Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Umbrella Tamil kavithai for school homework

தமிழ் கவிதைகள்

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இன்று தேசிய குடை தினம். குடை உடைய சிறப்பு குறித்த எளிமையான ஒரு கவிதையை பதிவிடுகிறேன் பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் நன்றி.

தேசிய குடை தினம் ( February 10 - National umbrella day)

தூசுகளில் இருந்து...
விழியைக் காக்கும்...
இமை போல...

முட்களிடமிருந்து...
பாதங்களைக் காக்கும்...
காலணிகள் போல...

வெப்பத்தில் இருந்து...
உடலைக் காக்கும்...
நீரைப் போல...

குளிரிலிருந்து...
நம்மைக் காக்கும்...
கம்பளி போல...

எதிரிகளிடம் இருந்து...
நாட்டைக் காக்கும்...
இராணுவ வீரர் போல...

தனிமையில் இருந்து...
மனதைக் காக்கும்...
இசைப் போல...

கள்வர்களிடம் இருந்து...
மக்களைக் காக்கும்...
காவலர் போல...

பசியிடமிருந்து...
வயிற்றைக் காக்கும்...
உணவைப் போல...

கயவர்களின் கண்களிடம் இருந்து...
மானத்தைக் காக்கும்...
உடையைப் போல...

வலிகளில் இருந்து...
கால்களைக் காக்கும்...
வாகனங்கள் போல...

நோய்களின் தாக்கத்தில் இருந்து...
உயிரைக் காக்கும்...
மருந்துகள் போல...

துன்பத்தில் இருந்து...
நம்மைக் காக்கும்...
நண்பர்கள் போல...

மழையில் மட்டுமல்லாது...
வெயிலிடம் இருந்தும்...
நம் தலையைக் காத்துக் காத்து...
தன் கடமையை...
சரிவர செய்து முடித்து...
மூலையில் முடங்கி...
காய்ந்துக் கிடக்கும்...
குடையை...
மறவாது எண்ணி மகிழ்வோம்...!

Poet - riyashok 

Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Anti-Child labor drawing

Koala karadi drawing for kids