Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

India Bharat independence day kavithai in tamil

 சுதந்திர தின கவிதை:


பஞ்சம் பிழைக்க வந்தவன்....

நம்மை கொத்தடிமையாய் நடத்தினான்....

வந்தவனுக்குப் பயந்து....

வாழும் நாட்டைப் பணயம் வைத்தோம்....

ஆடும் வரை ஆடிக்கிடந்தான்....

இந்தியர்களை இழிவாய் நடத்தினான்....

தன்னலத்தைக் காப்பதையே குறிக்கோளாய்க் கருதினான்....

மனிதத் தன்மையை மறந்தான்....

அனைவரையும் துன்புறுத்தினான்....

அத்தனை பாவங்களையும் செய்யும் பொழுதில்....

அவன் அறிந்திருக்கவில்லை....

இந்தியர்களின் கைகளும் ஒருநாள் ஓங்குமென்று....

அவன் எதிர்பாரா....

அந்நாளும் வந்தது....

வீழ்ந்து சோர்ந்து பொலிவற்றிருந்த மனங்களில்....

திடீரென ஒரு புரட்சிக்கனல் துளிர் விட்டது....

இந்தியர்களின் கைகள் ஓங்க வேண்டிய காலத்தை....

இந்திய மக்களின் மனங்களில் வித்திட்டது....

அடிமைத்தனத்தை எதிர்க்க விதைத்தக்கப்பட்ட வித்திற்கு....

வீரம் எனும் நீரூற்றி....

போராட்டம் எனும் வெயில் காட்டி....

தன்மான உணர்ச்சி எனும் உரமிட்டு....

தன்னம்பிக்கை எனும் பூச்சிக்கொல்லியைத் தெளித்து....

விடாமுயற்சி எனும் மழை தந்து....

விதைத்த வித்தை செடியாக்கி....

மரமாக்கி....

சுதந்திரம் எனும் கனியையும் பறித்தனர்....

நம் முன்னோர்களான....

சுதந்திரப் போராட்டத் தியாகிகள்....

படாத துயரங்கள் பல கண்ட பிறகே பெற்ற சுதந்திரம்....

அதைப் பேணி காக்க மறந்து விட்டு....

வெளிநாட்டு மோகத்தால்....

இன்றும் அடிமையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்....

வெள்ளையனிடமும்....

வெளிநாட்டு மோகத்திடமும்....

வெளிநாட்டு பொருட்களிடமும்....

காலங்காலமாய் அடிமைப்பட்டே கிடக்கும் நமக்குத்தான்....

என்று தணியும்....

இந்த சுதந்திர தாகம்....


போராடி வாங்கித் தந்த சுதந்திரம்....

பாதுகாக்கத் தெரியாமல் தொலைத்துக் கொண்டு இருக்கிறோம்....

நாமாக போராடிப் பெற்றிருந்தால் தான் உணர்ந்து இருப்போம்....

சுதந்திரத்தின் அருமையை....

இலவசமாய்க் கிடைத்து விட்டதென்று எண்ணி....

நாம் நம் சுதந்திரத்தை....

தவறாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்....

ஆனால் சுதந்திரம் இலவசமாய் கிடைத்தது அல்ல....

நம் முன்னோர்களின் உதிரத்தை விலையாய் கொடுத்துப் பெற்றதே....

மனிதனின் உழைப்பையும்....

வியர்வைத் துளியையும்....

உதிரத்தையும்....

மதிக்காத மனிதர்களாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்....

மனித நேயத்தை மறந்து வாழும்....

நம்மைப் போன்ற மாந்தர்கள் இருக்கும் வரை....

நம் நாடு சுதந்திரம் அடைந்திருந்தாலும்....

அடிமையாகவே தான் வாழ்ந்து கொண்டிருப்போம்....


இந்தியனாய்ப் பிறந்து விட்டேன்....

இருதயம் நெகிழ்கிறது....

