Posts

Showing posts from May, 2021

Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

How to draw penguin easily

Image
How to draw penguin easily step by step: step 1: பென்குவின் உடலமைப்பை பென்சிலால் கீழே உள்ளவாறு வரையவும். step 2: பென்குவின் பறவையின் தலை மற்றும் மூக்கு பகுதிகளில் வண்ணம் தீட்டுங்கள் . step 3: பென்குவின் இறக்கைகளை வண்ணம் தீட்டுங்கள். step 4: பென்குவின் உடலின் அடிப்பகுதியில் வண்ணம் தீட்டுங்கள். Step 5: பென்குவின் பாதம் மற்றும் உடல் முழுவதும் வண்ணம் தீட்டுங்கள். அழகிய பென்குவின் எளிதாக வரைந்து முடிந்தது. பென்குவின்கள் மடகாஸ்கர் பகுதியில் வாழ்கிறது. பென்குவின் பாலூட்டி வகையைச் சார்ந்தது.  RiyAshoKshades  

5 steps easy tom and jerry drawing

Image
How to draw tom and jerry easily in 5 steps:  Step 1:  டாம் உருவத்தை கீழே உள்ளது போல் மெல்லியதாக வரையவும். Step 2: டாமின் மற்றொரு கையை கீழே உள்ளவாறு வரையுங்கள். Step 3: டாம் கையில் ஜெர்ரி உள்ளவாறு வரையவும். Step 4: டாம் மற்றும் ஜெர்ரி பொம்மையை டார்க்காக வரையவும். Step 5: டாம் மற்றும் ஜெர்ரி பொம்மைக்கு கீழே உள்ளவாறு வண்ணம் நீட்டுங்கள் டாம் மற்றும் ஜெர்ரி கார்ட்டூன் பொம்மையை 5 படிகளில் எளிதாக வரைந்துவிட்டீர்கள். மேலும் இதுபோன்ற வரைபடங்கள் காண இணைந்து இருங்கள். RiyAshoKshades 

Pandemic drawing competition 2021 result

Image
மாணவர்கள் அனைவரும் வணக்கம். நாம் நடத்திய போட்டியில் அதிகளவில் மாணவர்கள் பங்கேற்காதது சற்று வருத்தமாக உள்ளது. இருப்பினும் போட்டியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு நன்றி. போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர் வேதஸ்ரீ (3 ம் வகுப்பு) மைசூர். இரண்டாம் இடம் பெற்ற மாணவர்: தஸ்வின் (3 ம் வகுப்பு) தமிழ்நாடு. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். இனிவரும் காலங்களிலும் உங்கள் திறன் மேம்படட்டும். கொரோனா தொற்று திரிபு அதிகளவில் பரவுவதால் மாணவர்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். RiyAshoKshades  

Pandemic drawing competition 2021

Image
  மழலை கைவண்ணம்   மலரும் ஓவிய கலைஞர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.  இந்த ஓவியப்போட்டியின் நோக்கம்: கொரோனா ஊரடங்கின் காரணமாக குழந்தைகள் ஆன்லைன் கேம் விளையாட்டுகளிலும் சமூக வலைதளங்களிலும் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.  இதனால் கல்வி செயல்பாடுகள் குறைகிறது மாணவர்களின் கல்வி ஆர்வத்தை தூண்டும் வகையில் சிறப்பு ஓவியப்போட்டி நமது பக்கத்தில் நடத்த உள்ளோம். மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.  கட்டணம்: அனைவருக்கும் அனுமதி இலவசம் தலைப்பு : புவி வெப்பமயமாதல் , கொரோனா விழிப்புணர்வு வயது வரம்பு: 5 முதல் 16 வயது குழந்தைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: riyashokshades@gmail.com போட்டி ஆரம்பம் : 10 மே 2021 போட்டி முடிவு : 15 மே 2021 போட்டி வெற்றி முடிவுகள்: 16 மே 2021 ( ஓவியங்களை வரைந்து தெளிவாக புகைப்படம் எடுத்து அனுப்பவும் ) வெற்றி பெற்ற மாணவர்களின் ஓவியங்கள் நமது பக்கத்தில் வெளியிட்டு கவுரவிக்கப்படும்.  மாணவர்களின் திறனை அதிகரிப்பதே இப்போட்டியின் நோக்கம். அனைத்து மழலைச் செல்வங்களும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தங்கள் வருகைக...