Red Mercury tv, radio fact in tamil சிவப்பு பாதரசம்
- Get link
- X
- Other Apps
சிவப்பு பாதரசம் என்றால் என்ன ? இது கோடிக்கணக்கில் விற்க காரணம் என்ன ? சிவப்பு பாதரசத்திற்கு உண்மையில் சக்திகள் உள்ளதா ? சிவப்பு பாதரசம் பற்றி கூறப்படும் கதைகளும் உண்மையான அறிவியல் விளக்கங்களையும் இந்த பதிவில் பார்ப்போமா ?
சிவப்பு பாதரசம் எனப்படும் உலோகம் திரவ நிலையில் காணப்படும் உலோகம், இது அணு ஆயுதங்களில் பயன்படுகிறது என்று பல கதைகள் யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவதை பார்த்திருப்பீர்கள்.
இந்த சிவப்பு பாதரசத்தை வீட்டில் வைத்திருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம், இதனை காயங்கள் மீது வைத்தால் அனைத்து காயங்களும் குணமாகும், இந்த சிவப்பு பாதரசம் அதிர்ஷ்டம் நிறைந்தது என்னும் பல கதைகள் செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் பரவிவருகிறது.
சிவப்பு பாதரசம் விலை என்னவாக இருக்கும் ?
இந்த சிவப்பு பாதரசம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என்கிறார்கள் இதனை வைத்து ஏமாற்றும் மோசடிகாரர்கள்.
உண்மையில் சிவப்பு பாதரசம் என்ற ஒன்று இருக்கிறதா ?
இதுவரை அறிவியலாளர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளில் சிவப்பு பாதரசம் என்ற ஒன்று இல்லை. சிவப்பு பாதரசம் பற்றிய அறிவியல் நிரூபணங்கள் ஏதுமில்லை. இதன் மூலம் சிவப்பு பாதரசம் என்ற ஒன்று போலியானது என்பது தெரியவருகிறது.
பாதரசம் திரவ நிலையில் உள்ள நச்சு பொருளாகும். இது வெப்பநிலையை அதிகமாக கடத்தும் தன்மை கொண்டதால் மருத்துவமனையில் உடல் வெப்பத்தை அளக்க பயன்படும் தெர்மாமீட்டரில் பயன்படுத்தப்படுகிறது. தாதுக்களில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்க ஆய்வகங்களில் பயன்படுகிறது. இதற்கும் சிவப்பு பாதரசத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
சிவப்பு பாதரசம் இருப்பதாக கூறப்படும் பொருட்கள் ?
- பழைய டிவிகள், வானொலி போன்றவற்றில் இந்த சிவப்பு பாதரசம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மோசடியில் ஈடுபடுவோர் கூறுகின்றனர்.
- ஆனால் பழைய தொலைக்காட்சிப் பெட்டிகளிலோ, வானொலியிலோ இது போன்ற பொருள் பயன்படுத்தப்பட்டதாக இதுவரை கண்டறியப்படவில்லை. எனவே சிவப்பு பாதரசம் என்ற ஒன்று இருப்பதில் எவ்வித உண்மையும் இல்லை.
சிவப்பு பாதரசம் உண்மையா என கண்டுபிடிக்க மோசடிக்காரர்கள் கூறும் சோதனைகள் என்ன ?
இவர்கள் மூன்று விதமான சோதனைகளை செய்து காண்பித்து மக்களை நம்ப வைக்கின்றனர்.
முதலாவது சோதனை சிவப்பு பாதரசத்தை தங்கத்திற்கு அருகில் கொண்டு சென்றால் கவரும். தங்கத்திற்கு காந்தத் தன்மை மிகவும் குறைவு இதனால் இதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை.
இரண்டாவது சோதனை சிவப்பு பாதரசத்தை பூண்டிற்கு அருகில் கொண்டு சென்றால் விலகுமாம். உணவுப் பொருளுக்கும் உலோகத்திற்கும் இடையில் விலக்கு விசை இருக்குமா ? இவர்கள் கூறுவது உண்மையில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.
மூன்றாவது சோதனை சிவப்பு பாதரசத்தின் பிம்பம் கண்ணாடியில் தெரியாது என்கிறார்கள்.
மோசடியில் ஈடுபடுவோர் இது போன்ற சோதனைகளை செய்து வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்கிறார்கள்.
மக்கள் மீது எவ்வாறு குறி வைக்கிறார்கள் ?
முதலில் சிவப்பு பாதரசம் இவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்ற எண்ணத்தை ஆசை வார்த்தை கூறி மக்கள் மனதில் உருவாக்குகிறார்கள். இந்த சிவப்பு பாதரசம் கிடைத்தால் தங்களுக்கு தருமாறும் அதனை எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுத்து வாங்கிக் கொள்வதாகவும் கூறி சிவப்பு பாதரசம் பற்றிய ஆசையை தூண்டுகின்றனர்.
பிறகு வேறு ஒரு நபர் மூலம் அந்த பகுதியில் சிவப்பு பாதரசம் குறித்து வீடியோக்கள் மற்றும் செய்திகளை சமூக வலைதளங்களிலும் வெளியிடுகின்றனர். மக்கள் நம்பி அதனை தேட ஆரம்பிக்கின்றனர்.
இந்த தேடலை பயன்படுத்திக்கள்ளும் சிலர் தங்களிடம் சிவப்பு பாதரசம் இருப்பதாகவும் அதனை தாங்கள் சொல்லும் கணக்கிற்கு பணம் அனுப்பினால் கொரியர் மூலம் அனுப்பி வைப்பதாகவும் கூறுகின்றனர். இதனை நம்பி பணம் அனுப்பி வைப்போர் தங்கள் பணத்தை இழந்து ஏமாற்றப்படுகிறார்கள்.
பாதரசத்தால் ஏற்படும் விளைவு ?
- பாதரசம் விஷத்தன்மை வாய்ந்தது இதனை உட்கொண்டால் இறந்து விடுவர்.
- பாதரசத்தை காயங்களின் மீது பூசினாலும் இறப்பு நிச்சயம்.
- பாதரசம் எரிந்து வெளியிடும் வாயு நச்சுத்தன்மை வாய்ந்தது இது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்.
- பாதரசத்தை வெறும் கைகளினால் தொடக்கூடாது.
காவல்துறையின் எச்சரிக்கை ?
சிவப்பு பாதரசம் மட்டுமல்லாமல் இன்னும் பல மோசடி வேலைகள் நடந்தவாறு உள்ளன. பொதுமக்கள் அறிமுகம் இல்லாத நபர்கள் மீது நம்பிக்கை வைக்கவோ அவர்களது ஆசை வார்த்தையை நம்பி ஏதும் செய்யவோ வேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
பல குற்ற சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் புதிய மோசடி நடக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.
இந்த பதிவு சிவப்பு பாதரசம் பற்றிய உண்மை தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ள உருவாக்கப்பட்டது. உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் சிவப்பு பாதரசம் பற்றி உங்களிடம் கூறினாள் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இதனை பகிருங்கள்.
எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக.
மேலும் படிக்க ,
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.