தமிழ் கவிதைகள்
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இந்த கவிதையில் நட்பு, காதல், விரும்பிய ஒருவரின் பிரிவு ஆகிய தலைப்புகளில் கவிதைகள் எழுதியுள்ளேன். படித்து தங்களுக்கு நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நட்பு
கல்லூரியில் கால் வைத்த முதல் அடியில் மனதில் கொண்ட பயம்...
புது உலகம்...
புதிய வாழ்க்கை...
புதிய மனிதர்கள்...
ஆனால் அந்த ஆண்டுகள் தந்த மாற்றங்கள்...
களிமண் போல் இருந்த என்னை சிற்பமாய் வடித்தது...
வடிநீராய் இருந்த என்னை குடிநீராக மாற்றியது...
புதைந்து கிடந்த என் திறமைகளைத் தோண்டி எடுத்து விட்டது...
வாழ்க்கையின் பாதையைக் காட்டியது...
புத்தம் புது நண்பர்கள்...
மனம் நிறைய மகிழ்ச்சி...
சின்னச் சின்ன சண்டைகள்...
பரிமாறிக் கொண்ட உண(ர்)வுகள்...
நகைச்சுவை நேரங்கள்...
கிண்டல்கள்...
கேலிகள்...
சேட்டைகள்...
அரட்டைகள்...
நண்பர்கள் போன்ற ஆசிரியர்கள்...
துன்பம் தர ஆயிரம் இடங்களும் உறவுகளும் வந்த போதும்...
இன்பம் தரும் சோலையாய்த் திகழ்ந்தது...
கல்லூரிக் காலமே...!
Poet - riyashok
நட்பு
பிறந்த இடம் வேறு...
வளர்ந்த இடம் வேறு...
எங்கோ பிறந்து...
எங்கோ வளர்ந்து...
பள்ளியில் வந்து இணைந்தோம்...
பள்ளிப் பருவம் பல இன்னல்களைத் தந்த போதும்...
என் உற்ற நண்பனாய் எல்லாவற்றையும் பகிர்ந்தாய்...
நான் சாய உன் தோள் உள்ள வரை...
துன்பத்திலும் துவண்டு விட மாட்டேன்...
தோழா...
உயிருள்ள வரை உன் கைகோர்த்து நடக்கும் வரம் தா...!
Poet- riyashok
நட்பு
ஆயிரம் ஜன்னல்கள் வைத்தாலும்...
வீட்டுக்கு வாசல் ஒன்று தேவை...
அதுபோல...
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்...
எனக்கு உன் நட்பு தேவை...!
Poet- riyashok
காதல்
சின்னச் சின்ன சிணுங்கள்கள்...
செல்லமாய்க் கொஞ்சம் கொஞ்சல்கள்...
இடையில் சற்றே ஊடல்கள்...
பிரிவினால் வரும் ஏக்கங்கள்...
பிரிவின் முடிவில் கூடல்கள்...
நீயற்ற வாழ்வை எண்ணி ஐயங்கள்...
ஆயிரமாயிரம் கனவுகள்...
அனைத்தும் நினைவாக...
உன்னுடனான காதல்...
கைகூடும் நாள் எண்ணும் என் எதிர்பார்ப்புகள்...
சுகமான சுமைகளே...!
Poet - riyashok
காதல்
உயிருள்ள காலம் வரையல்ல...
நீ உள்ள காலம் வரை...
நிலைத்திருப்பேன்...
நீங்காத அன்போடு...!
Poet - riyashok
அன்பு
கல்லுக்குள் வாழும் தேரைக்குக் கிடைக்கும் உணவைப் போன்றது...
உன்னுள் வாழும் எனக்குக் கிடைக்கும் அன்பு...
Poet - riyashok
பாரம்
விரலுக்கு நகமும்...
தண்டுக்குக் கிளையும்...
பூவுக்கு இதழும்...
விழிக்கு இமையும்...
உனக்கு நானும்...
எனக்கு நீயும்...
நமக்கு அன்பும்...
ஒரு போதும் பாரமில்லை...!
Poet - riyashok
பிரிவு
வாசமில்லா மலரைப் போல் நான் ஆகிறேன்...
நீ தொலைவில் இருக்கும் போது...
உடலில் பட்ட காயங்கள் கூட வலிப்பதில்லை...
உன் பிரிவு இதயத்தில் இருந்து வலிக்கிறது...
கடலைச் சேரும் நதியைப் போல்...
உனைச் சேர ஏங்கும் என் மனம்...
என் ஏக்கம் நீங்க நீ என்னிடம் வந்து சேரும் நாள் என்றோ...?
Poet - riyashok
நிதானம்
மரங்களில் குரங்குகள் போல...
தாவித் திரியும் மனம்...
கட்டிப்போடும் கயிறு...
நிதானம் மட்டுமே...!
Poet - riyashok
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.