இன்றைய நாளில் சுதந்திரமாய் சுற்றித் திரிகிறேன்....

இன்றியமையா பல அதிசயங்களை உள்ளடக்கியது....

நம் பாரதம்....

இன்னல்கள் பல கடந்து பெற்ற சுதந்திரம்....

இடையூறுகள் பல கடந்து வந்த பாரதம்....

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் உதிரம் விழுந்தே....

நனைந்து விட்ட தாய் மண்....

உதிரத்தை உரமாக ஏற்றுக்கொண்டு....

விளைந்து விட்ட மரங்கள்....

தாய் நாட்டைத் தாயாக எண்ணியே....

மனதினுள் தினமும் ஆராதனை செய்கிறேன்....

இந்தியனாய் வாழும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன்....

வாழும் வாழ்வின் அர்த்தம் உணர்ந்தேன்....

மனதில் நெகிழ்ச்சி....

வெள்ளப் பெருக்காய்ப் பாய....

கண்களில் பெருமையின் துளி தவழ்கிறது....

என் பாரதத்தாயை நினைக்கும் பொழுதெல்லாம்....



காலங்கள் கடந்து விட்ட போதிலும்....

கண்ணீர்த் துளிகள் காய்ந்து போகவில்லை....

காயங்கள் ஆறிப் போகவில்லை....

வலிகள் மறைந்து போகவில்லை....

சுதந்திரம் கிடைக்கவே....

நம் முன்னோர்கள் பட்ட இன்னல்களோ....

இன்றளவும் இழிந்து போகவில்லை....

இரக்கமற்ற மாந்தர்களின் மனங்களும்....

மாறிப்போகவில்லை....

வெளிநாட்டவர்களிடம் இருந்து....

சுதந்திரத்தைப் பெற்று விட்டோம்....

ஆனால்....

உள்நாட்டவர்களிடம்....

அடிமைகளாகி விட்டோம்....

சுதந்திர தாகம் தணியாமல்....

சுதந்திர நாடாக இருக்க வேண்டிய இந்தியா....

தந்திர நாடாகவே திகழ்கிறது....

உள்நாட்டு துரோகிகளை எதிர்ப்போம்....

நம் நாட்டைக் காப்போம்....



முதுகெலும்பாய்....

விவசாயிகளைக் கொண்ட நாடு....

நெற்றிப் பொட்டாய்....

காஷ்மீரைக் கொண்ட நாடு....

நிலம் பதிக்கும் பாதமாய்....

கன்னியாகுமரியைக் கொண்ட நாடு....

உடலுக்குப் பொர்வை போல்....

முப்பக்கம் கடல் சூழ்ந்த தீபகற்ப நாடு....

வடக்கில் சீனா....

வட மேற்கில் பாக்கிஸ்தான்....

வட கிழக்கில் நேபால்....

போன்ற எதிரி நாடுகள் சூழ்ந்திருந்தாலும்....

தன் தரத்திலிருந்து வீழாது வீற்றிருக்கும் நாடு....

எம்மதமும் சம்மதமாய்....

மும்மதமும் மிளிர்ந்திருக்கும் நாடு....

சாதி மத பேதமின்றி....

உறவுகளை வளர்க்கும் நாடு....

உள்ளத்தின் தூய்மையினால்....

மனத்தின் துரிதத்தை உணரும் நாடு....

கள்ளமில்லா உள்ளந்தனை....

உருவாக்கும் நாடு....

தனக்கான தனித்துவத்தை....

தாங்கி நிற்கும் நாடு....

தரணி இருக்கும் காலம் வரை....

தற்சார்பில் திளைக்கும் நாடு....

திரும்பும் திசையெல்லாம்....

தியாகிகள் நிறைந்த நாடு....

இந்திய நாடு....

நம் தாய்த் திருநாடு....

உயிருள்ள காலம் வரை....

இதையே நாடு....



வாழும் காலம் அனைத்திலும்....

