Atthivarathar kancheepuram temple unknown facts
- Get link
- X
- Other Apps
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளிவரும் அதிசயம் நிறைந்த கடவுள்? இந்தப் பெருமாள் எங்கே உள்ளார்? இந்த 40 ஆண்டுகள் அவர் எங்கே இருப்பார்? இந்தக் கோவில் அதிசயமாக கருதப்பட நிறைய காரணங்கள் உள்ளன அவை அனைத்தையும் இந்த பதிவில் பார்ப்போம். இந்த அதிசய கோயில் பற்றிய பல அறிய தகவல்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
தமிழகத்தின் கோவில் நகரம் என்னும் சிறப்பை பெற்றது காஞ்சிபுரம் இத்தகைய சிறப்பு கொண்ட காஞ்சிபுரம் நகரில் தான் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. வரதராஜர் பல கோவில்களில் எழுந்தருளினாலும் இக்கோவில் தனிச்சிறப்பு உடையது. இதற்கு காரணம் இக்கோவிலில் உள்ள அத்திவரதர் சிலை.
தனிச்சிறப்புடைய இந்த சிலை கோவிலின் குளத்தில் வைக்கப்பட்டுள்ளது இது 9 அடி உயரம் கொண்டது. இந்த சிலை முழுவதும் அத்தி மரத்தால் ஆனது. இந்த சிலை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிவருவதாக பார்த்தோம்.
அப்போது 40 ஆண்டுகள் இந்த சிலை எங்கே இருக்கும்? ஆம் கோவில் குளத்தில் உள்ள தண்ணீருக்கு அடியில் இந்த சிலை வைக்கப்பட்டிருக்கும்.
இந்த சிலை 40 ஆண்டுகள் தண்ணீரில் வைக்கப்படும் ரகசியத்தை தெரிந்து கொள்வதற்கு முன் அத்தி வரதர் எவ்வாறு தோன்றினார் என்பதைப் பற்றிய வரலாறு காண்போம். மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா நடத்திய அசுவமேத யாகத்தில் இருந்து அத்தி வரதர் தோன்றினார் என்று நம்பப்படுகிறது.தற்போது காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் அத்திவதனத்தில் அசுவமேத யாகம் நடத்த முடிவு செய்தார் பிரம்மதேவர். அந்த யாகத்திற்கு தன் மனைவியாகிய சரஸ்வதி தேவியை அவர் அழைக்கவில்லை.
இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி யாகத்தைத் தடை செய்ய அசுரர்களின் உதவியோடு வேகவதி ஆறு ஆக மாறி வெள்ளப்பெருக்கு எடுத்து வந்தாள். இந்நிலையில் யாகத்தை காப்பதற்காக யாகத்தீயிலிருந்து திருமால் தோன்றி வேகவதி நதிக்கு நடுவே சயனக்கோலம் கொண்டார். இதனைப் பார்த்த வேகவதி தன் பாதையை மாற்றிக் கொண்டாள். இதனால் காயத்ரி சாவித்ரி துணையுடன் பிரம்மதேவன் தன் யாகத்தை முடித்தார் என்று புராணம் காஞ்சிபுரம் அத்தி வரதர் தோற்றம் பற்றி கூறுகிறது.
யாகத்தீயிலிருந்து எழுந்தருளியதால் பெருமாளின் தேகம் உஷ்ணத்தால் காயப்பட்டு இருந்தது இதனால் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்தில் உள்ள சிலையை பிரதிஷ்டை செய்யுமாறு திருமால் அசரீரி மூலம் அருளியதாக புராணம் கூறுகிறது.
பிரம்மதேவர் தனது யாகத்தைக் காத்த பெருமாளின் திரு உருவத்தை தேவலோக சிற்பி விஸ்வகர்மாவை கொண்டு வடிவமைத்தார் இப்படி அத்திவரதர் மண்ணுலகில் எழுந்தருளினார்.
காஞ்சிபுரம் அத்தி வரதர் கோவில் தல வரலாறு
இக்கோயில் கிபி 1053 இல் கட்டப்பட்டது இதனை சோழ மன்னர்கள் கட்டியுள்ளனர். முதலாம் குலோத்துங்க சோழன் மற்றும் விக்கிரமசோழன் இதனை சீரமைத்து உள்ளனர்.
இக்கோவிலில் இரு ராஜகோபுரங்கள் உள்ளன மன்னர் காலத்தில் கிழக்கு ராஜகோபுரம் பிரதான நுழைவு வாயிலாக இருந்துள்ளது. இந்த கோவிலில் அனந்தசரஸ், பொற்றாமரை என இரு குளங்கள் உள்ளன. மூலவரான வரதராஜ பெருமாளுக்கு தேவராஜசுவாமி என்னும் பெயரும் உண்டு. அத்தி மரத்தால் ஆன அத்திவரதர் சிலை கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அமைந்துள்ள நான்கு கால் மண்டபத்தில் ஐல சயன கோலத்தில் உள்ளது.
