தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள். அம்மா அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok அப்...
National kite flying day poem
- Get link
- X
- Other Apps
தமிழ் கவிதைகள்
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இன்று தேசிய பட்டம் பறக்கவிடும் நாள் பட்டம் குறித்த எளிமையான ஒரு கவிதையை பதிவிடுகிறேன் பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் நன்றி.
தேசிய பட்டம் பறக்கவிடும் நாள் ( February 8- National kite flying day Special poem):
அறியாத வயதில்...
உன் வாலைப் பிடித்தேன்...
உயரம் தொட எண்ணிய உன்னைத் தடுத்தேன்...
விட்டுவிட்டால் தொலைந்து விடுவாய் என்று எண்ணினேன்...
இரண்டே குச்சிகளில்...
மொத்த நம்பிக்கையும் வைத்தாய்...
உனக்கும்...
எனக்கும்...
பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை...
உன்னைப் போலத் தான் நானும்...
மற்றவர் கைகளிலே அகப்பட்டுக் கிடக்கிறேன்...
உண்மையான சுதந்திரம்...
என்னவென்று அறிய நினைக்கிறேன்...
காயிறால் நீ கட்டப்பட்டது போல்...
நானும் கட்டுப்பட்டுக் கிடக்கிறேன்...
கயிறால் அல்ல...
கண்டிப்பினால்...
மடை திறந்த வெள்ளம் போல்...
இருவரும் உடைத்துக் கொண்டு...
சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நாள்...
வெகுதொலைவில் இல்லை...
பட்டமோ...
கனவோ...
பிடித்து வைப்பதற்கு அல்ல...
பறக்க விடுவதற்கே...
மேலே மேலே பறந்து...
சிகரம் தாண்டி...
வானம் தொடுவோம்...!
Poet - riyashok
- Get link
- X
- Other Apps
Popular posts from this blog
Bharathiyar drawing for kids
#Salute our freedom fighter Subramaniya Bharathiyar. #He is pride of our nation. He wrote poems for freedom fight. #His part of national freedom work is unforgettable. #We are happy to share our hero. #He done more work for women freedom and their education... # RiyAshoK shades அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே... உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்... அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே... -மகாகவி பாரதியார். நன்றி மீண்டும் வருக...
Anti-Child labor drawing
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின வரைபடம்: வணக்கம் நண்பர்களே, ஏழை குடும்பத்தில் பிறந்த சிறுவர்கள் தங்கள் வீட்டில் உள்ள வறுமையால் வேலைக்கு செய்கிறார்கள். இதனை தடுக்க அரசு சட்டம் இயற்றி காத்துவருகிறது. இருப்பினும் லாப நோக்கில் சிறுவர்களை அடிமையாக்கி வேலைவாங்கும் குற்றவாளிகள் இன்றும் உள்ளனர். அவர்களிடம் இருந்து குழந்தைகளை மீட்டு கல்வி கற்க வைப்பது அரசின் பணி. இதனை நினைவுபடுத்த குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. RiyAshoK shades Learn By this affiliate link god bless you: Drawing class: https://86c79drsjdvhwl9kk90q0olwbf.hop.clickbank.net/ Piano class : https://1c5cefklmqo8yybdl3xi5yvkak.hop.clickbank.net/
Koala karadi drawing for kids
Koala bear drawing picture: This drawing picture specially for children.cute koala bear art drawing picture.More kids drawing pictures presented in our website. Kids draw your favorite animal and post it on our social media pages. Check social media pages in my profile. Thank you for visiting.... visit again... RiyAshok shades
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.