Posts

Showing posts from September, 2020

Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Pikachu art drawing for kids

Image
மழலை கைவண்ணம் ஹாய் குழந்தைகளே  பிகாச்சு பொம்மையின் மற்றொரு வரைபடம் வரைய கற்றுக்கொள்ள போகிறீர்கள். இதற்கு முன் வரைந்த பிகாச்சு பொம்மை படத்தை பார்க்க கிட்ஸ் ட்ராயிங் பக்கத்தை தொடர்ந்து பாருங்கள். வாருங்கள் இன்றைய கார்டூன் வகுப்பிற்குள் செல்லலாம். படி 1: பிகாச்சு கார்டூன் பொம்மையின் கண், வாய், மூக்கு பகுதியை கீழே உள்ளவாறு வரையுங்கள். படி 2: பிகாச்சு பொம்மையின் முகத்தை மெல்லிய கோடு மூலம் வரையவும். பிகாச்சு பொம்மையின் கன்னத்தில் வட்டம் வரையவும். பிகாச்சு பொம்மையின் இரண்டு காதுகளையும் படத்தில் உள்ளவாறு வரையுங்கள். படி 3: பிகாச்சு பொம்மையின் இரண்டு கைகளையும் கீழே உள்ளவாறு வரையுங்கள். படி 4: பிகாச்சு பொம்மையின் உடல் பகுதியை வரையவும். படி 5: அடுத்தபடியாக பிகாச்சு பொம்மையின் இரண்டு கால்களையும் வரையுங்கள். படி 6: இப்போது பிகாச்சு பொம்மையின் வால் பகுதியை கீழே உள்ளவாறு வரையுங்கள். படி 7: பிகாச்சு பொம்மையின் உடல் முழுவதும் வரைந்த கோடுகளை அச்சாக வரையவும். படி 8: பிகாச்சு பொம்மையின் கண் மற்றும் காதுகளை வண்ணம் தீட்டுங்கள். படி 9: பிகாச்சு பொம்மையின் வாய் பகுதியை வண்ணம் தீட்டுங்கள். படி 10: பிகாச்ச...

Pikachu easy drawing for kids

Image
மழலை கைவண்ணம் ஹாய் குழந்தைகளே இன்றைய வகுப்பில் போக்கிமான் கார்ட்டூனில் வரும் பிகாச்சு பொம்மை எளிதாக வரைவது எப்படி என்று கற்றுக்கொள்வோமா.. இதற்கு முந்தைய வகுப்புகளில் வரைந்த படங்களை பார்க்க கிட்ஸ் ட்ராயிங் பக்கத்தை பாருங்கள். படி 1: பிகாச்சு பொம்மை கண் மற்றும் வாய் பகுதியை முதலில் வரையுங்கள். படி 2: அடுத்தபடியாக பிகாச்சு பொம்மை கையை வரையவும். படி 3: பிகாச்சு பொம்மை முகத்தை மெல்லிய கோடுகள் மூலம் வரையவும். படி 4: பிகாச்சு பொம்மையின் இரண்டு காதுகளையும் படத்தில் உள்ளவாறு வரையுங்கள்.                                                      படி 5: பிகாச்சு பொம்மையின் காதுகளில் கீழே உள்ளவாறு இரண்டு கோடுகள் வரையவும். பிகாச்சு பொம்மையின் இரண்டு கன்னங்களில் வட்டம் வரையவும். பொம்மையின் கையை கீழே உள்ளவாறு வரையுங்கள். படி 6: பிகாச்சு பொம்மையின் உடல் பகுதியை கீழே உள்ளவாறு மெல்லிய கோடு மூலம் வரையவும். படி 7: பிகாச்சு பொம்மையின் இரண்டு கால்களை கீழே உள்ளவாறு வரையுங்கள். படி ...

Indian hockey history

Image
இந்திய ஹாக்கி விளையாட்டின் வரலாறு வணக்கம் நண்பர்களே இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று அனைவராலும் போற்றப்படும் ஹாக்கி விளையாட்டு பற்றிய சில தகவல்களை இங்கே பகிர்ந்துள்ளோம். உண்மையில் ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டா? இல்லையா? என்ற கேள்விக்கு இங்கே பதில் கிடைக்கும். இத்துடன் ஹாக்கி விளையாட்டு பற்றிய பல்வேறு தகவல்களை பார்ப்போம் வாருங்கள்.. ஹாக்கி விளையாட்டு: ஹாக்கி என்பது ஒரு குழு விளையாட்டு ஆகும் இதில் இரண்டு அணிகள் போட்டியிடும். ஒவ்வொரு அணியிலும் 11 வீரர்கள் இருப்பார்கள். இவ்விளையாட்டு ஒரு கடினமான பந்தினை விளையாட்டு வீரர்கள் மட்டையினால் நகர்த்தி விளையாடும் விளையாட்டாகும். அணி வீரர்கள் விபரம்: விளையாடும் ஆட்டக்காரர்கள் 11 பேர். 10 வீரர்கள் மற்றும் 1 வீரர் கோள்கீப்பர். மாற்று ஆட்டக்காரர்கள் 5 பேர். இரு அணிகளிளும் தலா 11 பேர் மோதுவர். பந்தின் அளவுகள்: பந்தின் எடை 156 கிராம் முதல் 163 கிராம் வரை இருக்கும். சுற்றளவு 22.4 செ.மீ முதல் 23.5 செ.மீ வரை இருக்கும். ஹாக்கி பந்து கோள வடிவில் இருக்கும். ஹாக்கி பந்து கடினமான பிளாஸ்டிக்கால் உருவாக்கப்படுகிறது. ஹாக்கி மட்டையின் அளவு‌ மற்றும் பயன்படு...

Mango tree easy drawing for kids

Image
மழலை கைவண்ணம் ஹாய் குழந்தைகளே நம்முடைய மழலை கைவண்ணம் பகுதிகள் நிறைய வரைபடங்கள் வரைவது எப்படி என்று கற்றுக் கொண்டீர்கள். இன்று மாஞ்செடி என்று அழைக்கப்படும் மாமரத்தின் இளமை தோற்றத்தை வரைவோம். நீங்கள் அனைவரும் ஒரு செடியை நட்டு வளர்க்க வேண்டும் இயற்கையை காக்க வேண்டும் . உங்கள் சந்தேகம் சரியே ஒரு செடியால் இயற்கையை காக்க முடியாது நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக்கும் செடியால் இயற்கை செழித்து வளரும். என்று நம் வகுப்பில் மாஞ்செடி எப்படி எளிதாக வரைவது என்பதை பார்ப்போம். படி 1: மாஞ்செடியின் அடிப்பகுதி மற்றும் கிளைகளை கீழே உள்ளவாறு வரையுங்கள். கிளைகளில் சில இலைகளை மெல்லிய கோடு மூலம் வரையவும். படி 2: கிளையின் கொம்பில் கீழே உள்ளவாறு மேலும் சில இலைகளை வரையுங்கள். படி 3: மாஞ்செடி கிளையின் கொம்பில் மேலும் சில இலைகளை வரைந்து அடர்த்தியாக தெரியுமாறு வரையவும். படி 4: மாஞ்செடியின் மற்றொரு கிளையில் அடர்த்தியாக இலைகளை வரையுங்கள். படி 5: இலையின் நரம்பு பகுதிகளை கீழே உள்ளவாறு வரையவும்.    படி 6: மாஞ்செடியின் அனைத்து இலைகளிலும் நரம்புகளை வரையுங்கள். படி 7: மாஞ்செடி இலையின் மைய நரம்பின் மீது வண்ணம் தீட்டவும்...