Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Social media awareness series 2

சமூக வலைதள விழிப்புணர்வு பகுதி 1 ன் தொடர்ச்சியை இந்த பக்கத்தில் காண்போம். முதல் பதிவில் சமூக வலைதள அறிமுகம், சமூக வலைதள நன்மை, சமூக வலைதள தீமைகள், பெற்றோர்கள் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை பார்த்தோம்.

இந்த பதிவில் குழந்தைகள் சமூக வலைதள பயன்பாட்டால் கல்வியை மறந்து செல்போனுக்கு அடிமையாவதை உருக்கமாக கவிஞர் கூறியுள்ளார். 

சமூக வலைதளத்தின் தீமைகள்:

குழந்தைகளின் பிஞ்சு விரல்கள்....
தீண்டப்படாததால்....
வாழ்வை வெறுத்துப்....
பொலிவிழந்து காணப்படும்....
எழுதுகோல்....
தீண்டப்படும்....
அதே பிஞ்சு விரல்களுடன்....
அந்த பிஞ்சு மனங்களையும்....
பதம்பார்க்கும்....
சமூக வலைதளங்கள்....
வளர்ந்து கொண்டிருக்கும்....
வருங்கால சந்ததியைக் காப்பதுவும்....
நமது கடமையே....
கடமையை உணர்ந்து....
அனைவரும் ஒன்றிணைந்து....
செயல்படுவோம்....

சமூக வலைதள பாதிப்பை குறைக்க சில வழிகள்:

1. Parental control options பயன்படுத்துவது.

2. குழந்தைகள் கல்வி சம்பந்தமான தகவல்களை சேகரிக்க அவர்களுக்கு உதவுங்கள்.

3. விளம்பரங்கள் அதிகம் இல்லாத பக்கங்களை படியுங்கள்.

4. செல்போன் password யை குழந்தைகளிம் சொல்லாதீர்கள்.

5. குழந்தைகளிடம் பேச நேரம் ஒதுக்குங்கள். அவர்கள் தனிமையை உணர்வதால் பொழுதுபோக்கு விஷயங்களில் அவர்கள் மனம் செல்கிறது.

6. செல்போன் பயன்படுத்தும் நேரத்தை நினைவுபடுத்தியில் நினைவுபடுத்த குறித்து வையுங்கள்.

மேலே கூறியுள்ளவற்றை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் குழந்தைகளின் மாற்றத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
என்றும் குழந்தைகள் நலனில் அக்கரை கொள்ளும் குழந்தை உள்ளம்.

"விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் இளைய தலைமுறை காப்போம்"

இதன் தொடர்ச்சி விரைவில் வெளியிடப்படும் தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக. எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Tamil kavithai collection for all relationship

News paper, hope, god Tamil kavithai