Posts

Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

International Day against Child Soldiers special Tamil kavithai

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இன்று சர்வதேச குழந்தை சிப்பாய் ஒழிப்பு தினம். குழந்தை சிப்பாய் முறையை கைவிடுவதை வலியுறுத்தி இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. குழந்தைகள் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய இந்த நல்ல நாளை போற்றும் வகையில் எளிமையான ஒரு கவிதையை பதிவிடுகிறேன் பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் நன்றி. சர்வதேச குழந்தை சிப்பாய் ஒழிப்பு தினம் ( February 12 - International day against child soldiers Special Tamil poem) பேனா பிடிக்க வேண்டிய... பிஞ்சு விரல்கள்... ஆயுதம் பிடிக்கிறது... பாடம் படிக்க வேண்டிய... இளம் வயது... போரைப் படிக்கிறது... முத்து முத்தாய்... வார்த்தைகள் சிதறும்... மழலைப் பேச்சு... மௌனமாய் மாறியது... சீருடை அணிய வேண்டிய... சின்னஞ்சிறு மேனி... போருடை அணிகிறது... எதிர்காலத்தை எண்ணி... கனவு காண வேண்டிய... கயல் விழிகள்... போர்க்களத்தில்... எதிரிகளைக் காண்கிறது... தாமரை இதழ் மேல்... தண்ணீர் போல்... தரையில் படாமல்... மிதக்க வேண்டிய... மலரடிகள்... போர் மண்ணில்... கறை படிகிறது...

National Inventor day special poem

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இன்று தேசிய கண்டுபிடிப்பாளர்கள்  தினம் . ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஏதோ ஒரு நல்ல எண்ணத்தில் உருவாக்கப்பட்டவை அவற்றை சரியான வழியில் பயன்படுத்தி பயன்பெறுங்கள். இன்று தங்களுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை கண்டுபிடிப்புகளுக்காக செலவு செய்த கண்டுபிடிப்பாளர்களை போற்றும் வகையில் எளிமையான ஒரு கவிதையை பதிவிடுகிறேன் பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் நன்றி. தேசிய கண்டுபிடிப்பாளர்கள் தினம் ( February 11- National Inventor day special poem) பறக்கும் பறவை... பறப்பதைக் கண்டு வியந்து... தானும் பறக்கவே... விமானம் படைத்தான்... நீந்தும் மீன்... மூழ்காமல் மிதக்கும்... வித்தையைக் கண்டு... தானும் மிதக்க எண்ணியே... படகைப் படைத்தான்... எங்கேயோ தொலைவில்... திக்குத் தெரியாமல்... தவித்துக் கிடக்கும் உறவுகளை... இணைக்கும் நோக்கில்... அலைபேசி படைத்தான்... அம்மியில் அரைத்து... ருசியாய் உண்டாலும்... வலிக்கும் கைகளை... மனதில் கொண்டு... மிக்சியைப் படைத்தான்... நடந்து நடந்து... கால்...

Umbrella Tamil kavithai for school homework

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இன்று தேசிய குடை தினம். குடை உடைய சிறப்பு குறித்த எளிமையான ஒரு கவிதையை பதிவிடுகிறேன் பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் நன்றி. தேசிய குடை தினம் ( February 10 - National umbrella day) தூசுகளில் இருந்து... விழியைக் காக்கும்... இமை போல... முட்களிடமிருந்து... பாதங்களைக் காக்கும்... காலணிகள் போல... வெப்பத்தில் இருந்து... உடலைக் காக்கும்... நீரைப் போல... குளிரிலிருந்து... நம்மைக் காக்கும்... கம்பளி போல... எதிரிகளிடம் இருந்து... நாட்டைக் காக்கும்... இராணுவ வீரர் போல... தனிமையில் இருந்து... மனதைக் காக்கும்... இசைப் போல... கள்வர்களிடம் இருந்து... மக்களைக் காக்கும்... காவலர் போல... பசியிடமிருந்து... வயிற்றைக் காக்கும்... உணவைப் போல... கயவர்களின் கண்களிடம் இருந்து... மானத்தைக் காக்கும்... உடையைப் போல... வலிகளில் இருந்து... கால்களைக் காக்கும்... வாகனங்கள் போல... நோய்களின் தாக்கத்தில் இருந்து... உயிரைக் காக்கும்... மருந்துகள் போல... துன்பத்தில் இருந்து... நம்ம...

