Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

TReDS fee update சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் எச்சரிக்கை


போலி இணையதளங்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை ? டிஆர்இடீஎஸ் (TReDS) தளத்தின் மீதான கோரிக்கை என்ன ? சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய செய்தி  தவறாமல் படியுங்கள்...

வணக்கம் நண்பர்களே இன்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் விழிப்போடு இருப்பது தொடர்பான மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பை பார்ப்போம். நீண்டகால சிக்கலில் இருந்து சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 


TReDS தளத்தின் பதிவு கட்டணம்:

சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் TReDS தளத்தில் பதிவு செய்வதற்கான கட்டணத்தை மத்திய நிதியமச்சகம் தள்ளுபடி செய்தது. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சகம் கோரிக்கையை ஏற்று மத்திய நிதியமைச்சகம் தள்ளுபடி செய்தது.


சிறு குறு நடுத்தர தொழில் அமைச்சகம் பரிந்துரை செய்த புதிய தளம் :

இதனைத் தொடர்ந்து சிறு குறு நடுத்தர தொழில் அமைச்சகம் உதயம் என்னும் தளத்தில் தொழில் நிறுவனங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. 


சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் எச்சரிக்கை என்ன தெரியுமா? 

உதயம் தளத்தில் தொழில்முனைவோரின் தகவல்களை பதிவேற்றி தருவதாக கூறி போலி நிறுவனங்கள் மற்றும் இணைய தளங்கள் செயல்படுகின்றன அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு சிறு குறு நடுத்தர தொழில் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இந்த தகவல் சிறு குறு நடுத்தர தொழில் செய்வோருக்கு உதவிகரமாக இருக்கும் என்று எண்ணி உருவாக்கியுள்ளோம் உங்களுக்கு தெரிந்த தொழில் செய்வோரிடம் இதனை பகிருங்கள். 

மேலும் இது போன்ற விழிப்புணர்வு தகவல்களுக்கு எங்கள் பக்கத்தை தொடர்ந்து படியுங்கள். எங்களது செய்திகளை உடனுக்குடன் பெற ட்விட்டர் பக்கத்தில் எங்களை பின்தொடருங்கள்.

தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக.





RiyAshoK shades.


மேலும் படிக்க ,



 


Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Tamil kavithai collection for all relationship

News paper, hope, god Tamil kavithai