Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Jokes day poem in tamil

நகைச்சுவை தின தமிழ் கவிதை (jokes day poem):

girl taken cute shot on camera for jokes day photo shoot competition
image by xan xan from pixabay

வணக்கம் நண்பர்களே, வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பர் அத்தகைய சிறப்பு கொண்ட நகைச்சுவை திறனை போற்ற வேண்டும் என இந்த கவிதையை பதிவிட்டுள்ளோம்.

நகைச்சுவை உணர்வு கொண்ட நண்பர்கள் அமைந்தால் வாழ்வே சொர்க்கமாகும். துன்பங்களை மறந்து சிரிப்பவரது நெஞ்சம் பூ போல மலர்ந்து இருக்கும்.

நம்மை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்த சில நகைச்சுவை கலைஞர்களின் பெயர்களை குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எம்.ஆர்.ராதா, நாகேசு, கவுண்டமணி, செந்தில், வைகைபுயல் வடிவேலு, விவேக், மற்றும் பலர்.


தான் காயப்பட்டாலும் அவமானப்பட்டாலும் பிறரை சிரிக்க வைத்தால் போகும் என நினைக்கும் நகைச்சுவை கலைஞர்களை போற்றி வணங்குகிறோம்.

சாதி மத இன மொழி....
பேதங்களில் இருந்து சற்றே மாறுபட்டு....
அனைவருக்கும் பொதுவாய் நிற்கும் ஒரே விசயம்....
சிரிப்பு மட்டுமே....
சந்தோசத்தில் பெரியது....
அடுத்தவர்களை சந்தோசப்படுத்திப் 
பார்ப்பதே....
ஒருவரின் இதழ் நம்மால் மலரும்போது 
வரும் இன்பம் அளவற்றது....
இப்படியாக அனைவரின் மனம் 
கவரும் திறன்....
நகைச்சுவைக்கு உண்டு....
சிரித்து மகிழ்ந்து....
வாழ்வை ரசிப்போம்....


மனதுக்கு மகிழ்ச்சி தரும் நகைச்சுவையை நம் வாழ்வில் சேர்த்து வாழும் நாட்களை கூட்டுவோம். தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக. எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Tamil kavithai collection for all relationship

News paper, hope, god Tamil kavithai