Koala karadi drawing for kids

Image
Koala bear drawing picture: This drawing picture specially for children.cute koala bear art drawing picture.More kids drawing pictures presented in our website. Kids draw your favorite animal and post it on our social media pages. Check social media pages in my profile. Thank you for visiting.... visit again... RiyAshok shades

National home appliance assurance day awareness poem

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இன்று தேசிய வீட்டு உபயோக பொருட்கள் உத்திரவாத நாள் இந்த நன்னாளில் உத்திரவாதம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த எளிமையான ஒரு கவிதையை பதிவிடுகிறேன் பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் நன்றி. தேசிய வீட்டு உபயோக பொருட்கள் உத்திரவாத நாள் விழிப்புணர்வு கவிதை ( February 10 - National home appliances assurance day awareness poem) இரவில் கண்ட கனவுகள்... பகலில்... நிலைப்பதில்லை... வானில் வரும் நிலவு... காலையில்... தெரிவதில்லை... பகலில் உதிக்கும் சூரியன்... இரவில்... இருப்பதில்லை... பொய்யான உறவுகள்... இறுதிவரை... வருவதில்லை... சுவற்றில் எழுதிய எழுத்துகள்... அழியாமல்... பதிவதில்லை... கடற்கரையில் பதிந்த சுவடுகள்... அலைகள் தாண்டி... பிழைப்பதில்லை... வெயிலில் வைத்த நீர்... ஒருபோதும்... உறைவதில்லை... கவலை கொண்ட கண்கள்... காந்தமாய்... ஈர்ப்பதில்லை... உப்பு கூடிப்போன உணவு... நாவில்... ருசிப்பதில்லை... கோபம் கொண்ட உதடுகள்... நற்சொல்... உரைப்பதில்லை... காரம் மிகுந்த...

Pizza day motivational Tamil kavithai

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். தேசிய பீட்சா தினம் குறித்த எளிமையான ஒரு கவிதையை பதிவிடுகிறேன் படித்து தங்கள் ஆதரவை தாருங்கள். தேசிய பீட்சா தினம் ( February 9 - National pizza day special poem) நெருப்பில் வாட்டினாலும்... கோபித்துக் கொள்வதில்லை... துண்டுத் துண்டாய் வெட்டினாலும்... உயிர் மாயவில்லை... கூறு போட்டுக் கொடுத்தாலும்... கவலை கொள்வதில்லை... பிய்த்துப் போட்டாலும்... பிரண்டு போவதில்லை... ஜவ்வாய் இழுத்தாலும்... சலித்துப் போவதில்லை... இதுதான் வாழ்க்கை... துன்பங்கள் வந்தால்... துவண்டு விடாதே... இன்பங்கள் வந்தால்... துள்ளிக் குதிக்காதே... இடர்கள் வந்தால்... தயங்கி விடாதே... தடைகள் வந்தால்... நின்று விடாதே... ஏளனப் பேச்சுக்கு... செவி கொடுக்காதே... வசவுப் பேச்சுக்கு... வழி விடாதே... விலகிச் செல்பவரிடம்... வலிய செல்லாதே... பசிக்கு மட்டும் அல்ல... ருசிக்கும் விருந்தாகும்... பீட்சா போல... தோல்விக்குப் பிறகு மட்டுமல்ல... வெற்றிக்குப் பிறகும்... போராடு... வாழ்க்கை உன் வசமே...! Poet - riyashok 

