Posts

Showing posts with the label Awareness Tamil poem

Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

National home appliance assurance day awareness poem

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இன்று தேசிய வீட்டு உபயோக பொருட்கள் உத்திரவாத நாள் இந்த நன்னாளில் உத்திரவாதம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த எளிமையான ஒரு கவிதையை பதிவிடுகிறேன் பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் நன்றி. தேசிய வீட்டு உபயோக பொருட்கள் உத்திரவாத நாள் விழிப்புணர்வு கவிதை ( February 10 - National home appliances assurance day awareness poem) இரவில் கண்ட கனவுகள்... பகலில்... நிலைப்பதில்லை... வானில் வரும் நிலவு... காலையில்... தெரிவதில்லை... பகலில் உதிக்கும் சூரியன்... இரவில்... இருப்பதில்லை... பொய்யான உறவுகள்... இறுதிவரை... வருவதில்லை... சுவற்றில் எழுதிய எழுத்துகள்... அழியாமல்... பதிவதில்லை... கடற்கரையில் பதிந்த சுவடுகள்... அலைகள் தாண்டி... பிழைப்பதில்லை... வெயிலில் வைத்த நீர்... ஒருபோதும்... உறைவதில்லை... கவலை கொண்ட கண்கள்... காந்தமாய்... ஈர்ப்பதில்லை... உப்பு கூடிப்போன உணவு... நாவில்... ருசிப்பதில்லை... கோபம் கொண்ட உதடுகள்... நற்சொல்... உரைப்பதில்லை... காரம் மிகுந்த...

Safer internet day Tamil poem

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இன்று பாதுகாப்பான இணையதள நாள் இந்த நன்னாளில் பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்துவது குறித்த எளிமையான ஒரு கவிதையை பதிவிடுகிறேன் பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் நன்றி . பாதுகாப்பான இணையதள நாள்  ( safer internet day poem febuary- 6) மை தீட்டிய கண்கள்... தோடுகளுடன் கூடிய காதுகள்... சாயம் பூசிய உதடுகள்... மெஹந்தி நிரம்பிய கைகள்... வண்ணம் பூட்டிய நகங்கள்... பரப்பி விடப்பட்ட தலைமுடிகள்... இப்படி உடலின் ஒவ்வொரு அங்கமாய் புகைப்படம் எடுத்து... ஃபேஸ்புக்... வாட்ஸ்அப்... இன்ஸ்டாகிராம்... டுவிட்டர்... போன்ற அனைத்து தளங்களிலும் அப்லோட் செய்து... சோகத்தை டவுன்லோட் செய்வதைவிட... வாழ்க்கையை ரீலோட் செய்து... அதில் அன்பை அப்லோட் செய்து... நம்பிக்கையை டவுன்லோட் செய்தால்... வாழும் காலம் யாவும்... மகிழ்ச்சி ஃபுல் லோட் ஆகவே இருக்கும்... ஆகவே... வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்தி... வளமாய் வாழ்வோம்...! Poet - riyashok 

Social media awareness series 2

சமூக வலைதள விழிப்புணர்வு பகுதி 1 ன் தொடர்ச்சியை இந்த பக்கத்தில் காண்போம். முதல் பதிவில் சமூக வலைதள அறிமுகம், சமூக வலைதள நன்மை, சமூக வலைதள தீமைகள், பெற்றோர்கள் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை பார்த்தோம். இந்த பதிவில் குழந்தைகள் சமூக வலைதள பயன்பாட்டால் கல்வியை மறந்து செல்போனுக்கு அடிமையாவதை உருக்கமாக கவிஞர் கூறியுள்ளார்.  சமூக வலைதளத்தின் தீமைகள்: குழந்தைகளின் பிஞ்சு விரல்கள்.... தீண்டப்படாததால்.... வாழ்வை வெறுத்துப்.... பொலிவிழந்து காணப்படும்.... எழுதுகோல்.... தீண்டப்படும்.... அதே பிஞ்சு விரல்களுடன்.... அந்த பிஞ்சு மனங்களையும்.... பதம்பார்க்கும்.... சமூக வலைதளங்கள்.... வளர்ந்து கொண்டிருக்கும்.... வருங்கால சந்ததியைக் காப்பதுவும்.... நமது கடமையே.... கடமையை உணர்ந்து.... அனைவரும் ஒன்றிணைந்து.... செயல்படுவோம்.... சமூக வலைதள பாதிப்பை குறைக்க சில வழிகள்: 1. Parental control options பயன்படுத்துவது. 2. குழந்தைகள் கல்வி சம்பந்தமான தகவல்களை சேகரிக்க அவர்களுக்கு உதவுங்கள். 3. விளம்பரங்கள் அதிகம் இல்லாத பக்கங்களை படியுங்கள். 4. செல்போ...

