National Inventor day special poem
- Get link
- X
- Other Apps
தமிழ் கவிதைகள்
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இன்று தேசிய கண்டுபிடிப்பாளர்கள் தினம் . ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஏதோ ஒரு நல்ல எண்ணத்தில் உருவாக்கப்பட்டவை அவற்றை சரியான வழியில் பயன்படுத்தி பயன்பெறுங்கள். இன்று தங்களுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை கண்டுபிடிப்புகளுக்காக செலவு செய்த கண்டுபிடிப்பாளர்களை போற்றும் வகையில் எளிமையான ஒரு கவிதையை பதிவிடுகிறேன் பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் நன்றி.
தேசிய கண்டுபிடிப்பாளர்கள் தினம் ( February 11- National Inventor day special poem)
பறக்கும் பறவை...
பறப்பதைக் கண்டு வியந்து...
தானும் பறக்கவே...
விமானம் படைத்தான்...
நீந்தும் மீன்...
மூழ்காமல் மிதக்கும்...
வித்தையைக் கண்டு...
தானும் மிதக்க எண்ணியே...
படகைப் படைத்தான்...
எங்கேயோ தொலைவில்...
திக்குத் தெரியாமல்...
தவித்துக் கிடக்கும் உறவுகளை...
இணைக்கும் நோக்கில்...
அலைபேசி படைத்தான்...
அம்மியில் அரைத்து...
ருசியாய் உண்டாலும்...
வலிக்கும் கைகளை...
மனதில் கொண்டு...
மிக்சியைப் படைத்தான்...
நடந்து நடந்து...
கால்கள் ஆரோக்கியமாய் இருந்த போதும்...
அதன் வேதனையை...
மனதில் கொண்டு...
வாகனங்கள் படைத்தான்...
நேரம் காட்ட...
வானில் இயற்கையாய்...
சூரியன் இருந்தாலும்...
துல்லியமாய் கணிக்க...
கடிகாரம் படைத்தான்...
முட்கள் குத்திக் குத்தி...
காயம்பட்ட பாதங்கள்...
காயங்கள் ஆறவே...
காலணிகள் படைத்தான்...
சிறு நோயால்...
ஆட்கொள்ளப்பட்டு...
உயிர் கூட போகும் காலம் மாறவே...
மருந்துகள் படைத்தான்...
இன்பமோ...
துன்பமோ...
ஏக்கமோ...
ஏமாற்றமோ...
மனம் அலைபாயும்...
அனைத்து சூழ்நிலையிலும்...
அதை சாந்தபடுத்தவே...
கற்பனை ஊரும்...
கவிகள் படைத்தான்...
இரவில்...
இருட்டில்...
முட்டி மோதும் நிலை மாற...
விளக்குகள் படைத்தான்...
வெயிலிலும்...
மழையிலும்...
குளிரிலும்...
கலங்காமல் வாழ...
வீடுகள் படைத்தான்...
வான் முதல்...
நிலம் வரை...
ஒவ்வொரு அணுவையும்...
துளைத்து...
ஒவ்வொரு கருவியும்...
சாதனமும்...
நித்தம் படைக்கும்...
ஒவ்வொரு படைப்பாளியும்...
ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய சாதனையார்களே...
அங்கீகாரம் மறுக்கப்பட்டு...
அளிக்கப்படாமல்...
உலகின் ஒவ்வொரு மூலையிலும்...
புதைந்து கிடக்கும்...
அனைத்து படைப்பாளிகளையும்...
போற்றும் வகையில்...
இந்நாளை கொண்டாடி வாழ்த்துவோம்...!
Poet - riyashok
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.