National kite flying day poem

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இன்று தேசிய பட்டம் பறக்கவிடும் நாள் பட்டம்  குறித்த எளிமையான ஒரு கவிதையை பதிவிடுகிறேன் பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் நன்றி. தேசிய பட்டம் பறக்கவிடும் நாள் ( February 8- National kite flying day Special poem): அறியாத வயதில்... உன் வாலைப் பிடித்தேன்... உயரம் தொட எண்ணிய உன்னைத் தடுத்தேன்... விட்டுவிட்டால் தொலைந்து விடுவாய் என்று எண்ணினேன்... இரண்டே குச்சிகளில்... மொத்த நம்பிக்கையும் வைத்தாய்... உனக்கும்... எனக்கும்... பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை... உன்னைப் போலத் தான் நானும்... மற்றவர் கைகளிலே அகப்பட்டுக் கிடக்கிறேன்... உண்மையான சுதந்திரம்... என்னவென்று அறிய நினைக்கிறேன்... காயிறால் நீ கட்டப்பட்டது போல்... நானும் கட்டுப்பட்டுக் கிடக்கிறேன்... கயிறால் அல்ல... கண்டிப்பினால்... மடை திறந்த வெள்ளம் போல்... இருவரும் உடைத்துக் கொண்டு... சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நாள்... வெகுதொலைவில் இல்லை... பட்டமோ... கனவோ... பிடித்து வைப்பதற்கு அல்ல... பறக்...

Safer internet day Tamil poem

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இன்று பாதுகாப்பான இணையதள நாள் இந்த நன்னாளில் பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்துவது குறித்த எளிமையான ஒரு கவிதையை பதிவிடுகிறேன் பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் நன்றி . பாதுகாப்பான இணையதள நாள்  ( safer internet day poem febuary- 6) மை தீட்டிய கண்கள்... தோடுகளுடன் கூடிய காதுகள்... சாயம் பூசிய உதடுகள்... மெஹந்தி நிரம்பிய கைகள்... வண்ணம் பூட்டிய நகங்கள்... பரப்பி விடப்பட்ட தலைமுடிகள்... இப்படி உடலின் ஒவ்வொரு அங்கமாய் புகைப்படம் எடுத்து... ஃபேஸ்புக்... வாட்ஸ்அப்... இன்ஸ்டாகிராம்... டுவிட்டர்... போன்ற அனைத்து தளங்களிலும் அப்லோட் செய்து... சோகத்தை டவுன்லோட் செய்வதைவிட... வாழ்க்கையை ரீலோட் செய்து... அதில் அன்பை அப்லோட் செய்து... நம்பிக்கையை டவுன்லோட் செய்தால்... வாழும் காலம் யாவும்... மகிழ்ச்சி ஃபுல் லோட் ஆகவே இருக்கும்... ஆகவே... வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்தி... வளமாய் வாழ்வோம்...! Poet - riyashok 

News paper, hope, god Tamil kavithai

தமிழ் கவிதைகள்  இந்த கவிதையில் நட்பு, காதல், விரும்பிய ஒருவரின் பிரிவு ஆகிய தலைப்புகளில் கவிதைகள் எழுதியுள்ளேன். படித்து தங்களுக்கு நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். செய்தித்தாள் வீட்டு விஷயங்கள் கூட அறிந்து கொள்ள அனுமதிக்கப்படாத எனக்கு... உலக விஷயங்களை பரிச்சயம் ஆக்கினாய்... இருண்டு கிடந்த அறிவின் அறைகளில் அறிவென்னும் ஒளி ஏற்றினாய்... காண்பவர் கண்களுக்குக் காகிதமாய்த் தெரிந்தாலும்... உன்னைக் களைபவர் கண்களுக்குக் கோபுரம் ஆகிறாய்... அறிவிலியும் ஞானியானான் உன்னால்... விளக்கின் ஒளியில் பயிலும் மாணவர்களுக்கு... என்றும் நீ அணையா விளக்கே...! Poet - riyashok  நம்பிக்கை  கோபுரங்கள் சாய்ந்தாலும் சாய்வதில்லை... வானம் வீழ்ந்த போதும் வீழ்வதில்லை... கடல் நீர் வற்றினாலும் வற்றுவதில்லை... நெருப்பாலும் அழிவதில்லை... நீராலும் அணைவதில்லை... தோற்றாலும் துவண்டு விடுவதில்லை... நம்பிக்கை...! Poet - riyashok  கடவுள்  கோவில்களும்... கோபுரங்களும்... அலங்காரங்களும்... ஆடைகளும்... ஆபரணங்களும்... நம்பிக்கைகளும்... மூடநம்பிக்கைகளும்... வேண்டுதல்களும்... காணிக்கைகளும்... படைத்தவன...

