Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

World chess day Tamil poem

அறிவுத்திறனை வளர்க்கும் சதுரங்க விளையாட்டின் சிறப்பை நினைவில் கொள்ள உலக சதுரங்க தினம் கொண்டாடப்படுகிறது. சதுரங்க விளையாட்டு யோசிக்கும் திறனை வளர்க்கிறது. சரியான முடிவுகளை விரைந்து எடுக்கும் பயிற்சியை அளிக்கிறது.

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி விளையாடும் சதுரங்க விளையாட்டு மறதி என்னும் நோயை நம்மிடம் வராமல் தடுக்கிறது. இது அவர்களின் மனநலனை காக்கிறது.

மாணவர்களின் கல்வி கற்கும் திறனில் இதுபோன்ற அறிவுசார்ந்த விளையாட்டுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. வீடியோ கேம் விளையாட்டுகள் மாணவர்களை அடிமையாக்கி அவர்களின் கற்றல் செயல்பாடுகளை குறைக்கும். 

உலக சதுரங்க தின கவிதை (July 20):-

this tamil poem shows power of the chess game
chess image from pixabay


அமர்ந்த இடத்தில்....
அப்படியே அமர்ந்திருக்க....
அறிவு மட்டும்....
வளர்ந்து கொண்டே இருக்கிறது....
போட்டிக்கு ஒருவர்....
அமர்ந்திருக்க....
இரு அணிகளாய்ப் பிரிந்திருக்க....
இரு பதினாறு....
ஆட்டக்காரர்கள்....
வெற்றியை தீர்மானிக்கின்றனர்....
சதுரங்க விளையாட்டில்....

போரின் நெறிமுறைகளை வகுத்து....
அதிகாரங்களை அளித்து....
தளபதிகளுடன் சேர்ந்து போரிட்டான் அரசன்....
போர்க்களத்தில் அல்ல சதுரங்க விளையாட்டு தளத்தில்....

செல்போனில் உள்ள செயலிகளின் பயன்பாட்டை குறைப்போம்....
மனதின் செயல்களை அதிகரிப்போம்....

தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக. எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும். 

RiyAshok shades.

மேலும் சில கவிதைகளுக்கு ,


Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Tamil kavithai collection for all relationship

News paper, hope, god Tamil kavithai