அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் குறித்து தமிழக அரசு அறிவித்தது என்ன ? கொரோனா அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் தேர்வு நடைபெறுமா ? தேர்வு ரத்து செய்தது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவு என்ன ? அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு குறித்த தற்போதைய நிலை என்ன ? தேர்வுகள் நடைபெறும் முறை பற்றிய அறிவிப்புகள் எப்போது வெளியாகும் ? பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் அறிவித்தது என்ன ?
வணக்கம் நண்பர்களே கொரானா நோய்த்தொற்று பரவி வரும் நிலையில் இதனை தடுக்க தனி மனித இடைவெளி அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என அரசு ஊரடங்கு அமல்படுத்தியது. இதுவரை கொரானா நோய்த்தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் நாம் தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் ஆகியற்றையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் முடங்கியுள்ளதால் அதனை சரிசெய்ய சில கட்டுப்பாடுகளுடன் அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதற்கு முன் ஆலயங்கள் சிறப்பு, பொது போக்குவரத்து இயக்கம், சிறு வணிக நிறுவனங்கள் சமூக இடைவெளியுடன் இயங்குதல் ஆகியவை அறிவிக்கப்பட்டிருந்தன.
பள்ளிகள் திறப்பு குறித்து அரசு அறிவிப்பு:
கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பது கடினமான சூழலை உருவாக்கும் என மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அக்டோபர் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறினார். மாணவர்கள் சேர்க்கை மற்றும் ஆன்லைன் வகுப்பு நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் இறுதித் தேர்வு குறித்த அறிவிப்பு என்ன ?
கொரானா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் வகுப்பு பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மாணவர்கள் கல்வி கற்கும் திறனில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தேர்வு நடைபெற்றால் அவர்களின் மன உளைச்சல் அதிகரிக்கும் என்பதால் அரசு அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களின் தேர்வை ரத்து செய்தது.
முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை உள்ள பொறியியல் மாணவர்களின் இன்டர்ணல் மதிப்பெண் மற்றும் வருகைப் பதிவு அடிப்படையில் செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று அரசு அரசாணை வெளியிட்டது. இதில் அண்ணா பல்கலைக்கழகம் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியானது. அந்த அறிவிப்பில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்விற்கான தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.
தேர்வு எழுதாமல் தேர்ச்சி அளிப்பதால் ஏற்படும் சிக்கல்:
பொறியியல் மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி அடைவதால் பொறியியல் படிப்புகளின் தரம் மிகவும் குறையும் எனவும் அவர்களுக்கு பொறியியல் பற்றிய அறிவு முழுமையாக கிடைக்காது எனவும் அச்சம் எழுந்தது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர் பல்வேறு தரப்பினர் இதனை எதிர்த்தனர். அண்ணா பல்கலைக்கழகம் பார்மர் வைஸ் கவுன்சிலர் இறுதி தேர்வு நடத்தாமல் பட்டமளிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையில் இறுதி தேர்வு நடத்தாமல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் அளிக்க கூடாது என்று கூறினார். இந்த அறிக்கை மீது விசாரணை நடைபெற்று பல்கலைக்கழகம் தேர்வு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.
அண்ணா பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் தேர்வு குறித்த
உயர் கல்வித்துறை அறிவிப்பு என்ன ?
உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும் செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு அனைத்து மாணவர்களுக்கும் இறுதி தேர்வு நடத்தப்படும். தேர்வு அட்டவணை தேர்வு மையம் போன்றவை விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் முறை குறித்து உயர்கல்வித்துறை அறிவிப்பு:
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் நேரடியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரில் சென்று பல்கலைக்கழகத் தேர்வுகளில் பங்கு பெற வேண்டும்.
தேர்வு அட்டவணைகள் மற்றும் தேர்வு மையங்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் குறித்த அறிவிப்புகளை ஸ்டுகார் ( STUCOR ) செயலி மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
மேலும் இது போன்ற முக்கிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற நமது பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.
ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள். தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக.
மேலும் படிக்க ,
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.