இ பாஸ் இனி தேவையில்லை e pass latest news
- Get link
- X
- Other Apps
மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லையா ? மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவை தொடங்கலாமா ? மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வெளியிட்ட இனிப்பு செய்தி ?
வணக்கம் நண்பர்களே கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை தடுக்க பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதில் பொது சேவைகள் முடக்கம் மற்றும் 144 தடை உத்தரவு போன்ற பல தடுப்பு நடவடிக்கைகள் கொரோனா நோய்த்தொற்று சமூக பரவலாக மாறுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் நிறைய விதிக்கப்பட்டன. தற்பொழுது மக்களுக்கு தனிமனித இடைவெளி கடைபிடிப்பது மற்றும் தூய்மையாக இருப்பது பற்றிய விழிப்புணர்வு வர தொடங்கியதால் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இ பாஸ் நடைமுறை மற்றும் பொதுப் போக்குவரத்து தொடங்குவது தொடர்பான செய்தியை வெளியிட்டது. இந்த செய்தி அனைத்து மக்களுக்கும், நீண்ட தூரம் வேலை செய்வோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரியான காரணங்கள் இருந்தாலும் மிகவும் நெருங்கிய சொந்தங்களின் நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்க இ பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இது மட்டுமல்லாமல் பல பல காரணங்களால் உடனடியாக செல்லவேண்டிய பயணங்கள் தவிர்க்கப்பட்டன. இ பாஸ் கிடைக்காததால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலையில் ஒரு பெண் முறையிட்ட செய்திகளையும் நாம் பார்த்திருப்போம்.
இன்று வெளியிட்ட இந்த அறிவிப்பில் இது போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு உடனடியாக செல்லக்கூடிய வகையில் இரண்டு தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
முதலாவது மகிழ்ச்சியான செய்தி மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்திற்குள்ளும் போக்குவரத்து மேற்கொள்ள நடைமுறையிலிருந்த இ பாஸ் ரத்து செய்யப்படுகிறது. இ பாஸ் நடைமுறையை எந்த மாநில அரசும் நடைமுறை படுத்த கூடாது என்று மாநில செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இரண்டாவது மகிழ்ச்சியான செய்தி கொரோனா தோற்று குறைந்து வருவதால் பேருந்து சேவையை முடிந்த அளவு சீக்கிரம் தொடங்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த இரண்டு அறிவிப்புகளும் மக்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக அமைந்துள்ளது. மேலும் மத்திய அரசின் அறிவிப்பு குறித்து அந்தந்த மாநில அரசுகள் ஆலோசித்து இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும். மாநில அரசுகளின் தளர்வுகளைப் பொறுத்து இந்த இரண்டு அறிவிப்புகளும் நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும் பல உடனடி தகவல்களை தெரிந்துகொள்ள எங்களது பக்கத்தை பின் தொடருங்கள். எங்களது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து அறிவிப்புகளும் உடனடி தகவல்களும் பதிவிடப்படும்.
தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக.
மேலும் படிக்க,
- 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அற்புத கடவுள்?
- இந்திய பெருமையை உள்ளடக்கிய சுதந்திர தின கவிதை
- நண்பர்கள் தின கவிதை
- உங்க போன் ஆபத்துல இருக்கா ஆண்ட்ராய்டு ஸ்னாப்டிராகன் செக்யூரிட்டி வார்னிங் பற்றி படிக்க
- D614G வகை மரபணு மாற்றப்பட்ட புதிய கொரோனா வைரஸ் பத்து மடங்கு ஆபத்தானதா?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.