Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Reservation in India for OBC - reservation trending news

இட ஒதுக்கீடு

வணக்கம் நண்பர்களே. இந்த பதிவில் இட ஒதுக்கீடு பற்றிய சில தகவல்கள் ...தோற்றம்,சட்டங்கள், இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய வழக்கு, சில தகவல்களை பகிர்ந்துள்ளேன்...

தோற்றம்:

இந்தியா விடுதலைக்காக போராடியது போல் பல போராட்டங்களை கண்டது. அவற்றில் ஒன்று இட ஒதுக்கீட்டுக்கொள்கை. இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர்கள் சமுதாயத்தில் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது.

1.முதலாவது பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் நேரு அரசின் ககா கலேல்கர் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டது. (1953)

2.இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் மொராஐி தேசாய் அரசின் பி.பி மண்டல்  தலைமையில் உருவாக்கப்பட்டது

-இது 1980 ல் தனது அறிக்கையை சமர்பித்தது.

- இந்த அறிக்கையில் ஓபிசி (OBC) 27% இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தார்.

இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிரான வழக்கு:

-பி.பி மண்டல் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிராக இந்திர சகாணி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

-இந்த வழக்கில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

-இது இட ஒதுக்கீடு தோற்றம் பற்றிய தகவல்கள்.

இட ஒதுக்கீடு : 

- உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி 1993 ல் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அமைக்கப்பட்டது.

-இதன் அடிப்படையில் 93 வது சட்டதிருத்தம் 2005 ன் படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

-இதன்படி SC     -15%
                         ST     -7.5%
                         OBC -27% 
இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

அரசியலமைப்பு தொடர்பு:

-அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேரியது.

-அரசியலமைப்பு அடிப்படை உரிமையின் சரத்து 15 ன் படி சாதி ,மதம் ,இனம் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது.

-இதன் அடிப்படையில் SC,ST பிரிவினர் போல OBC க்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

மருத்துவ இட ஒதுக்கீடு விவகாரம்:

-மத்திய அரசு OBC க்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது.

-இதனை எதிர்த்து தொடங்கப்பட்ட வழக்கில் இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையில்லை என்று கூறி வழக்கை முடித்தது.
இதற்கு எதிராக சமூக வலைதளங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

முடிவுரை:

அரசின் இந்த தீர்ப்பு பிற்படுத்தப்பட்டோர் நலனை பாதிக்கும் விதமாக உள்ளதால் அரசு முடிவில் மாற்றம் கொண்டுவர 
வேண்டுகிறோம்.

நன்றி மீண்டும் வருக. எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும். 

Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Tamil kavithai collection for all relationship

News paper, hope, god Tamil kavithai