ஹாய் குழந்தைகளே இன்றைய வகுப்பில் லீச் பழம் வரைவது எப்படி என கற்றுக்கொள்வோம். இதற்கு முந்தைய வகுப்பில் வாழைப்பழம் வரைய கற்றுக்கொண்டீர்கள். வாருங்கள் குழந்தைகளே இன்றைய வகுப்பிற்குள் செல்வோம்.
படி 1:
- முதலில் உங்கள் வரைபட புத்தகம் மற்றும் பென்சில் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.
- நீள்வட்டம் ஒன்றை வரையுங்கள்.
- இப்போது அதன் மேல் பகுதியை அழித்துவிட்டு ஒரு வளைவினால் இரண்டு கோடுகளையும் மூடுங்கள்.
- அடுத்ததாக பழத்தின் கீழ்பகுதியை அழித்துவிட்டு சற்று அகலமான வளைவினால் மூடுங்கள்.
இப்போது உங்கள் வரைபடம் கீழே உள்ளவாறு வடிவத்தை பெற்றிருக்கும்.
படி 2:
லீச் பழத்தின் வடிவத்தை வரைந்துவிட்டீர்கள். இப்போது பழத்தின் இலை பகுதியை வரையலாம்.
- முதலில் இலையின் நரம்பு பகுதியை வரையலாம்.
- இப்போது இலையின் மேல் பகுதியை இலை நரம்பிற்கு மேலே சற்று அகலமாக வரையுங்கள்.
- அடுத்ததாக நரம்பின் கீழ்பகுதியை சற்று அகலம் குறைவாக வரையவும்.
லீச் பழத்தின் இலை வடிவத்தை வரைந்துவிட்டீர்கள்.
படி 3:
- இப்போது லீச் பழத்தை முப்பரிமான வடிவில் காட்டும் பரப்பை வரையப்போகிறோம்.
- லீச் பழத்தின் மேல் பகுதியில் தொடங்கி கீழ்பகுதியில் முடியுமாறு வட்டவடிவ வளைவு ஒன்றை வரையுங்கள்.
படி 4:
- இலை மற்றும் பழத்தின் பரப்பு ஒன்றாக உள்ள இடத்தில் பழத்தின் பரப்பை கீழே உள்ளவாறு அழியுங்கள்.
- பழத்தின் காம்பு பகுதியில் வண்ணம் தீட்டுங்கள்.
படி 5:
- அடுத்ததாக இலையின் நரம்பிடைப்பகுதி வரையலாம்.
- மைய நரம்பிலிருந்து இலையின் பரப்பு எல்லை வரைக்கும் சாய்வான கோடுகள் வரையுங்கள்.
- முதலில் இலையின் மேற்புரத்திலும் பிறகு கீழ்ப்புறத்திலும் வரையவும்.
- இலையின் எல்லையை அச்சாக வண்ணம் தீட்டுங்கள்.
படி 6:
- இலை பகுதியை இப்போது வண்ணம் தீட்டவும்.
- பென்சிலை சாய்வாக பிடித்து இலையின் பரப்பு எல்லைக்குள் மட்டும் வண்ணம் தீட்டுங்கள்.
- இலை இயற்கையான தோற்றத்தை பெற்றுவிட்டது.
படி 7:
- இலைக்கு பின் பகுதியில் உள்ள பழத்தின் மீது படத்தில் உள்ளவாறு வண்ணம் தீட்டுங்கள்.
- அச்சாக மற்றும் மெல்லியதாக வண்ணம் தீட்டியுள்ள இடங்களை கவனமாக வண்ணம் தீட்டுங்கள் .
படி 8:
- இப்போது இலையின் கீழ்பகுதியில் உள்ள பழத்தின் மீது வண்ணம் தீட்டுங்கள்.
படி 9:
- பழத்தின் முன்னால் உள்ள பகுதியை மூன்றாக மெல்லிய கோடு மூலம் பிரித்துக்கொள்ளுங்கள்.
- இடையில் உள்ள பகுதியை விடுத்து மீதமுள்ள இரண்டு பகுதியில் வண்ணம் தீட்டுங்கள்.
- கீழே உள்ள படத்தை பார்த்து அதுபோல வண்ணம் தீட்டவும்.
படி 10:
- வண்ணம் தீட்டப்பட்ட பகுதிகளில் கீழே உள்ளவாறு நன்றாக வண்ணம் தீட்டுங்கள்.
- வெவ்வேறு வண்ணங்கள் தீட்ட வெவ்வேறு பென்சில் பயன்படுத்துங்கள் .
- வண்ணம் தீட்டும்போது கோடுகள் தெரியாமல் நன்றாக வண்ணம் தீட்டுங்கள் .
படி 11:
- அருமையாக லீச் பழத்தை முப்பரிமான வடிவில் வரைந்துவிட்டீர்கள் குழந்தைகளே வாழ்த்துக்கள்.
- கடைசியாக பழத்தின் கீழே அதன் நிழல் படுவதுபோன்று வரையுங்கள்.
இப்போது உங்கள் வரைபடம் முழுமையுற்றது.
குழந்தைகளே இன்றைய வகுப்பில் லீச் பழத்தை வரைய கற்றுக்கொண்டோம். அடுத்த வகுப்பில் மற்றுமொரு வரைபடத்தை வரைய கற்றுக்கொள்வோம் இத்துடன் இன்றைய வகுப்பு முடிந்தது.
தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக. எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் பார்க்க
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.