வாருங்கள் குழந்தைகளே இன்றைக்கு நாம் வரையப்போகும் படம் மாம்பழம். உங்களுக்கும் மாம்பழம் மிகவும் பிடிக்கும் அல்லவா. வாருங்கள் மாம்பழம் படிப்படியாக வரைவது எப்படி என கற்றுக்கொள்வோம்.
படி 1:
குழந்தைகளே உங்கள் பென்சில் மற்றும் வெள்ளை காகிதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மாம்பழம் வடிவத்தை அனைவரும் பார்த்திருப்போம் முதலில் மெல்லிய வளைவான கோடு ஒன்றை வரையுங்கள் (அதி பரவளைய வடிவம்) கீழே உள்ள படத்தை போல.
படி 2:
அதி பரவளையத்தை மூடுவது போன்று அதற்ற்கு எதிர் பக்கத்தில் மற்றுமொரு அதிபரவளையம் வரையுங்கள். கீழ் பகுதியை சிறிய வளைவினால் மூடுங்கள்.
படி 3:
இப்போது மேலே உள்ள இரண்டு விளிம்புகளையும் சிறிய வளைவினால் மூடுமாறு வரையுங்கள். மாம்பழம் வடிவத்தை சரியாக வரைந்துவிட்டீர்கள். இப்போது மாம்பழத்தை தாங்க காம்பு பகுதியை வரைவோம். மாம்பழம் மேல்பகுதியில் இரண்டு சிறிய கோடுகள் வரைந்து கீழே உள்ளது போல அதை இணையுங்கள்.
படி 4:
மாம்பழம் வடிவத்தை வரைந்துவிட்டீர்கள். இப்போது இலைகளை தாங்கும் இலை மைய நரம்பை கீழே உள்ளவாறு இரண்டு பக்கத்திலும் வரையுங்கள்.
படி 5:
இப்போது மைய நரம்பை மூடுவது போன்று இலையின் பரப்பு எல்லையை வரையுங்கள்.
படி 6:
அடுத்ததாக இலையின் நரம்பு பகுதியை வரையப்போகிறோம். முதலில் மெல்லிய கோடுகள் வரைந்து பின்னர் அதன் மீது அழுத்தி வரையுங்கள்.
படி 7:
மேலே வரைந்தது போல மற்றுமொரு இலையின் நரம்புகளையும் கீழே உள்ளது போல வரையுங்கள்.
படி 8:
மாம்பழம் மற்றும் இலை பகுதியை வரைந்துவிட்டீர்கள். இலை இயற்கையான தோற்றம் பெற அதன் மீது மெல்லியதாக வண்ணம் தீட்டுங்கள் (இலையின் பரப்பு எல்லைக்குள் மட்டும் வண்ணம் தீட்டுங்கள்).
படி 9:
இப்போது இலையில் வண்ணம் தீட்டியது போல மாம்பழம் பரப்பு எல்லைக்குள் மட்டும் வண்ணம் தீட்டுங்கள்.
படி 10:
மாம்பழத்தின் கீழே சிறியதாக வண்ணம் தீட்டுங்கள். இது மாம்பழத்தின் நிழல் இப்போது உங்கள் வரைபடம் பார்க்க இயற்கையாக உள்ளது.
குழந்தைகளே இன்றைய வகுப்பில் மாம்பழம் வரைவது எப்படி என கற்றுக்கொண்டீர்கள். அடுத்த வகுப்பில் மற்றுமொரு வரைபடத்தை வரைய கற்றுக்கொள்வோம்.
இது போன்ற பல்வேறு வரைபடங்களை வரைய கற்றுக்கொள்ள இந்த பக்கத்தை தொடர்ந்து பாருங்கள் குழந்தைகளே.
பொது அறிவு வினா:
1. இந்தியாவின் பழக்கின்னம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?
விடை: இமாச்சல பிரதேசம்
2. உலகின் பழக்கின்னம் என்று அழைக்கப்படும் நாடு?
விடை: இங்கிலாந்து
தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக. எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் சிலவற்றை பார்க்க ,
- ஆப்பிள் வரைபடம் பார்க்க
- லீச் பழம் வரைய கற்றுக்கொள்ள
- ஆரஞ்சு பழம் வரைய கற்றுக்கொள்ள
- வாழைப்பழம் வரைய கற்றுக்கொள்ள
Learn By this affiliate link god bless you:
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.