Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Alphabet drawings easy N-nail

 

Nail easy drawing
N-nail 

படி 1:

இன்று நாம் வரைய உள்ள வரைபடம் ஆணி ( nail). முதலில் பென்சிலால் ஒரு சிறிய செவ்வக வடிவ பெட்டியை வரைய வேண்டும். இது ஆணி உடைய தலைப்பகுதி.


படி 2:
அடுத்ததாக வரைந்த செவ்வக வடிவ பெட்டியின் கீழே செங்குத்தான இரண்டு கோடுகள் வரைய வேண்டும். பின்னர் இந்த இரண்டு கோடுகளை இணைக்கும் படி கூர்மையான சிறிய கோடு வரைய வேண்டும்.

படி 3:
தற்போது வரைந்த ஆணி வரைபடத்தில் கருப்பு நிற வண்ணம் தீட்ட வேண்டும்.

படி 4;
ஆணி உடைய கழுத்து பகுதியில் சில கோடுகளை குறுக்கே வரைய வேண்டும். ஆணி வரைபடம் எளிமையாக நான்கு படிகளில் வரைந்து முடிக்கப்பட்டது.








Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Tamil kavithai collection for all relationship

News paper, hope, god Tamil kavithai