Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Indian hockey history

இந்திய ஹாக்கி விளையாட்டின் வரலாறு

வணக்கம் நண்பர்களே இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று அனைவராலும் போற்றப்படும் ஹாக்கி விளையாட்டு பற்றிய சில தகவல்களை இங்கே பகிர்ந்துள்ளோம். உண்மையில் ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டா? இல்லையா? என்ற கேள்விக்கு இங்கே பதில் கிடைக்கும். இத்துடன் ஹாக்கி விளையாட்டு பற்றிய பல்வேறு தகவல்களை பார்ப்போம் வாருங்கள்..

ஹாக்கி விளையாட்டு:

ஹாக்கி என்பது ஒரு குழு விளையாட்டு ஆகும் இதில் இரண்டு அணிகள் போட்டியிடும். ஒவ்வொரு அணியிலும் 11 வீரர்கள் இருப்பார்கள். இவ்விளையாட்டு ஒரு கடினமான பந்தினை விளையாட்டு வீரர்கள் மட்டையினால் நகர்த்தி விளையாடும் விளையாட்டாகும்.

அணி வீரர்கள் விபரம்:

  • விளையாடும் ஆட்டக்காரர்கள் 11 பேர்.
  • 10 வீரர்கள் மற்றும் 1 வீரர் கோள்கீப்பர்.
  • மாற்று ஆட்டக்காரர்கள் 5 பேர்.
  • இரு அணிகளிளும் தலா 11 பேர் மோதுவர்.

பந்தின் அளவுகள்:

  • பந்தின் எடை 156 கிராம் முதல் 163 கிராம் வரை இருக்கும்.
  • சுற்றளவு 22.4 செ.மீ முதல் 23.5 செ.மீ வரை இருக்கும்.
  • ஹாக்கி பந்து கோள வடிவில் இருக்கும்.
  • ஹாக்கி பந்து கடினமான பிளாஸ்டிக்கால் உருவாக்கப்படுகிறது.

ஹாக்கி மட்டையின் அளவு‌ மற்றும் பயன்படுத்தும் விதம்:

  • வீரர்கள் அனைவரும் ஹாக்கி மட்டையை ஏந்தி நிற்பர்.
  • ஹாக்கி மட்டை சுமார் 80 செமீ முதல் 90 செமீ நீளம் கொண்டது.
  • ஹாக்கி மட்டை மரத்தால் உருவாக்கப்படும்.
  • தற்போது ஹாக்கி மட்டை பைபர் கண்ணாடி மற்றும் கார்பன் பைபர் கலவைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
  • ஹாக்கி மட்டை மேடான பக்கம் மற்றும் தட்டையான பக்கம் என இரண்டு பக்கங்களைக் கொண்டது.
  • வீரர்கள் விளையாடும் போது தட்டையான பக்கத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேடான பக்கத்தை பயன்படுத்தினால் அது தவறானதாக கருதப்படும்.

ஆடுகளத்தின் அமைப்பு:

  • ஹாக்கி ஆடுகளம் செவ்வக வடிவம் உடையது.
  • ஹாக்கி ஆடுகளத்தின் நீளம் 100 யார்ட்ஸ் மற்றும் அகலம் 60 யார்ட்ஸ் உடையது.
  • மையக்கோட்டில் இருந்து 25 யார்ட்ஸ் இரண்டு பக்கங்களிலும் குறிக்கப்படும்.
  • வெற்றிக்கம்பத்தின் உயரம் 7 அடி மற்றும் அகலம் 12 அடி இருக்கும்.