Social media awareness series 1

வணக்கம் நண்பர்களே, உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கானதே தொடர்ந்து படியுங்கள். சமூக வலைதள பயன்பாடு, பயன்படுத்தும் விதம், குழந்தைகளின் பாதுகாப்பு, தனிமனித பாதுகாப்பு, சமூக வலைதள நன்மை மற்றும் தீமைகளை ஒரு தொடர் கட்டுரையாக வெளியிடுகிறோம். இதன் நோக்கம் நல்ல செய்திகள் குழந்தைகளிடம் சென்று சேரவேண்டும் என்பதே.  சமூக வலைதளம்: ஒரு செய்தியை தனி ஒருவருக்கு மட்டுமல்லாது உலகிலுள்ள அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் செயலி ஆகும். இது பொதுநோக்கத்துடன் தகவல்களை பரிமாற்ற உருவாக்கப்பட்டது. இதனை தவறான வழியில் பயன்படுத்துவோரும் இருக்க தான் செய்கிறார்கள். சமூக வலைதள பயன்பாடு: நாம் பதிவிடும் தகவல்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதுமுள்ள அனைவரையும் சென்று சேர்கிறது. இதில் கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், செய்திகள், சமையல், ஆன்மீகம் போன்ற நல்ல பதிவுகள் நிறைய உள்ளன.  நமக்கு தெரியாத விஷயங்களை சமூக வலைதளங்களில் தேடி கற்று கொள்கிறோம் இது ஒரு நல்ல ஆசிரியராக செயல்படுகிறது. பலர் சமூக வலைதளங்களை தங்களின் வியாபார விளம்பரங்களுக்காக பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற சமூக வலைதள...

Population Tamil poem

Image
மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்த்த கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளோம். அனைவரும் படித்து தங்கள் ஆதரவை தாருங்கள். உலக அளவில் மக்கள் தொகை அதிகரிப்பு முக்கிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இது அதிகப்படியான இயற்கை வளங்களை பயன்படுத்தி இயற்கை சமநிலையை சீர்குலைக்கிறது. இதனை நினைவில் கொள்ள உலக மக்கள் தொகை தினம் July 11 அன்று அனுசரிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகையில் சீனா , இந்தியா ,போன்ற நாடுகள் முன்னனியில் இருக்கின்றன.  அதிக மக்கள் தொகை வேலைவாய்ப்பின்மை , உணவுப்பொருள் தட்டுப்பாடு போன்றவற்றை அதிகரிக்கிறது. மக்கள் இருப்பிடத்திற்காக காடுகளையும் நீர்நிலைகளையும் அழிக்கின்றனர்.  அளவான குடும்பம் அளவில்லா மகிழ்ச்சி தரும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்... மக்கள்  தொகை தின தமிழ் கவிதை: population image from pixabay மக்கட்பேறு பல பெற்றார்.... நம் தாத்தா.... பெற்ற அனைவருக்குமே கொடுக்க.... அளவாக பொருளை ஈட்டினார்.... அளவாய் பிள்ளை பெற்று.... அளவுக்கு அதிகமாய்.... சேர்த்து வைக்கிறார்.... நம் தந்தை.... பொருள் ஈட்டவே நேரம் செலவழித்து.... பி...

