வணக்கம் நண்பர்களே, உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கானதே தொடர்ந்து படியுங்கள். சமூக வலைதள பயன்பாடு, பயன்படுத்தும் விதம், குழந்தைகளின் பாதுகாப்பு, தனிமனித பாதுகாப்பு, சமூக வலைதள நன்மை மற்றும் தீமைகளை ஒரு தொடர் கட்டுரையாக வெளியிடுகிறோம். இதன் நோக்கம் நல்ல செய்திகள் குழந்தைகளிடம் சென்று சேரவேண்டும் என்பதே.
சமூக வலைதளம்:
ஒரு செய்தியை தனி ஒருவருக்கு மட்டுமல்லாது உலகிலுள்ள அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் செயலி ஆகும். இது பொதுநோக்கத்துடன் தகவல்களை பரிமாற்ற உருவாக்கப்பட்டது. இதனை தவறான வழியில் பயன்படுத்துவோரும் இருக்க தான் செய்கிறார்கள்.
சமூக வலைதள பயன்பாடு:
நாம் பதிவிடும் தகவல்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதுமுள்ள அனைவரையும் சென்று சேர்கிறது. இதில் கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், செய்திகள், சமையல், ஆன்மீகம் போன்ற நல்ல பதிவுகள் நிறைய உள்ளன.
நமக்கு தெரியாத விஷயங்களை சமூக வலைதளங்களில் தேடி கற்று கொள்கிறோம் இது ஒரு நல்ல ஆசிரியராக செயல்படுகிறது. பலர் சமூக வலைதளங்களை தங்களின் வியாபார விளம்பரங்களுக்காக பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற சமூக வலைதள பயன்பாடுகள் ஏராளம்.
இப்போது மாணவர்கள் கல்வி கற்க இணையதள பயன்பாடு இன்றியமையாததாகிவிட்டது. மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள பல இணையதளங்கள் உதவிபுரிகின்றன இதில் அவர்கள் அறிவை வளர்க்க புதிய தகவல்களை கற்றுக்கொள்கின்றனர்.
சமூக வலைதள தவறான பயன்பாடு:
வியாபார விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்படும் ஆபாசமான காட்சிகள் குழந்தைகள் மனநிலையை பாதிக்கின்றன. இது குழந்தைகளை தவறான பாதையில் அழைத்து செல்கிறது. இந்த எண்ணங்களை சரியாக கையாள மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரிவதில்லை.
சாதிய கருத்துகள் குழந்தைகளிடம் சமத்துவம் என்ற எண்ணத்தை மாற்றி அவர்களின் நற்குணங்களை கெடுக்கிறது. சமத்துவம் பற்றிய கருத்துகளை குழந்தைகள் மனதில் பதியவைக்க வேண்டும்.
தவறான பதிவுகளை நீக்கும் செயல்முறை:
1. For YouTube - Settings > General > Restricted mode > Enable.
2. For play store - Settings > Parental control > Enable control > Choose Pin > Re enter Pin > Select Your Children age content > Save.
(For more details read Parental guide in play store home page)
3. For Twitter - Settings > Privacy and safety > Safety > Search filters > Hide sensitive content > Enable.
4. For Facebook - Settings > Shortcuts > Parental tips.
சில செயலிகளை பெற்றோர்கள் கட்டுப்படுத்தும் முறையை மேலே கூறியுள்ளோம் படித்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
சமூக வலைதள தின கவிதை:
ஓடியாடி விளையாடிய....
காலமது....
நம் தலைமுறையோடு....
முடிந்து விட்டது....
உடலையும்....
மனதையும்....
அதன் போக்கில்....
அலைய விட்டு....
அமர்ந்த இடத்திலேயே....
அனைத்தையும்....
கற்றுக்கொள்கின்றனர்....
இக்கால தலைமுறையினர்....
அதிலும் பலர்....
தவறானவற்றையே....
அதிகம் கற்கின்றனர்....
வலை வீசி....
மீன் பிடிப்பர்....
ஆனால்....
இன்றைய சமூகமோ....
வலையை வீசி....
குழந்தைகளைத் தவறான வழியில்....
இட்டுச் செல்கிறது....
இந்த அவல நிலை மாறவே....
வழி செய்வோம்....
இன்றைய தலைமுறையினர் சமூக வலைதள பயன்பாட்டில் மூழ்கி உள்ளனர் என்பதை இந்த கவிதை வரிகள் உணர்த்துகிறது. சமூக வலைதள பயன்பாட்டினால் பல குழந்தைகளின் வாழ்க்கை இறையாக்கப்படுகிறது.
தினமும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை தடுக்க காவல்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் நம்மை பாதுகாத்து கொள்வது நம் கடமை.
சமூக வலைதளங்களில் முகம் தெரியாதவர்களுடன் பழகுவதை தவிருங்கள். பாதுகாப்பான செயலிகளை பயன்படுத்துங்கள். உங்களுக்கு தெரிந்த பாதுகாப்பு வழிகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
"விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் இளைய தலைமுறை காப்போம்"
என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் உங்கள் அசோக்.
தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக. இதன் தொடர்ச்சி விரைவில் வெளியிடப்படும். எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.