Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Cute Peacock easy drawing for kids

மழலை கைவண்ணம்

ஹாய் குழந்தைகளே இன்று உங்களுக்கு மிகவும் பிடித்த மயில் பறவையை வரைய போகிறோம். இதற்கு முந்தைய வகுப்புகளில் பழங்கள், விலங்குகள் மற்றும் பல வரைபடங்கள் வரைவது எப்படி என்று பார்த்தோம். இன்றைய வகுப்பில் அழகான தோகைகள் உடைய மயில் கிளை ஒன்றின்மீது அமர்ந்துள்ளது போன்ற அற்புதமான காட்சியை வரைவது எப்படி என்று கற்றுக்கொள்வோமா!. வாருங்கள் இன்றைய மழைலை கைவண்ணம் வகுப்பிற்குள் செல்லலாம்...


 
 படி 1:
  • முதலில் வரைவதற்கு தேவையான பென்சில், ரப்பர், வெள்ளைத்தாள் மற்றும் மேசை ஆகியவற்றை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
  • பென்சிலால் மெல்லியதான மயிலின் கழுத்து மற்றும் அடிப்பகுதி ஆகியவற்றை கீழே உள்ளவாறு வரையுங்கள்.



படி 2:
  • இப்போது மயிலின் அலகு பகுதியை வரையவும். பிறகு கழுத்து பகுதியை மற்றொரு மெல்லிய கோடு மூலம் இணையுங்கள்.



படி 3:
  • இப்போது கண் மற்றும் இமைப் பகுதியை வரைவதற்காக சிறிய வட்டம் மற்றும் கோடுகளைப் பயன்படுத்துங்கள்.



படி 4:
  • இப்போது மயிலின் இறக்கையை கீழே உள்ளவாறு வரைந்து இணையுங்கள். மயிலின் நீண்ட அழகான தோகயை வரைய மெல்லிய கோடு வரையுங்கள்.


படி 5:
  • இப்போது மயிலின் கால் பகுதியை வரையுங்கள். கால் பகுதியில் விரல் உள்ளவாறு வரையவும்.
  •  மயில் நின்று கொண்டிருக்கும் மரத்தின் கிளையை வரையுங்கள்.


 

 படி 6:
  • இப்போது மயிலின் தலைமீது உள்ள கொண்டை பகுதியை வரையுங்கள். 
  • இந்த கொண்டை பகுதியை மயிலின் தலை மீது சிறிய கோடுகள் வரைந்து அதன் நுனியில் சிறிய அளவிலான வட்டம் வரைவதன் மூலம் வரையலாம். 


படி 7:
  • மயிலின் உருவத்தின் அமைப்பை வரைந்து விட்டீர்கள். இப்போது வண்ணம் தீட்டி மயில் வரைபடத்தை முழுமை படுத்தலாம்.
  • மயிலின் கழுத்து மற்றும் அடிப்பகுதியை பென்சிலால் வண்ணம் தீட்டுங்கள்.



படி 8:
  • இப்போது மயில் இறக்கை மீது வண்ணம் தீட்டுங்கள்.



படி 9:
  • மயில் தோகையின் மேல்பகுதியில் வண்ணம் தீட்டுங்கள்.



படி 10:
  • மயில் தோகையை வரைய ஆரம்பிக்கலாம். மயில் தோகை வரைவது மிகவும் கடினமாக இருக்கும். 
  • மயிலின் அழகை சேர்ப்பது மயில் தோகை தான்.
  • மயில் தோகை விழிபோன்ற அமைப்பில் அழகாக இருக்கும். ஒவ்வொன்றாக வரையுங்கள்.



படி 11:
  • மயில் தோகையை வரைபடத்தில் உள்ளவாறு வண்ணம் தீட்டவும்.


 

 படி 12:
  • மயில் தோகையை வரைபடத்தில் உள்ளவாறு வண்ணம் தீட்டுங்கள்.



படி 13:
  • இப்போது மயிலின் தோகையில் பெரும்பகுதியை வண்ணம் தீட்டி விட்டீர்கள்.



படி 14:
  • கடைசியாக மயில் தோகையை வரைபடத்தில் உள்ளவாறு முழுவதும் வண்ணம் தீட்டுங்கள்.
  • மரத்தின் கிளையை பென்சில் கொண்டு வண்ணம் தீட்டுங்கள்.
  • அழகிய மயில் மரக்கிளையில் அமர்ந்துள்ளது போன்ற அற்புதமான வரைபடத்தை வரைந்து விட்டீர்கள்.


இது போன்ற வரைபடங்களை வரைய கற்றுக்கொள்ள நம்முடைய பக்கத்தை தொடர்ந்து பாருங்கள். எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக.

மேலும் படிக்க,


 

Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Anti-Child labor drawing