில் நீதிமன்றம் பொதுமக்கள் கருத்துகளை கேட்கும் தேதியை ஆகத்து 11 வரை நீட்டித்துள்ளது. வருங்கால தலைமுறை உயிரை காக்க கடைசி வாய்ப்பு இதுவே. 

இந்த புதிய சட்ட வரைவினால் பல்வேறு திட்டங்கள் பொதுமக்கள் கருத்து கேட்பு இன்றி அமல்படுத்தப்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க உங்கள் கருத்துகளை eia2020-moefcc@gov.in இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

அனைத்து மக்களும் இதனை அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் விழிப்புணர்வு பதிவை வெளியிடுகிறோம்.

தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக. எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

RiyAshok shades

மேலும் படிக்க,



Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Anti-Child labor drawing