வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை:-
வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை 2020-ஐ பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நமது நாட்டின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் கொள்கைகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு எவ்வளவு இயற்கை வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் எவ்வளவு தொகை பாதுகாப்பிற்காக முதலீடு செய்யப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது நம் கடமை.
வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை பற்றிய தகவல்கள்:-
- பாதுகாப்பு உற்பத்தியில் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்காகவே இந்த கொள்கை துவங்கப்பட்டது. பாதுகாப்பு உற்பத்தியில் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதற்காகவே, ''தன்னம்பிக்கை இந்தியா'' (Atma nirbhar Bharath Package) என்ற தொகுப்பின் கீழ் பல அறிக்கைகள் உருவாக்கப்பட்டன.
- இந்த கட்டமைப்பைத் துவக்குவதற்காகவும், பாதுகாப்பிலும் விண்வெளித் துறையிலும் மேலோங்கிய நாடுகளில் இந்தியாவைக் கொண்டு வருவதற்காகவும், பாதுகாப்பு அமைச்சகம், வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தியது.
- இந்த கொள்கையின் முக்கியமான குறிக்கோள் யாதெனில், தன்னம்பிக்கையிலும் ஏற்றுமதியிலும், நம் நாட்டின் பாதுகாப்பு உற்பத்தித் திறனை கவனமாகவும் கட்டமைப்புடனும் அமைப்பதே ஆகும்.
வரைவு பற்றிய ஒரு பார்வை:- கருவிகள், கடைகள், உதிரிகள், பொதி செய்தல் அல்லது திறத்தல், பட்டுவாடா, போக்குவரத்து, காப்பீடு, குத்தகை, ஆலோசனை, மென்பொருள் மேம்பாடு போன்றவற்றின் செயல்பாடு மற்றும் பராமரிப்பிற்கான சரக்குகள் மற்றும் சேவைகள் கொள்முதல் வழிகாட்டுதலாக பாதுகாப்பு கொள்முதல் கையேடு 2009 வெளியிடப்பட்டது.
- விண்வெளித் துறையிலும் கடற்படை கப்பல் கட்டுமானத் துறையிலும், வடிவமைப்பு முதல் உற்பத்தி வரை அனைத்திலும் இந்தியாவை உலகின் முன்னேற்ற நாடுகளில் ஒன்றாக கொண்டு வருவதற்காகவே இந்த கொள்கை கொண்டுவரப்பட்டது. இந்த கொள்கையை அரசு, தனியார் ஆகிய இரண்டு பிரிவுகளும் கலந்துகொண்டு செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தன்னம்பிக்கை, ஏற்றுமதி ஆகிய இரட்டைக் கொள்கையை மேம்படுத்துவதற்காகவும் இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கைக்கான பொறுப்பை ஏற்கும் அரசாங்கப் பிரிவுகள்:- ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) - விண்வெளித் துறை.
- மஸகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (MDL), கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் (GRSE), கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (GSL), மற்றும் ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL) - கடற்படை.
- பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL), BEML லிமிடெட், மிஷ்ரா தடூ நிகாம் (MIDHANI) - சிறப்பு உலோகங்கள் மற்றும் உலோகக் கலவைகள்.
- ஆர்டனன்ஸ் ஃபேக்டரி போர்ட் (OFB) - நில அமைப்புகள்.
- பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) - போர்த் திறன்.
தனியார் பிரிவுகளின் மூலம் தன்னம்பிக்கையில் வளர்ச்சி:- பாதுகாப்பு உற்பத்தித் துறை (Department of Defence Production - DDP), பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defence - MoD), இந்திய அரசாங்கம் (Government Of India - GOI) என அனைத்தும், பல வருடங்ளாக, பாதுகாப்பு உற்பத்தி பொருள்களை, ஆர்டனன்ஸ் ஃபேக்டரிஸ் (Ordnance Factories) மற்றும் டிஃபன்ஸ் பப்ளிக் ஸெக்டார் அண்டர்டேக்கிங்ஸ் (Defence Public Sector Undertakings - DPSUs) - இல் பரந்த அளவில் உற்பத்தி செய்தது. 2001-ஆம் ஆண்டு முதல், உரிமம் பெற்ற தனியார் பிரிவுகள் மூலம் உற்பத்தியை மேற்கொண்டது.
