Posts

Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Butterfly easy drawing for kids

Image
மழலை கைவண்ணம் ஹாய் குழந்தைகளே இன்று மழலை கைவண்ணம் வகுப்பிற்கு உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்று நீங்கள் மிகவும் விரும்பும் வண்ணத்துப்பூச்சி வரைவது எப்படி என்று படிப்படியாக கற்றுக்கொள்வோம். வண்ணத்துப்பூச்சி பல வகைகளில் உள்ளன. வண்ணங்கள் நிறைந்த பட்டாம்பூச்சி நம் அனைவரது மனதையும் கவர்ந்து இழுக்கும். வாருங்கள் பட்டாம்பூச்சியை வரையலாம்.    படி 1: வண்ணத்துப் பூச்சியின் உடல் பகுதியை கீழே உள்ளவாறு  வரையுங்கள். படி 2: வண்ணத்துப்பூச்சியின் இறக்கையை வரைவதற்காக வில் போன்ற சிறிய கோடுகளை பென்சிலால் வரையவும். படி 3: வில் வடிவ கோடுகளை படத்தில் உள்ளது போல மற்றொரு கோட்டின் மீது இணைக்கவும். படி 4: மற்றொரு வில் வடிவ கோட்டை படத்தில் உள்ளவாறு வரையுங்கள். படி 5: வண்ணத்துப் பூச்சியின் இறக்கையை மற்றொரு வில் வடிவ கோடு மூலம் இணையுங்கள். படி 6: வண்ணத்துப்பூச்சியின் தலையிலுள்ள இரண்டு இழைகளை வண்ணம் தீட்டுங்கள்.    படி 7: பட்டாம்பூச்சி இறக்கையின் உள்பகுதியில் இறக்கை போன்று மற்றொரு கோட்டை வரையவும். படி 8: வண்ணத்துப்பூச்சி இறக்கையை படத்தில் உள்ளவாறு வண்ணம் தீட்டுங்கள். படி 9: வண்ணத்துப்...

Cute Peacock easy drawing for kids

Image
மழலை கைவண்ணம் ஹாய் குழந்தைகளே இன்று உங்களுக்கு மிகவும் பிடித்த மயில் பறவையை வரைய போகிறோம். இதற்கு முந்தைய வகுப்புகளில் பழங்கள், விலங்குகள் மற்றும் பல வரைபடங்கள் வரைவது எப்படி என்று பார்த்தோம். இன்றைய வகுப்பில் அழகான தோகைகள் உடைய மயில் கிளை ஒன்றின்மீது அமர்ந்துள்ளது போன்ற அற்புதமான காட்சியை வரைவது எப்படி என்று கற்றுக்கொள்வோமா!. வாருங்கள் இன்றைய மழைலை கைவண்ணம் வகுப்பிற்குள் செல்லலாம்...    படி 1: முதலில் வரைவதற்கு தேவையான பென்சில், ரப்பர், வெள்ளைத்தாள் மற்றும் மேசை ஆகியவற்றை தயார்படுத்திக் கொள்ளுங்கள். பென்சிலால் மெல்லியதான மயிலின் கழுத்து மற்றும் அடிப்பகுதி ஆகியவற்றை கீழே உள்ளவாறு வரையுங்கள். படி 2: இப்போது மயிலின் அலகு பகுதியை வரையவும். பிறகு கழுத்து பகுதியை மற்றொரு மெல்லிய கோடு மூலம் இணையுங்கள். படி 3: இப்போது கண் மற்றும் இமைப் பகுதியை வரைவதற்காக சிறிய வட்டம் மற்றும் கோடுகளைப் பயன்படுத்துங்கள். படி 4: இப்போது மயிலின் இறக்கையை கீழே உள்ளவாறு வரைந்து இணையுங்கள். மயிலின் நீண்ட அழகான தோகயை  வரைய மெல்லிய கோடு வரையுங்கள். படி 5: இப்போது மயிலின் கால் பகுதியை வரையுங்கள். கால் பகு...

TReDS fee update சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் எச்சரிக்கை

Image
போலி இணையதளங்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை ? டிஆர்இடீஎஸ் (TReDS) தளத்தின் மீதான கோரிக்கை என்ன ? சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய செய்தி  தவறாமல் படியுங்கள்... வணக்கம் நண்பர்களே இன்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் விழிப்போடு இருப்பது தொடர்பான மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பை பார்ப்போம். நீண்டகால சிக்கலில் இருந்து சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  TReDS தளத்தின் பதிவு கட்டணம்: சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் TReDS தளத்தில் பதிவு செய்வதற்கான கட்டணத்தை மத்திய நிதியமச்சகம் தள்ளுபடி செய்தது. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சகம் கோரிக்கையை ஏற்று மத்திய நிதியமைச்சகம் தள்ளுபடி செய்தது. சிறு குறு நடுத்தர தொழில் அமைச்சகம் பரிந்துரை செய்த புதிய தளம் : இதனைத் தொடர்ந்து சிறு குறு நடுத்தர தொழில் அமைச்சகம் உதயம் என்னும் தளத்தில் தொழில் நிறுவனங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது.  சிறு குறு நடுத்தர தொழில் ந...

அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு அறிவிப்பு 2020 Anna University 2020 exam update

Image
அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் குறித்து தமிழக அரசு அறிவித்தது என்ன ? கொரோனா அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில் தேர்வு நடைபெறுமா ? தேர்வு ரத்து செய்தது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவு என்ன ? அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு குறித்த தற்போதைய நிலை என்ன ? தேர்வுகள் நடைபெறும் முறை பற்றிய அறிவிப்புகள் எப்போது வெளியாகும் ? பள்ளிகள்  திறப்பது குறித்து அமைச்சர் அறிவித்தது என்ன ? வணக்கம் நண்பர்களே கொரானா நோய்த்தொற்று பரவி வரும் நிலையில் இதனை தடுக்க தனி மனித இடைவெளி அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என அரசு ஊரடங்கு அமல்படுத்தியது. இதுவரை கொரானா நோய்த்தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் நாம் தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் ஆகியற்றையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் முடங்கியுள்ளதால் அதனை சரிசெய்ய சில கட்டுப்பாடுகளுடன் அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதற்கு முன் ஆலயங்கள் சிறப்பு, பொது போக்குவரத்து இயக்கம், சிறு வணிக நிறுவனங்கள் சமூக இடைவெளியுடன் இயங்குதல் ஆகியவை அறிவிக்கப்பட்டிருந்தன. பள்ளிகள் திறப்பு குறித்து அரசு அறிவிப்பு: ...

Red Mercury tv, radio fact in tamil சிவப்பு பாதரசம்

Image
சிவப்பு பாதரசம் என்றால் என்ன ? இது கோடிக்கணக்கில் விற்க காரணம் என்ன ? சிவப்பு பாதரசத்திற்கு உண்மையில் சக்திகள் உள்ளதா ? சிவப்பு பாதரசம் பற்றி கூறப்படும் கதைகளும் உண்மையான அறிவியல் விளக்கங்களையும் இந்த பதிவில் பார்ப்போமா ? சிவப்பு பாதரசம் எனப்படும் உலோகம் திரவ நிலையில் காணப்படும் உலோகம், இது அணு ஆயுதங்களில் பயன்படுகிறது என்று பல கதைகள் யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவதை பார்த்திருப்பீர்கள்.  இந்த சிவப்பு பாதரசத்தை வீட்டில் வைத்திருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம், இதனை காயங்கள் மீது வைத்தால் அனைத்து காயங்களும் குணமாகும், இந்த சிவப்பு பாதரசம் அதிர்ஷ்டம் நிறைந்தது என்னும் பல கதைகள் செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் பரவிவருகிறது. சிவப்பு பாதரசம் விலை என்னவாக இருக்கும் ? இந்த சிவப்பு பாதரசம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என்கிறார்கள் இதனை வைத்து ஏமாற்றும் மோசடிகாரர்கள். உண்மையில் சிவப்பு பாதரசம் என்ற ஒன்று இருக்கிறதா ? இதுவரை அறிவியலாளர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளில் சிவப்பு பாதரசம் என்ற ஒன்று இல்லை. சிவப்பு பாதரசம் பற்றிய அறிவியல் நிரூபணங்கள் ஏதுமில்லை. இதன் ...

Defence production and export promotion policy 2020 draft in tamil

Image
வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை:- வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை 2020-ஐ பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நமது நாட்டின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் கொள்கைகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு எவ்வளவு இயற்கை வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் எவ்வளவு தொகை பாதுகாப்பிற்காக முதலீடு செய்யப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது நம் கடமை. வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை பற்றிய தகவல்கள்:- பாதுகாப்பு உற்பத்தியில் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்காகவே இந்த கொள்கை துவங்கப்பட்டது. பாதுகாப்பு உற்பத்தியில் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதற்காகவே, ''தன்னம்பிக்கை இந்தியா''  (Atma nirbhar Bharath Package ) என்ற தொகுப்பின் கீழ் பல அறிக்கைகள் உருவாக்கப்பட்டன. இந்த கட்டமைப்பைத் துவக்குவதற்காகவும், பாதுகாப்பிலும் விண்வெளித் துறையிலும் மேலோங்கிய நாடுகளில் இந்தியாவைக் கொண்டு வருவதற்காகவும், பாதுகாப்பு அமைச்சகம், வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும...