Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Selfie day poem in tamil

தாமி தின கவிதை (selfie day poem) - June 21

girls take selfie at party. their enjoyment finished with cute selfie
image from pixabay

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் தாமி (selfie ) தினத்திற்கான சிறப்பு கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளோம். இதன் தவறான பயன்பாட்டால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் உயிரிழப்புகளை இந்த சிறு பதிவில் கூறியுள்ளோம். 

அதரம் முதல் அந்தரங்கம் வரை தாமி எடுத்தாய்....
எடுத்தவற்றை பத்திரமாய் பதுக்கி வைத்தாய்....
பாவியவன் (அலைபேசி) பாரெங்கும் பரப்பி விட்டான்.....
தன்மானம் தவறவிட்டுத் தலை குனிந்தாய்....
தாமியினால் நீ செய்த குற்றமுணர்ந்தாய்....
அதன் விளைவாய்....
உயிர் தன்னை மாய்த்துக் கொண்டாய்....
தன்னுடலைத் தான் ரசிக்கத் தாமி எடுத்து உன் உருவப்படத்தை உன் வீட்டில் தொங்க வைத்து விட்டாய்.....
உயிர் பறிக்கும் தாமியினை தள்ளி வைப்போம்....
ஓங்கி உயர்ந்து உள்ளம் தனை துள்ள வைப்போம்.....


தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த வேளையில் அந்தரங்கங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அனைத்து செயலிகளையும் பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்.

அனைவரின் நலன் கருதி விழிப்புணர்வுக்காக இந்த பதிவை பதிவிடுகிறோம். தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக. எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும்.




Comments

Post a Comment

Thank you for visit. Share your favorite to your friends and family.

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Anti-Child labor drawing