Friendship, love, Missing Tamil kavithai

 தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இந்த கவிதையில் நட்பு, காதல், விரும்பிய ஒருவரின் பிரிவு ஆகிய தலைப்புகளில் கவிதைகள் எழுதியுள்ளேன். படித்து தங்களுக்கு நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நட்பு  கல்லூரியில் கால் வைத்த முதல் அடியில் மனதில் கொண்ட பயம்... புது உலகம்... புதிய வாழ்க்கை... புதிய மனிதர்கள்... ஆனால் அந்த ஆண்டுகள் தந்த மாற்றங்கள்... களிமண் போல் இருந்த என்னை சிற்பமாய் வடித்தது... வடிநீராய் இருந்த என்னை குடிநீராக மாற்றியது... புதைந்து கிடந்த என் திறமைகளைத் தோண்டி எடுத்து விட்டது... வாழ்க்கையின் பாதையைக் காட்டியது... புத்தம் புது நண்பர்கள்... மனம் நிறைய மகிழ்ச்சி... சின்னச் சின்ன சண்டைகள்... பரிமாறிக் கொண்ட உண(ர்)வுகள்... நகைச்சுவை நேரங்கள்... கிண்டல்கள்... கேலிகள்... சேட்டைகள்... அரட்டைகள்... நண்பர்கள் போன்ற ஆசிரியர்கள்... துன்பம் தர ஆயிரம் இடங்களும் உறவுகளும் வந்த போதும்... இன்பம் தரும் சோலையாய்த் திகழ்ந்தது... கல்லூரிக் காலமே...!      Poet - riyashok நட்பு பிறந்த...

Digital Van drawing steps

Image
  V-Van படி 1: மகிழுந்து வரைவதற்கு முதலில் பென்சிலால் எளிமையாக ஒரு செவ்வக வடிவ கட்டம் வரைய வேண்டும். செவ்வகத்தின் அடிப்பகுதியில் உள்ள கோட்டை அழித்து சக்கரம் வரைய இரண்டு அரைவட்ட வில் வரைய வேண்டும். படி 2: அடுத்ததாக சக்கரம் வரைய இரண்டு வட்டங்களை வரைய வேண்டும். படி 3: மகிழுந்து கதவுகளை வரைய படத்தில் உள்ளதுபோல் இரண்டு கட்டங்களை வரைய வேண்டும். படி 4: அடுத்ததாக மகிழுந்து கண்ணாடிகளை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 5: மகிழுந்து வரைபடம் நிறைவுபெற்றது. தற்போது உங்களுக்கு பிடித்தமான வண்ணத்தை தேர்வு செய்து மகிழுந்து மீது தீட்ட வேண்டும். படி 6: மகிழுந்து சக்கரத்திற்கு கருப்பு நிற வண்ணம் தீட்ட வேண்டும்.

Riyashokshades Umbrella alphabet drawing

Image
  Umbrella   படி 1: குடை வரைவதற்கு முதலில் அரைவட்ட வடிவில் படத்தில் உள்ளது போன்ற வடிவத்தை பென்சிலால் வரைய வேண்டும். படி 2: குடையின் மேற்புறம் இரண்டு கோடுகள் வரைய வேண்டும்.  படி 3: அடுத்ததாக குடையில் உள்ள கம்பிகளை வரைவதற்காக சில கோடுகளை குடையின் மீது வரைய வேண்டும். படி 4: தற்போது நீளமான இரண்டு கோடுகள் வரைந்து குடையின் கைப்பிடியை நிறைவு செய்ய வேண்டும். படி 5: குடை வரைந்து முடித்த பிறகு உங்களுக்கு பிடித்தமான வண்ணத்தை தேர்வு செய்து குடை மீது தீட்ட வேண்டும்.

Riyashokshades alphabet drawing - Tap

Image
  T- Tap படி 1: தண்ணீர் குழாயின் வடிவத்தை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 2: அடுத்ததாக தண்ணீர் குழாயின் கைப்பிடியை வரைய வேண்டும். படி 3: தண்ணீர் குழாயின் சில பகுதிகளில் ஒரு வண்ணம் மற்றும் பிற பகுதிகளில் ஒரு வண்ணம் தீட்ட வேண்டும். படி 4: உங்களுக்கு பிடித்தமான வண்ணத்தை தேர்வு செய்து தண்ணீர் குழாயின் மீது தீட்ட வேண்டும்.

