நண்பர்கள் தின கவிதை :
 |
friendship image from pixabay |
வணக்கம் நண்பர்களே, நானும் எனது நண்பனும் இணைந்து நண்பர்கள் தின கொண்டாட்டத்திற்காக கவிதை பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளோம். ஆகத்து முதல் ஞாயிறு கிழமை நண்பர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நீங்களும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அன்பை வெளிப்படுத்துங்கள். நட்பு என்ற ஒன்று அனைவருக்கும் கடவுள் கொடுத்த வரம். நாம் பள்ளிபருவம் முதல் வாழ்வின் இறுதிவரை கூட வரும் உறவில்லாத உண்மையான அன்பு நட்பு.
நண்பர்கள் தினத்திற்கான இந்த பதிவை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இந்த பதிவை காணும் உனக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா....
நட்பு இல்லாத வாழ்க்கை குப்பைக்கு சமமாக குறிப்பிடுகிறார் கவிஞர்...
உப்பில்லாப் பண்டம் போல....
நண்பா....
நீயற்று நானும்....
குப்பையைச் சேர வேண்டிய....
பொருளே....
உலகின் அனைத்து உறவுகளும் நட்பு என்ற ஒற்றை வார்த்தையில் அடங்கும் என்பதை பின்வரும் வரிகள் உணர்த்தும்...
தாய் என்ற ஒற்றைச் சொல்லில்....
உலகின் மொத்த அன்பும்....
அடங்கி விடும்....
தந்தை என்ற ஒற்றைச் சொல்லில்....
உலகின் மொத்த ஆதரவும்....
அடங்கி விடும்....
ஆசான் என்ற ஒற்றைச் சொல்லில்....
உலகின் அறிவுகள் அனைத்தும்....
அடங்கி விடும்....
இறைவன் என்ற ஒற்றைச் சொல்லில்....
உலகம் மொத்தமும்....
அடங்கி விடும்....
என்னுயிர் நட்பே....
இந்நான்குமே....
உன்னுள்....
அடங்கி விடும்....
நாம் ஒன்றாய் இருப்பதே நட்புக்கு பெருமை என்பதை இந்த வரிகளில் காண்போம்...
தாயும்....
சேயும்....
ஒன்றாய் இருப்பது தான்....
தாய்மைக்குப் பெருமை....
எண்ணும்....
எழுத்தும்....
ஒன்றாய் இருப்பது தான்....
கல்விக்குப் பெருமை....
வேகமும்....
விவேகமும்....
ஒன்றாய் இருப்பது தான்....
அறிவுக்குப் பெருமை....
விவசாயமும்....
பொருளாதாரமும்....
ஒன்றாய் இருப்பது தான்....
நாட்டிற்க்குப் பெருமை....
நாலும் (நாலடியார்)....
இரண்டும் (திருக்குறள்)....
ஒன்றாய் இருப்பது தான்....
தமிழுக்குப் பெருமை....
மூளையும்....
மனமும்....
ஒன்றாய் இருப்பது தான்....
வாழ்க்கைக்குப் பெருமை....
தோழா....
நீயும்....
நானும்....
ஒன்றாய் இருப்பது தான்....
நட்புக்கே பெருமை....
நட்புக்கு எல்லை என்ற ஒன்றே இல்லை. எல்லை இல்லாத நட்பிற்காக எங்களின் படைப்பு....
பூமிக்கு வானம்....
எல்லை....
வானத்துக்கு விண்வெளி....
எல்லை....
பிறப்புக்கு இறப்பு....
எல்லை....
மசக்கைக்கு குழந்தை....
எல்லை....
கனவுக்கு தூக்கம்....
எல்லை....
இரவுக்குப் பகல்....
எல்லை....
பகலுக்கு இரவு....
எல்லை....
நம் நட்புக்கு....
எல்லை என்ற ஒன்றே....
இல்லை....
காதலர்கள் அன்பை விட ஒரு நட்பின் அன்பு ஆழமானது. அளவிட முடியாத விந்தையான நட்பிற்காக...
கடலுக்குள் விழுந்த....
நீர்த்துளியும்....
நம் நட்பின்....
ஆழமும்....
ஒன்றே....
இரண்டையும் கண்டுபிடிப்பதற்கான....
கருவி....
உலகிலேயே....
இல்லை....
அனைத்தையும் தரும் நட்பிற்காக எங்களின் படைப்பு...
அன்பிற்கும்....
ஆறுதலுக்கும்....
பாசத்திற்கும்....
ஏங்கிய மனம்....
உன் நட்பின் மூலம்....
இவ்வனைத்தையும்....
பெற்று விட்டது....
எந்த சொந்தமும் இல்லாமல் வாழ்நாள் முழுக்க நம்மை சுமப்பவன் நண்பன் இந்த உணர்வை வரிகளில் காணுங்கள்...
பத்து மாதம்....
சுமந்த பாவத்திற்காக....
என்னை சுமக்கிறாள்....
தாய்....
பெற்றுவிட்ட....
பாவத்திற்காக....
என்னை சுமக்கிறார்....
தந்தை....
பாவமேதும் அறியாமல்....
எதோ ஒரு கடனுக்காக....
என்னை சுமக்கும்....
நீயே....
நம் நட்பையும்....
சுமக்கிறாய்....
நண்பா உன்னைப்பெற்றதே இந்த உலகில் நான் செய்த புண்ணியம்...
பாவம் செய்தவர்கள்....
நரகத்தையும்....
புண்ணியம் செய்தவர்கள்....
சொர்க்கத்தையும்....
அடைவர் என்பது....
உலக மக்கள் பலரது....
நம்பிக்கையாகவே உள்ளது....
ஒருவேளை....
அவை உண்மையாய் இருப்பின்....
நான்....
