Posts

Showing posts from December, 2023

Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Riyashokshades Umbrella alphabet drawing

Image
  Umbrella   படி 1: குடை வரைவதற்கு முதலில் அரைவட்ட வடிவில் படத்தில் உள்ளது போன்ற வடிவத்தை பென்சிலால் வரைய வேண்டும். படி 2: குடையின் மேற்புறம் இரண்டு கோடுகள் வரைய வேண்டும்.  படி 3: அடுத்ததாக குடையில் உள்ள கம்பிகளை வரைவதற்காக சில கோடுகளை குடையின் மீது வரைய வேண்டும். படி 4: தற்போது நீளமான இரண்டு கோடுகள் வரைந்து குடையின் கைப்பிடியை நிறைவு செய்ய வேண்டும். படி 5: குடை வரைந்து முடித்த பிறகு உங்களுக்கு பிடித்தமான வண்ணத்தை தேர்வு செய்து குடை மீது தீட்ட வேண்டும்.

Riyashokshades alphabet drawing - Tap

Image
  T- Tap படி 1: தண்ணீர் குழாயின் வடிவத்தை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 2: அடுத்ததாக தண்ணீர் குழாயின் கைப்பிடியை வரைய வேண்டும். படி 3: தண்ணீர் குழாயின் சில பகுதிகளில் ஒரு வண்ணம் மற்றும் பிற பகுதிகளில் ஒரு வண்ணம் தீட்ட வேண்டும். படி 4: உங்களுக்கு பிடித்தமான வண்ணத்தை தேர்வு செய்து தண்ணீர் குழாயின் மீது தீட்ட வேண்டும்.

Riyashokshades Swing Alphabet drawing

Image
Swing  படி 1: ஊஞ்சல் வரைவதற்கு முன் ஒரு மரத்தின் வடிவத்தை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 2: மரத்தின் கிளையில் ஊஞ்சல் கயிற்றை வரைய இரண்டு கோடுகளை வரைய வேண்டும். படி 3: மரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் பலகை ஒன்றை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 4: அடுத்ததாக ஊஞ்சல் மற்றும் மரத்திற்கு பொருத்தமான நிறத்தை தேர்வு செய்து தீட்ட வேண்டும்.

Riyashokshades Rat Alphabet drawings

Image
  Rat படி 1: எலி வரைவதற்கு முதலில் பென்சிலால் எளிமையாக எலியின் உருவத்தை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். பிறகு எலியின் கண்கள் மற்றும் காதுகளை வரைய வேண்டும். படி 2: அடுத்ததாக எலியின் மூக்கு மற்றும் வாய் பகுதியை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 3: தற்போது எலியின் கைகளை வரைய வேண்டும். படி 4: பிறகு எலியின் கால்கள் மற்றும் வால் ஆகியவற்றை வரைய வேண்டும். படி 5: அடுத்ததாக எலியின் மீது வண்ணம் தீட்ட வேண்டும். படி 6: எலியின் கண்களுக்கு கருப்பு நிறம் மற்றும் காதுகளுக்கு சிவப்பு நிறம் தீட்ட வேண்டும்.

Riyashokshades quill Alphabet drawings

Image
  Quill  படி 1: இறகு வரைவதற்கு முதலில் பென்சிலால் மெல்லிய கோடு சாய்வாக வரைய வேண்டும். படி 2: படத்தில் உள்ளதுபோல் இறகு தூரிகை வரைய வேண்டும். படி 3: இறகு மீது சில கோடுகளை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 4: அடுத்ததாக இறகு மீது உங்களுக்கு விருப்பமான வண்ணங்களை தேர்வு செய்து தீட்ட வேண்டும்.

Riyashokshades Alphabet drawings Pen

Image
P-Pen படி 1: படத்தில் உள்ளதுபோல் இரண்டு கோடுகளை வரைந்து இணைக்க வேண்டும்.   படி 2: அடுத்ததாக பேனாவின் முள் வரைய வேண்டும். படி 3: பேனாவின் மீது சில கோடுகளை படத்தில் உள்ளதுபோல் வரைந்து இணைக்க வேண்டும். படி 4: உங்களுக்கு பிடித்த வண்ணத்தை பேனாவின் மீது கொடுக்கலாம். படி 5: பேனாவின் மீது படத்தில் உள்ளதுபோல் வேறு ஒரு வண்ணத்தை கொடுங்கள் அது வரைபடத்தின் அழகை மேலும் அதிகரிக்கும்.

Alphabet drawing O-orange

Image
O-orange  படி 1: ஆரஞ்சு வரைவதற்கு முதலில் பென்சிலால் எளிமையாக ஒரு வட்டம் வரைய வேண்டும். படி 2: ஆரஞ்சு பழம் மீது இரண்டு கோடுகளை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும்.   படி 3: அடுத்ததாக ஆரஞ்சு பழத்தின் இலை வரைய வேண்டும். படி 4: இலைக்கு உள்ளே உள்ள வட்டத்தின் கோட்டை அழிக்க வேண்டும்  படி 5: ஆரஞ்சு பழத்தின் மீது ஆரஞ்சு நிறத்தில் வண்ணம் தீட்ட வேண்டும். படி 6: ஆரஞ்சு பழத்தின் இலைக்கு பச்சை நிறத்தில் வண்ணம் தீட்ட வேண்டும். படி 7: அடுத்ததாக ஆரஞ்சு பழத்தின் மீது சில கோடுகளை வெள்ளை நிறத்தில் வரைய வேண்டும் இது பழத்திற்கு இயற்கையான தோற்றத்தை கொடுக்கும்.

Alphabet drawings easy N-nail

Image
  N-nail  படி 1: இன்று நாம் வரைய உள்ள வரைபடம் ஆணி ( nail). முதலில் பென்சிலால் ஒரு சிறிய செவ்வக வடிவ பெட்டியை வரைய வேண்டும். இது ஆணி உடைய தலைப்பகுதி. படி 2: அடுத்ததாக வரைந்த செவ்வக வடிவ பெட்டியின் கீழே செங்குத்தான இரண்டு கோடுகள் வரைய வேண்டும். பின்னர் இந்த இரண்டு கோடுகளை இணைக்கும் படி கூர்மையான சிறிய கோடு வரைய வேண்டும். படி 3: தற்போது வரைந்த ஆணி வரைபடத்தில் கருப்பு நிற வண்ணம் தீட்ட வேண்டும். படி 4; ஆணி உடைய கழுத்து பகுதியில் சில கோடுகளை குறுக்கே வரைய வேண்டும். ஆணி வரைபடம் எளிமையாக நான்கு படிகளில் வரைந்து முடிக்கப்பட்டது.

Alphabet drawings M- Mango

Image
"ஆங்கில எழுத்துக்களுடன் வரைபடம் கற்கலாம் வாங்க குழந்தைகளே" M- Mango படி 1: மாம்பழம் வரைய முதலில் ஒரு நீள்வட்டத்தை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 2: அடுத்ததாக இரண்டு சிறிய கோடு வரைய வேண்டும். படி 3: அடுத்ததாக மாம்பழத்தின் இலை வரைய வேண்டும். படி 4: இப்போது மாம்பழத்திற்கு வண்ணம் தீட்ட வேண்டும். படி 5: அடுத்ததாக மாம்பழத்தின் இலைக்கு பச்சை நிறத்தில் வண்ணம் கொடுங்கள். படி 6: மாம்பழம் மீது ஆங்காங்கே வெண்மை வண்ணம் கொடுங்கள் அது வரைபடத்தின் அழகை மேலும் அதிகரிக்கும்.