Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Refugee day poem in tamil

பிறந்த இடத்தையும் வளர்ந்த நாட்டையும் விட்டு வெளியேறும் உறுக்கமான மனதை கொண்ட புலம்பெயர்வோரின் நிலையை உணர்ந்து உதவிகரம் நீட்டுமாறு கவிஞர் இக்கவிதையை படைத்துள்ளார்.

சொந்த நாட்டில் இருந்து விரட்டப்பட்ட அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதை நம் கடமையாக குறிப்பிடுகிறார். இது ஈகை பண்பை நம்முள் வளர்க்கும். 

உலக அகதிகள் தின கவிதை ( June-20 ):

the poem expressed pain of a person who left his place and live refugee as others place
special poem for refugee day


அன்பென்னும் அடைமழையில்....
ஆனந்தமாய் நனைகின்றோம் நாம்.....
இதே வேலையிலே....
அன்பு காட்ட ஒருவரும் இன்றி....
அரை உயிரைக் கையில் ஏந்தி.....
அடுத்து வரும் சந்ததியைக் காக்க.....
அண்டை நாட்டை....
அடைக்கலமாய் நாடும்....
அகதிகளின் நிலையறிந்து....
அவர்களுக்கு ஆதரவளிப்போம்....

தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக. எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

RiyAshok shades


மேலும் கவிதைகள் வாசிக்க ,


Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Tamil kavithai collection for all relationship

News paper, hope, god Tamil kavithai