Riyashokshades Swing Alphabet drawing

Image
Swing  படி 1: ஊஞ்சல் வரைவதற்கு முன் ஒரு மரத்தின் வடிவத்தை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 2: மரத்தின் கிளையில் ஊஞ்சல் கயிற்றை வரைய இரண்டு கோடுகளை வரைய வேண்டும். படி 3: மரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் பலகை ஒன்றை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 4: அடுத்ததாக ஊஞ்சல் மற்றும் மரத்திற்கு பொருத்தமான நிறத்தை தேர்வு செய்து தீட்ட வேண்டும்.

Riyashokshades Rat Alphabet drawings

Image
  Rat படி 1: எலி வரைவதற்கு முதலில் பென்சிலால் எளிமையாக எலியின் உருவத்தை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். பிறகு எலியின் கண்கள் மற்றும் காதுகளை வரைய வேண்டும். படி 2: அடுத்ததாக எலியின் மூக்கு மற்றும் வாய் பகுதியை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 3: தற்போது எலியின் கைகளை வரைய வேண்டும். படி 4: பிறகு எலியின் கால்கள் மற்றும் வால் ஆகியவற்றை வரைய வேண்டும். படி 5: அடுத்ததாக எலியின் மீது வண்ணம் தீட்ட வேண்டும். படி 6: எலியின் கண்களுக்கு கருப்பு நிறம் மற்றும் காதுகளுக்கு சிவப்பு நிறம் தீட்ட வேண்டும்.

Riyashokshades quill Alphabet drawings

Image
  Quill  படி 1: இறகு வரைவதற்கு முதலில் பென்சிலால் மெல்லிய கோடு சாய்வாக வரைய வேண்டும். படி 2: படத்தில் உள்ளதுபோல் இறகு தூரிகை வரைய வேண்டும். படி 3: இறகு மீது சில கோடுகளை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 4: அடுத்ததாக இறகு மீது உங்களுக்கு விருப்பமான வண்ணங்களை தேர்வு செய்து தீட்ட வேண்டும்.

Riyashokshades Alphabet drawings Pen

Image
P-Pen படி 1: படத்தில் உள்ளதுபோல் இரண்டு கோடுகளை வரைந்து இணைக்க வேண்டும்.   படி 2: அடுத்ததாக பேனாவின் முள் வரைய வேண்டும். படி 3: பேனாவின் மீது சில கோடுகளை படத்தில் உள்ளதுபோல் வரைந்து இணைக்க வேண்டும். படி 4: உங்களுக்கு பிடித்த வண்ணத்தை பேனாவின் மீது கொடுக்கலாம். படி 5: பேனாவின் மீது படத்தில் உள்ளதுபோல் வேறு ஒரு வண்ணத்தை கொடுங்கள் அது வரைபடத்தின் அழகை மேலும் அதிகரிக்கும்.

Alphabet drawing O-orange

Image
O-orange  படி 1: ஆரஞ்சு வரைவதற்கு முதலில் பென்சிலால் எளிமையாக ஒரு வட்டம் வரைய வேண்டும். படி 2: ஆரஞ்சு பழம் மீது இரண்டு கோடுகளை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும்.   படி 3: அடுத்ததாக ஆரஞ்சு பழத்தின் இலை வரைய வேண்டும். படி 4: இலைக்கு உள்ளே உள்ள வட்டத்தின் கோட்டை அழிக்க வேண்டும்  படி 5: ஆரஞ்சு பழத்தின் மீது ஆரஞ்சு நிறத்தில் வண்ணம் தீட்ட வேண்டும். படி 6: ஆரஞ்சு பழத்தின் இலைக்கு பச்சை நிறத்தில் வண்ணம் தீட்ட வேண்டும். படி 7: அடுத்ததாக ஆரஞ்சு பழத்தின் மீது சில கோடுகளை வெள்ளை நிறத்தில் வரைய வேண்டும் இது பழத்திற்கு இயற்கையான தோற்றத்தை கொடுக்கும்.