International tiger day poem in tamil

Image
சர்வதேச புலிகள் தினம்  (national tigers day)-July 29 image from pixabay வணக்கம் நண்பர்களே சர்வதேச புலிகள் தினத்தில் அவற்றை பற்றிய சில தகவல்களை பார்ப்போம். புலி இந்திய நாட்டின் தேசிய விலங்கு (1973). புலிகளை பாதுகாக்க புலிகள் பாதுகாப்பு சட்டம் 1973 ல் உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் புலிகளின் பாதுகாப்புக்கு வழிவகை செய்கிறது. காடுகளில் உள்ள தாவர உண்ணிகள் தாவரங்களை முற்றிலும் அழிக்காமல் புலி பாதுகாக்கிறது. இது நமது உணவை தாவர உண்ணிகளிடம் இருந்து பாதுகாக்கும். உலகின் பல நாடுகளில் புலிகளை பாதுகாக்க வனப்பகுதிகள் பராமரிக்கப்படுகின்றன அவற்றிற்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம். சுதந்திரமாக காட்டில்.... சுற்றித் திரிந்தாய்.... அங்கே உனக்கான உணவை.... நீயே வேட்டையாடி உண்டாய்.... இன்றோ.... பேராசை மனிதர்களின் கைகளில்.... சிக்கிக் கொண்டு.... கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறாய்.... வரிப் பணத்தை.... சுரண்டித் திண்பவன்.... உன் வரியிட்ட உடலை.... பதம் பார்க்கிறான்.... உன் நிலை நோக்கி.... என் ஆழ்ந்த.... அனுதாபங்கள்.... தமிழகத்தில் புலிகளை பாதுகாக்க அதனை தத்தெடுத்து வளர்க்...

Selfie day poem in tamil

Image
தாமி தின கவிதை  (selfie day poem)  - June 21 image from pixabay வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் தாமி (selfie ) தினத்திற்கான சிறப்பு கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளோம். இதன் தவறான பயன்பாட்டால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் உயிரிழப்புகளை இந்த சிறு பதிவில் கூறியுள்ளோம்.  அதரம் முதல் அந்தரங்கம் வரை தாமி எடுத்தாய்.... எடுத்தவற்றை பத்திரமாய் பதுக்கி வைத்தாய்.... பாவியவன் (அலைபேசி) பாரெங்கும் பரப்பி விட்டான்..... தன்மானம் தவறவிட்டுத் தலை குனிந்தாய்.... தாமியினால் நீ செய்த குற்றமுணர்ந்தாய்.... அதன் விளைவாய்.... உயிர் தன்னை மாய்த்துக் கொண்டாய்.... தன்னுடலைத் தான் ரசிக்கத் தாமி எடுத்து உன் உருவப்படத்தை உன் வீட்டில் தொங்க வைத்து விட்டாய்..... உயிர் பறிக்கும் தாமியினை தள்ளி வைப்போம்.... ஓங்கி உயர்ந்து உள்ளம் தனை துள்ள வைப்போம்..... தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த வேளையில் அந்தரங்கங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அனைத்து செயலிகளையும் பாதுகாப்பாக பயன்படுத்துங்கள். அனைவரின் நலன் கருதி விழிப்புணர்வுக்காக இந்த பதிவை பதிவிடுகிறோம். தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக. எங்களை ட்...

Refugee day poem in tamil

Image
பிறந்த இடத்தையும் வளர்ந்த நாட்டையும் விட்டு வெளியேறும் உறுக்கமான மனதை கொண்ட புலம்பெயர்வோரின் நிலையை உணர்ந்து உதவிகரம் நீட்டுமாறு கவிஞர் இக்கவிதையை படைத்துள்ளார். சொந்த நாட்டில் இருந்து விரட்டப்பட்ட அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதை நம் கடமையாக குறிப்பிடுகிறார். இது ஈகை பண்பை நம்முள் வளர்க்கும்.  உலக அகதிகள் தின கவிதை ( June-20 ): special poem for refugee day அன்பென்னும் அடைமழையில்.... ஆனந்தமாய் நனைகின்றோம் நாம்..... இதே வேலையிலே.... அன்பு காட்ட ஒருவரும் இன்றி.... அரை உயிரைக் கையில் ஏந்தி..... அடுத்து வரும் சந்ததியைக் காக்க..... அண்டை நாட்டை.... அடைக்கலமாய் நாடும்.... அகதிகளின் நிலையறிந்து.... அவர்களுக்கு ஆதரவளிப்போம்.... தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக. எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும். RiyAshok shades மேலும் கவிதைகள் வாசிக்க , மக்கள்தொகை தினம் கவிதை  சர்வதேச புலிகள் தினம் கவிதை குழந்தைகள் தினம் சிறப்பு வரைபடம்  உலக சதுரங்க விளையாட்டு தினம் கவிதை