Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Population Tamil poem

மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்த்த கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளோம். அனைவரும் படித்து தங்கள் ஆதரவை தாருங்கள்.

உலக அளவில் மக்கள் தொகை அதிகரிப்பு முக்கிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இது அதிகப்படியான இயற்கை வளங்களை பயன்படுத்தி இயற்கை சமநிலையை சீர்குலைக்கிறது. இதனை நினைவில் கொள்ள உலக மக்கள் தொகை தினம் July 11 அன்று அனுசரிக்கப்படுகிறது.

உலக மக்கள் தொகையில் சீனா , இந்தியா ,போன்ற நாடுகள் முன்னனியில் இருக்கின்றன. 

அதிக மக்கள் தொகை வேலைவாய்ப்பின்மை , உணவுப்பொருள் தட்டுப்பாடு போன்றவற்றை அதிகரிக்கிறது. மக்கள் இருப்பிடத்திற்காக காடுகளையும் நீர்நிலைகளையும் அழிக்கின்றனர். 

அளவான குடும்பம் அளவில்லா மகிழ்ச்சி தரும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்...

மக்கள் தொகை தின தமிழ் கவிதை:

this poem wrote for creating awareness about population increasing
population image from pixabay

மக்கட்பேறு பல பெற்றார்....
நம் தாத்தா....
பெற்ற அனைவருக்குமே கொடுக்க....
அளவாக பொருளை ஈட்டினார்....
அளவாய் பிள்ளை பெற்று....
அளவுக்கு அதிகமாய்....
சேர்த்து வைக்கிறார்....
நம் தந்தை....
பொருள் ஈட்டவே நேரம் செலவழித்து....
பிள்ளை பெறவே மறக்கின்றனர்....
இக்கால தலைமுறையினர்....
செல்வந்தனின் இல்லத்தில்....
பொருட்களும்....
ஏழைகளின் இல்லத்தில்....
பிள்ளைகளும்....
புகுந்து விளையாடுகின்றன.... 
அடிக்கு அடி....
இடைவெளி விட்டு நடந்த காலம் போய்....
ஓரடி கூட எடுத்து வைக்க இயலாத காலம் வர....
நாட்கள் இன்னும் வெகு தொலைவில் இல்லை....
மனிதநேயம்....
குறைந்து கொண்டே போக....
மக்கள் தொகை மட்டும்....
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது....
இந்நிலை மாறுவது எப்போதோ...???

தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக. எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

RiyAshok shades


மேலும் கவிதைகள் வாசிக்க ,

Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Tamil kavithai collection for all relationship

News paper, hope, god Tamil kavithai