ஏதோ ஒரு தீராத பாவம் செய்தே....
நரகமாகிய இவ்வுலகை....
அடைந்திருக்கிறேன்....
ஆனால்....
தீமையிலும் நன்மை....
என்பதைப் போல....
நான்....
எங்கோ....
எப்போதோ....
செய்த மாபெரும் புண்ணியத்தின்....
பலனாகவே....
உன்னிடம் நட்பு கொண்டு....
சொர்க்கத்தை உணர்கிறேன்....
இறந்தாலும் இன்னுயிர் நட்பு மறையாது எப்போதும் உன்னோடு தொடரும் என்ற ஏக்கத்தை இக்கவிதையில் காணுங்கள்...
தீராத ஆசையுடன்....
இறப்பவர்கள்....
ஆவியாய் அலைவர்....
என்று கூறுவர்....
அது மெய்யாய் இருக்கும் பட்சம்....
எனக்கு ஒரு ஆசை உள்ளது....
என் வாழ்நாள் முழுவதும்....
என் நண்பனுடன்....
இருக்க வேண்டும் என்று....
இந்த ஆசை....
நிறைவேறாமல் சாகவே....
விரும்புகிறேன்....
அப்பொழுது தான்....
இறந்த பின்பும் கூட....
ஆவியாகவாது....
என் நண்பனை என்னால்....
காண முடியும்....
நித்தமும் நம் நலனை விரும்பும் நட்பிற்காக பகிருங்கள்...
வாழ்வென்ற ஒன்று....
எனக்கு....
இருக்கும் வரையில்....
நட்பே....
உன்....
நினைவென்ற ஒன்று....
என்னுள்....
இருந்துகொண்டே தான் இருக்கும்....
நண்பன் மனம் வருந்தக்கூடாது என நினைக்கும் நட்பிற்காக...
தோழா....
உன்னிடம் ஒரு வேண்டுகோள்....
நான் இறந்த பிறகு....
என் சடலத்தின் முன்போ....
என் நினைவு நாளில்....
என் கல்லறையின் முன்போ....
ஒருதுளி கண்ணீர் கூட....
சிந்தி விடாதே....
உன் கண்ணீரைத் துடைக்க....
இயலாத பாவியாகி விட்ட....
குற்ற உணர்வினால்....
என்....
ஆன்மா கூட....
நிம்மதியடையாது....
என் வாழ்க்கைக்கு உன் நட்பு அடையாளம் என நினைக்கும் நட்பிற்காக...
மார்கழிக்கு அர்த்தம்....
பனி....
தீபாவளிக்கு அர்த்தம்....
தீபங்களின் ஒளி....
அரசனுக்கு அர்த்தம்....
செங்கோல்....
மழைக்கு அர்த்தம்....
வளம்....
என் வாழ்வுக்கு அர்த்தம்....
உன்னுடைய நட்பு....
நட்பு கிடைப்பதற்கரிய வரம் என்பதை பின்வரும் வரிகள் உணர்த்தும்...
உண்மையான அன்பு வேண்டுமெனில்....
ஆண்டவன் கூட....
மடியேந்த வேண்டும்....
என் நண்பனிடம்....
ஒரு மொழி செழித்து வளர காரணம் இலக்கணம் அந்த இலக்கணத்திற்கு ஒப்பான நட்பிற்காக...
இலக்கணம் இல்லாத....
மொழிக்கு....
வாழ்வில்லை....
என் நண்பன் இல்லாமல்....
எனக்கும்....
வாழ்வில்லை....
நண்பன் குணத்தை இதை விட விவரிக்க முடியாது...
பணம் வைத்து....
வசதியை முடிவு செய்யும்....
பகட்டு மனிதனல்ல....
இருப்பதை வைத்து....
வாழத் தெரியாமல் அலையும்....
பேராசை மனிதனல்ல....
பதவிக்கு ஆசைப்படும்....
சுயநல மனிதனல்ல....
இல்லாத ஒன்றை....
தேடி அலையும்....
முட்டாள் மனிதனல்ல....
நட்பையும்....
மனிதத்தையும்....
முறையாய் கையாளத் தெரிந்த....
உன்னத மனிதன்....
என் நண்பன்....
நட்பு நம்முடன் இருக்கும்போது எப்போதும் வெற்றியே...
மனதுக்கும்....
மூளைக்குமான போரில்....
மனமே எப்பொழுதும் வெற்றி கொள்கிறது....
நண்பா....
உன்னை நினைக்கும்....
வேளைகளில்....
பிரிவு எல்லாவற்றிலும் உண்டு நட்பின் பிரிவை தாங்க முடியாமல் ஏங்கும் நட்பிற்காக...
தோழா....
உன்னருகில் வாழும்....
கொடுப்பினை....
எனக்கு....
கிடைக்கப் பெறவில்லை....
உன் நினைவுகளுடன்....
வாழவாவது....
கொடுத்து வைத்தேனே....
உன்னுடன் களித்த....
நாட்களை....
நினைத்துக் கொண்டே....
இன்பமாய் கடந்து விடுவேன்....
வாழ்வின் எல்லையை....
நம் அனைத்து செயல்களிலும் நம்முடன் துணைநின்று நம்மை நல்வழிப்படுத்தும், ஊக்கம் கொடுக்கும் நட்பு. ஒரு நல்ல நண்பன் நம் வாழ்வின் நாம் பெற்ற சொத்து.
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பர்களே இந்த கவிதை வரிகள் உங்களை மகிழ்வித்திருந்தால் உங்கள் நட்புடன் பகிருங்கள்.
தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக... நட்பிற்காக பதிவு வெளியிட்டதில் மகிழ்ச்சியடைகிறோம்... எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் கவிதை வாசிக்க ,
Nice
ReplyDelete