- தனியார் பிரிவுகளிடம் உற்பத்தி பொறுப்பைக் கொடுத்ததன் மூலம், ஆயுதங்கள் மற்றும் வசதிகள், பீரங்கிகள், கவச வாகனங்கள், கனரக வாகனங்கள், போர் விமானங்கள் மற்றும் வானூர்திகள் (Helicopters), போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், ஏவுகணைகள், வெடிமருந்துகள், மின்னணு உபகரணங்கள், பூமியை நகர்த்தும் உபகரணங்கள், சிறப்பு உலோகக் கலவைகள் மற்றும் சிறப்பு உலோகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சி அதிகரித்தது.
இலக்குகள் மற்றும் நோக்கங்கள்:-- 2025-ஆம் ஆண்டில், விண்வெளித் துறை மற்றும் பாதுகாப்புத் துறையின் சரக்குகள் மற்றும் சேவைகளின் மூலம், ஏற்றுமதி 35,000 கோடி ரூபாய் (US $5 Billion) - உம் சேர்த்து, 1,75,000 கோடி ரூபாய் (US $25 Billion) - ஐ விற்றுமுதலாகப் பெறுவதே இந்த கொள்கையின் நோக்கம் ஆகும்.
- விண்வெளித் துறையிலும் கடற்படை கப்பல் கட்டுமானத் தொழிற்சாலையிலும் ஆயுதப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தரமான தயாரிப்புகளை, சக்தி வாய்ந்ததாகவும், வலுவானதாகவும் அளிப்பதே இந்த கொள்கையின் நோக்கம் ஆகும்.
- வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நம்பி இருக்காமல், அனைத்தையும் இந்தியாவில் தயாரிக்க வேண்டும் (Make in India) என்பதும், உள்நாட்டு தயாரிப்பை மேம்படுத்த வேண்டும் என்பதும் இந்த கொள்கையின் நோக்கமாகும்.
- பாதுகாப்பு பொருட்களை வெளிநாடுகளுக்கு அதிக அளவில் எற்றுமதி செய்வதற்காகவும், உலகளாவிய பாதுகாப்பு தொடர் மதிப்பில் சிறந்த பங்காற்றவும் இந்த கொள்கை கொண்டுவரப்பட்டது.
- R&D - ஐ ஊக்கப்படுத்துவதற்கும், கண்டுபிடிப்புகளுக்கு வெகுமதி அளிப்பதற்கும், இந்தியாவிற்கு IP உரிமத்தைப் பெற்றுத் தருவதற்கும், வலுவான மற்றும் தன்னம்பிக்கையான பாதுகாப்பு தொழிற்சாலையை ஏற்படுத்துவதற்கும், சாதகமான சூழலை உருவாக்குவதே இந்த கொள்கையின் இலக்காகும்.
கவனத்திற்கு உரிய பகுதிகள்:அரசின் உற்பத்தி நோக்கம் முழுமையடைய கீழே உள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- கொள்முதல் சீர்திருத்தம்.
- சுதேசமயமாக்குதல் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்குத் துணையாக இருத்தல் மற்றும் துவக்கி வைத்தல்.
- வளங்களுக்கான ஒதுக்கீட்டை மேம்படுத்துதல்.
- முன்னேற்றத்தை முதலீடு ஆக்குதல், வெளிநாடுகளில் நேரடியாக முதலீடு செய்தல் (Foreign Direct Investment - FDI) மற்றும் தொழில் செய்தலை எளிமையாக்குதல்.
- கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி.
- உறுதியான தரம் மற்றும் உள்கட்டமைப்பு பரிசோதனை.
- ஏற்றுமதியை ஊக்குவித்தல்.
வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கையின் நன்மைகள்:-- தனியார் பிரிவுகளின் பங்கேற்பை அனுமதிக்கும் விதமாக முதலீடு மற்றும் உரிமத்திற்கான செயல்முறை குறிப்பிடத்தக்க முயற்சிகளின் மூலம் எளிமையாக்க நேரிடும். இதனால், தனியார் நிறுவனங்களும் இந்த கொள்கையில் எளிதாக முதலீடு செய்ய முடியும்.