காஞ்சிபுரம் அத்தி வரதரை தண்ணீரில் மறைத்து வைக்க புராணம் கூறும் காரணம் என்ன?
வேள்வித்தீயில் இருந்து தோன்றியதால் உருவான வெப்பத்தை குளிர்விப்பதற்காக அனந்த புஷ்கர தீர்த்தத்தில் புகுந்த பெருமாள் 40 வருடங்களுக்கு ஒருமுறை குளத்திலிருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்பது ஐதீகம்.
முகலாயர்கள் உள்ளிட்ட அந்நியர்களின் படையெடுப்புகளில் இருந்தும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொள்ளை போகாமல் தடுப்பதற்காக குளத்திற்குள் அத்தி வரதரை பிரதிஷ்டை செய்தனர் என்பது செவிவழி செய்தி. இந்த நம்பிக்கையின் பேரில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த திருவிழா நடைபெறுகிறது.
நீருக்குள் இருக்கும் அத்திவரதர் சிலை யை எவ்வாறு வெளியே எடுக்கிறார்கள்?
அத்திவரதர் வைக்கப்பட்டிருக்கும் அனந்தசரஸ் குளம் முழுவதும் தண்ணீரால் நிரம்பி இருக்கும். மின்மோட்டார் மூலம் இந்த தண்ணீரை பொற்றாமரைக் குளத்தில் நிரப்புகின்றனர் (350 மீட்டர்) பின்னர் அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்படுகிறது.
நாற்பது ஆண்டுகள் நீருக்கடியில் இருக்கும் அத்தி மர சிலை மக்காமல் இருக்க காரணம் என்ன?
கோவிலின் அனந்தசரஸ் நீராழி மண்டபத்தில் உள்ள அத்திவரதர் சிலை மீது கருங்கற்களால் ஆன பாறைகளை வைத்து மிதக்காதவாறு வைக்கிறார்கள்.
அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்பட்ட பின் 27 மூலிகைகள் கலந்த 2000 லிட்டர் எண்ணெய் கொண்டு மூன்று நாட்கள் சுத்தம் செய்யப்படுகிறது இதன் காரணமாக நாற்பது ஆண்டுகள் தண்ணீரில் இருந்தாலும் இச்சிலை மக்காமல் உள்ளது என்று கூறுகின்றனர்.
பொதுவாக கடவுள் சிலைகளை நெய் சந்தனம் போன்ற பொருள்கள் கொண்டு பூஜை செய்வது வழக்கம் இதன் காரணமாக தான் சிலைகள் நீண்ட வருடங்கள் நன்றாக இருப்பதாக கூறுகின்றனர்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அத்தி வரதர் தரிசனம் நடைபெற்ற ஆண்டுகள்:
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் வெளியே எழுந்தருளும் அத்திவரதர் 1937ஆம் ஆண்டு காட்சி அளித்துள்ளார் அதன்பின் 1979ஆம் ஆண்டு ஜூலை 2ல் எழுந்தருளினார்.
கடைசியாக 2019 ஆம் ஆண்டு அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் இந்த விழா ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்கள் நடைபெற்றது.
அத்திவரதரின் திருஉருவச்சிலை இரண்டு நிலைகளில் பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுகிறது:
நின்ற நிலையில்
சயன திருக்கோலத்தில்
- முதல் 24 நாட்கள் சயன திருக்கோலத்தில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டிருக்கும்.
- அடுத்த 24 நாட்கள் நின்ற நிலையில் தரிசனத்திற்கு வைக்கப்படும்.
- 48 நாட்கள் தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் அத்திவரதரின சிலை அனந்தசரஸ் குளத்தில் ஐல சயன நிலையில் வைக்கப்படும்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இரண்டு முறை அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தது குறிப்பிடத்தக்கது.
அதிசயம் நிறைந்த இந்த அத்திவரதரை நாம் இனிமேல் 2059 ஆம் ஆண்டு தான் தரிசிக்க முடியும்.
மேலும் இது போன்ற சுவாரசியமான ஆலயங்கள் பற்றிய தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை பின்தொடருங்கள். ட்விட்டரில் உடனுக்குடன் பதிவுகளை காண இந்த லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்கள்.
தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக
மேலும் படிக்க,
- அயோத்தி ராமர் கோவில் வரலாறு, அயோத்தி வழக்கு இறுதி தீர்ப்பு
- இந்திய சுதந்திர தின கவிதை
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.