ஹாக்கி விளையாட்டின் நேரம்:

  • ஹாக்கி விளையாட்டு 75 நிமிடங்கள் நடைபெறும். முதல் 35 நிமிடங்கள் முடிந்த பிறகு 5 நிமிடம் இடைவேளை.பிறகு 35 நிமிடங்கள் விளையாடுவர்.
  • 2014 ஆம் ஆண்டு முதல் சில சர்வதேச விளையாட்டுகளில் நான்கு 15 நிமிடங்களாக பிரிக்கப்பட்டது. முதல் இரு 15 நிமிடங்களுக்கு 2 நிமிடம் இடைவேளை மற்றும் கடைசி இரு 15 நிமிடங்களுக்கு 25 நிமிடங்கள் இடைவேளை விடப்படுகிறது.

ஹாக்கி மகளிர் அணி:

  • 1927 ஆம் ஆண்டு மகளிர்களுக்கு என்று சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்தின் பெயர் சர்வதேச மகளிர் ஹாக்கி சங்கம்.(International Federation of Women's Hockey Association)

தேசிய விளையாட்டு ஹாக்கி கிடையாதா?

  • பலர் ஹாக்கி தேசிய விளையாட்டு என கூறினாலும் ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு அல்ல. ஆம் உண்மைதான். இந்தியாவில் தேசிய விளையாட்டு என்ற அந்தஸ்து எந்த விளையாட்டுக்கும் அளிக்கப்படவில்லை என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.
  • லக்னோவை சேர்ந்த 10 வயது சிறுமி ஐஸ்வர்யா பரஷார் நம் நாட்டின் தேசிய சின்னங்கள் குறித்து புத்தகத்தில் படித்தார்.இவர் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவின் தேசியகீதம் விளையாட்டு விலங்கு மலர் தேசிய சின்னம் ஆகியவை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் நகல்களை அளிக்குமாறு கோரியிருந்தார். இந்த மன பிரதமர் அலுவலகத்தில் இருந்த உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  • இந்திய விளையாட்டு அமைச்சகத்தின் செயலாளர் சிவ பிரதாப் சிங் அவர்கள் ஐஸ்வர்யாவுக்கு இது தொடர்பான கடிதம் எழுதினார்.அதில் இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று எதையும் விளையாட்டு அமைச்சகம் அதிகாரபர்வமாக அறிவிக்கவில்லை என்று 2012ம் ஆண்டில் தெரிவித்தார்.

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று அனைவரும் நினைக்க காரணம் என்ன?

  • ஹாக்கி விளையாட்டில் இந்தியா 1928 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை உலகளவில் சிறந்து விளங்கியது.
  • இக்காலத்தில் இந்தியா 6 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை தொடர்ந்து வென்று சாதனை படைத்தது. ஆகவே காலகட்டம் இந்திய ஹாக்கியின் பொற்காலம் எனப் போற்றப்பட்டது. இந்தியாவின் ஹாக்கி பயணம் பெரும் வெற்றியை ஈட்டித்தந்தது. விளையாடிய 21 போட்டிகளில் 18 போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1948 ஆம் ஆண்டில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் 1952-ஆம் ஆண்டு நடந்த ஹல்சினிக் விளையாட்டுகளிலும் மெல்பர்ன் ஒலிம்பிக்கிலும் ஒரு ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்திக் காட்டியது.
  • அப்போது இந்தியா கலந்து கொண்ட 24 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இதுதவிர 1964 மற்றும் 1980 களில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றது.இந்தியா ஹாக்கி விளையாட்டில் கொடிகட்டிப் பறந்த இந்த காலத்தில் ஹாக்கி தேசிய விளையாட்டாக கருதப்பட்டது. இதுவே ஹாக்கி தேசிய விளையாட்டாக கருதப்பட காரணம் ஆகும். ஹாக்கி அதிகாரப்பூர்வமாக தேசிய விளையாட்டாக அறிவிக்கப்படவில்லை.

இதுபோன்ற சுவாரசியமான தகவல்களை பார்க்க தொடர்ந்து படியுங்கள்.எங்களை ட்விட்டர் பக்கத்தில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக.

RiyAshoK shades.






மேலும் படிக்க,






Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Anti-Child labor drawing

Koala karadi drawing for kids