- பாதுகாப்பு நிறுவுதலுடன் இணைப்பில் இருப்பதற்கான சிறந்த அடித்தளத்தை, இன்னோவேஷன்ஸ் ஃபார் டிஃபென்ஸ் எக்ஸலன்ஸ் (Innovations for Defence Excellence - iDEX) துவக்கி வைத்துள்ளது.
- தற்பொழுது (2019-2020), விண்வெளித் துறை மற்றும் கடற்படை கப்பல் கட்டுமானத் துறை ஆகியவற்றையும் சேர்த்து, பாதுகாப்பு தொழிற்சாலையின் அளவு, சுமார் 80,000 கோடி ரூபாய் ஆகும். இதில் அரசாங்கத்தின் பங்களிப்பு மட்டும் 63,000 கோடி ரூபாய் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 17,000 கோடி ரூபாய் ஆகும்.
- ''துவக்க இந்தியா'' (Start-Up India) நிகழ்ச்சிக்குப் பின்னர், துவக்கத்திற்காக நிலவரத்து சீராக அதிகரித்தது. இந்த நிலங்கள், கிட்டத்தட்ட 8000 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்துள்ளது. மேலும், பாதுகாப்பிலும் தன்னம்பிக்கையிலும் அவற்றின் பலத்தையும் அதிர்வையும் மேம்படுத்தி உள்ளது.
மேலே உள்ள கட்டுரை பதிவில் மத்திய அரசின் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை வரைவு கூறப்பட்டுள்ள அம்சங்கள் பற்றி படித்தீர்கள். ஒரு நாட்டின் மக்கள் சந்தோஷமாக வாழ பாதுகாப்பு மிக முக்கியம் ஆதலால் இந்த கொள்கை வரவேற்கத்தக்கது.
இருப்பினும் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயல்களிலும் ஏதேனும் ஒரு தீமை நிறைந்திருக்கும். அந்த தீமையின் தன்மையைப் பொறுத்து அந்த செயலை செய்யலாமா ? வேண்டாமா ? என முடிவு செய்வார்கள்.
பாதுகாப்பு சேவைகளை தனியாருக்கு விற்பதன் மூலம் சில தீமைகள் ஏற்படும் என மக்கள் அஞ்சுகின்றனர்.
மக்கள் அச்சத்திற்கு காரணம்தான் என்ன ?
- தனியார் நிறுவனங்கள் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த மாட்டார்கள். இது சுற்றுச்சூழல் மாசுபாட்டை அதிகரிக்கும். சுற்றுச்சூழல் மாசுபாட்டால் புவியின் வெப்பநிலை அதிகரிப்பது, காற்று மாசடைவது, நீர் மாசடைவது போன்ற பல தீமைகள் விளையும்.
- பாதுகாப்பு துறை போன்ற நாட்டின் முக்கிய செயல்களில் தனியார் நிறுவனங்கள் பங்கு கொள்வதால் நாட்டின் பாதுகாப்பு தகவல்களுக்கு அபாயம் ஏற்படும்.
- அனைத்து துறைகளும் தனியாருக்கு விற்பதால் வேலையின்மை பல மடங்கு அதிகரிக்கும்.
- பாதுகாப்பு சாதன உற்பத்தியில் ஊழல் இருப்பின் உயிரிழப்புகள் அதிகரிக்கும்.
- நாட்டின் முக்கிய துறைகளை தனியாருக்கு விற்பதன் மூலம் செலவினங்கள் அதிகரிக்கும்.
- தனியார் நிறுவனங்கள் தேவைக்கு அதிகமாக இயற்கை வளங்களை பயன்படுத்துவதால் நம் நாட்டின் வளங்கள் அழியும்.
மேலும் இது போன்ற பல தீமைகள் விளையும் இது சாமானிய மக்களின் குரலாக உள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளை தனியாருக்கு விற்க வேண்டாம் என அரசை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
நமது பக்கத்தின் வாசகர்கள் தங்களது எண்ணங்களை கமெண்டில் தெரிவிக்கலாம். எங்களை ட்விட்டரில் பின் தொடரலாம்.
அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்தில் இந்த வலைதளம் உருவாக்கப்பட்டது. உங்களுக்கு பிடித்த பதிவுகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக.
மேலும் படிக்க ,
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.