International Day against Child Soldiers special Tamil kavithai
- Get link
- X
- Other Apps
தமிழ் கவிதைகள்
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இன்று சர்வதேச குழந்தை சிப்பாய் ஒழிப்பு தினம். குழந்தை சிப்பாய் முறையை கைவிடுவதை வலியுறுத்தி இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. குழந்தைகள் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய இந்த நல்ல நாளை போற்றும் வகையில் எளிமையான ஒரு கவிதையை பதிவிடுகிறேன் பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் நன்றி.
சர்வதேச குழந்தை சிப்பாய் ஒழிப்பு தினம் ( February 12 - International day against child soldiers Special Tamil poem)
பேனா பிடிக்க வேண்டிய...
பிஞ்சு விரல்கள்...
ஆயுதம் பிடிக்கிறது...
பாடம் படிக்க வேண்டிய...
இளம் வயது...
போரைப் படிக்கிறது...
முத்து முத்தாய்...
வார்த்தைகள் சிதறும்...
மழலைப் பேச்சு...
மௌனமாய் மாறியது...
சீருடை அணிய வேண்டிய...
சின்னஞ்சிறு மேனி...
போருடை அணிகிறது...
எதிர்காலத்தை எண்ணி...
கனவு காண வேண்டிய...
கயல் விழிகள்...
போர்க்களத்தில்...
எதிரிகளைக் காண்கிறது...
தாமரை இதழ் மேல்...
தண்ணீர் போல்...
தரையில் படாமல்...
மிதக்க வேண்டிய...
மலரடிகள்...
போர் மண்ணில்...
கறை படிகிறது...
படியக் கிடக்க வேண்டிய...
மொட்டைத் தலையில் முளைத்த...
புதிய முடிகள்...
பரட்டையாய்...
செம்மண் மண்டிக் கிடக்கிறது...
பசிக்கு...
பால் பருகி...
பழம் உண்டு...
பெருத்துக் கிடக்க வேண்டிய...
ஒரு ஜான் வயிறு...
பட்டினியில்...
எலும்பின் தடத்தைப் பதிக்கிறது...
தழைக்க வேண்டிய...
சிறந்த எதிர்காலம்...
தரிசாய்ப் போகிறது...
சொகுசாய் வாழ வேண்டிய...
சொர்க்கமான வாழ்க்கை...
நாசமாய் ஆகிறது...
வாழ்வை அனுபவிக்க வேண்டிய...
இளம் வயது...
வீணாய்ப் போகிறது...
போரில் தொலைந்த வாழ்க்கை...
மீட்கும் காலம் வரும் வரை...
உயிரைக் காத்து நின்று விடு...
பிஞ்சு வயதில்...
நஞ்சுக் களத்தில்...
தூக்கி வீசப்பட்ட உன்னை...
மீட்டுச் செல்ல வந்த...
இந்நன்னாளில்...
உன் வாழ்க்கை சிறப்புற...
என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...!
Poet - riyashok
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.