நம் மூச்சைப் போலவே....

தேசப்பற்றையும் சுமந்து செல்வோம்....

அண்டை அயலாரின்....

நேசத்தைப் பெறுவோம்....

நம்மீது தேசம் வைத்த....

நம்பிக்கைக்குத் துணை நிற்போம்....

மனதால் அனைவரையும்....

மகிழ்விப்போம்....

சுய நலமற்ற வாழ்வையே....

இயன்ற வரையிலும் வாழ்வோம்....

இருக்கும் காலம் வரை....

பிறர் நலனுக்காக பாடுபடுவோம்....

எதிரி என்று எவரையும்....

நினைக்காதிருக்கக் கற்றுக் கொள்வோம்....

பெற்றோரைப் போல்....

பிறந்த நாட்டையும் பேணி காப்போம்....

எந்நாட்டு மக்களையும்....

நம் நாட்டு மக்களாய்க் கருதுவோம்....

பணத்தை ஒதுக்கி....

மனத்தை மதிப்போம்....

எவரையும் துன்புறுத்தாத....

வாழ்க்கையை வாழ்வோம்....

பிறர் குறைகளை பெரிது படுத்தாது....

அனைவரையும் நேசிப்போம்....

எல்லோரையும் அன்பு உள்ளத்தோடு....

அரவணைப்போம்....

மற்றவர்களுக்கு நாம் செய்யும் நன்மைகள் மட்டுமே....

நம் தேசத்தைப் பெருமை அடையச் செய்யும்....

தேசத்தை மதிப்போம்....

நேசத்தைக் காப்போம்....


மாதவராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா....

என்று பாரதி பாடினார் அன்று....

ஆனால்....

உண்மை யாதெனில்....

இந்தியனாய்ப் பிறப்பத்தற்கே....

நாம் மாதவம் செய்திருக்க வேண்டும்....

இன்பமும்....

துன்பமும்....

கலந்திருக்கும் உலகம் தன்னில்....

பிறப்பு முதல்....

இறப்பு வரை....

ஏதோ ஒரு உறவை....

ஒழுக்கம் தவறாது....

உடன் அளிக்கும் ஒரே நாடு....

இந்தியா....

மனிதனின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிக்கும்....

நம் தாய் நாட்டை....

மனதார மெச்சி வாழ்வோம்....

எந்நாட்டில் பிறந்தவரானாலும்....

நம் நாட்டில் வளர்ந்தால்....

நிச்சயம் பெருமை கொள்வர்....

தான் வாழ்ந்து கொண்டு இருக்கும் நாடு....

ஒரு பூலோக சொர்க்கம்....

என்பதை உணரும் பொழுதில்....

எண்ணற்ற பெருமை தனை....

வாரி வழங்கும்....

நம் நாட்டை எண்ணி....

பெருமிதம் கொள்வோம்....


கடலில் உயர்ந்தது....

உப்பு....

பூவில் உயர்ந்தது....

தேன்....

காற்றில் உயர்ந்தது....

மூச்சு....

மனதில் உயர்ந்தது....

மழலை....

சுவையில் உயர்ந்தது....

நகைச்சுவை....

நீரில் உயர்ந்தது....

கண்ணீர்....

செல்வத்தில் உயர்ந்தது....

நட்பு....

பலத்தில் உயர்ந்தது....

உழைப்பு....

முன்னேற்றத்தில் உயர்ந்தது....

தன்னம்பிக்கை....

வெற்றியில் உயர்ந்தது....

தோல்வி....

தோல்வியில் உயர்ந்தது....

விடா முயற்சி....

படிப்புகளில் உயர்ந்தது....

அனுபவம்....

கற்பனையில் உயர்ந்தது....

கவிதை....

இந்த உலகில் உயர்ந்தது....

என் தாய்நாடு....

எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Tamil kavithai collection for all relationship

News paper, hope, god Tamil kavithai