Posts

Showing posts from November, 2023

Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Colourful Kite drawing steps

Image
"ஆங்கில எழுத்துக்களுடன் வரைபடம் கற்கலாம் வாங்க குழந்தைகளே" K-Kite படி 1: பட்டம் வரைவதற்கு முதலில் பென்சிலால் படத்தில் உள்ளதுபோல் நான்கு கோடுகளை வரைய வேண்டும். படி 2: நான்கு கோடுகளுக்கு இடையே படத்தில் உள்ளதுபோல் இரண்டு கோடுகளை குறுக்கே வரைய வேண்டும். படி 3: பட்டத்தின் நூல் மற்றும் வால் பகுதியை வரைய வேண்டும். படி 4: பட்டத்தின் மீது சில குறியீடுகளை அழகிற்காக வரைய வேண்டும். படி 5: அடுத்ததாக உங்களுக்கு விருப்பமான வண்ணங்களை தேர்வு செய்து தீட்ட வேண்டும். படி 6: பட்டத்தின் மீது உங்களுக்கு விருப்பமான வண்ணங்களை கொடுங்கள்.

Jar drawing steps for kids

Image
"ஆங்கில எழுத்துக்களுடன் வரைபடம் கற்கலாம் வாங்க குழந்தைகளே" J-jar  படி 1: முதலில் பென்சிலால் ஜாடி உடைய உருவத்தை வரைய வேண்டும். படி 2: அடுத்ததாக ஜாடி உடைய இரண்டு விளிம்பை இணைக்க வேண்டும். படி 3: ஜாடி உடைய இரண்டு விளிம்பை இணைத்த பின்னர் ஜாடி உடைய கைப்பிடியை வரைய வேண்டும். அடுத்ததாக ஜாடி உடைய அடிப்பக்கம் கீழே உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 4: ஜாடி குறுக்கே சிறிய கோடு ஒன்று வரைய வேண்டும். படி 5: ஜாடி மீது சிறிய கோடு வரைவதன் மூலம் ஜாடி உடைய கழுத்து பகுதி நிறைவு பெறும். படி 6: ஜாடி மீது உங்களுக்கு விருப்பமான வண்ணங்களை தேர்வு செய்து தீட்ட வேண்டும். படி 7: ஜாடி உடைய மேல் பகுதிக்கு மற்றுமொரு வண்ணம் கொடுங்கள். 

Colourful Icecream drawing steps

Image
"ஆங்கில எழுத்துக்களுடன் வரைபடம் கற்கலாம் வாங்க குழந்தைகளே" I-ice cream  படி 1: ஐஸ்கிரீம் வரைவதற்கு முதலில் படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 2: அடுத்ததாக சாய்வாக ஒரு சிறிய வட்டம் வரைய வேண்டும். படி 3: அடுத்ததாக வட்டத்தின் மேல் மற்றுமொரு வட்டம் வரைய வேண்டும். படி 4: வரைந்த இரண்டு வட்டத்தையும் இணைக்கும் படி மேலே மற்றுமொரு வட்டம் வரைய வேண்டும். படி 5: தற்போது ஐஸ்கிரீம் அடிப்பக்கம் வண்ணம் தீட்ட வேண்டும். படி 6: ஐஸ்கிரீம் அடிப்பக்கம் மீது சில கோடுகளை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 7: ஐஸ்கிரீம் மீது உங்களுக்கு விருப்பமான வண்ணங்களை தேர்வு செய்து தீட்ட வேண்டும். படி 8: ஐஸ்கிரீம் மீது ஜெர்ரி பழத்தை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும்.

Easy Hen drawing steps in Tamil

Image
"ஆங்கில எழுத்துக்களுடன் வரைபடம் கற்கலாம் வாங்க குழந்தைகளே" H- Hen படி 1: கோழி வரைவதற்கு முதலில் பென்சிலால் கோழியின் உருவத்தை கீழே உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 2: அடுத்ததாக கோழியின் அலகுகளை வரைய வேண்டும். படி 3:  கோழியின் அலகுகளை வரைந்த பின்னர் கோழியின் இறக்கைகளை வரைய வேண்டும். படி 4: தற்போது கோழியின் கழுத்து பகுதியில் சிறிய இறகுகள் வரைய வேண்டும். படி 5: அடுத்ததாக கோழியின் கண்கள் மற்றும் கால்களை வரைய வேண்டும். படி 6: கோழியின் முழு உருவமும் வரைந்த பின்னர் உங்களுக்கு விருப்பமான வண்ணங்களை தேர்வு செய்து கோழியின் உடல் மீது தீட்ட வேண்டும். படி 7: தற்போது கோழியின் கண்கள் மற்றும் கால்களுக்கு வண்ணம் கொடுங்கள்.

Little princess gown drawing

Image
"ஆங்கில எழுத்துக்களுடன் வரைபடம் கற்கலாம் வாங்க குழந்தைகளே" G-Gown படி 1: அழகான ஆடை வரைய முதலில் பென்சிலால் படத்தில் உள்ளதுபோல் ஆடையின் வடிவத்தை வரைய வேண்டும். படி 2: அடுத்ததாக ஆடையின் நடுவில் ரிப்பன் வரைய வேண்டும். படி 3: ஆடையில் வரைந்த ரிப்பன் மீது சில கோடுகளை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 4: ஆடை வரைபடம் நிறைவுபெற்றது. தற்போது உங்களுக்கு விருப்பமான வண்ணங்களை தேர்வு செய்து ஆடையின் மீது தீட்ட வேண்டும். படி 5: தற்போது ரிப்பன் மீது வண்ணம் தீட்ட வேண்டும். ஆடையின் அழகை மேலும் அதிகரிக்க சில கோடுகளை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 6: தற்போது ஆடையின் கைகளை வரைந்து அதற்கு வண்ணம் தீட்ட வேண்டும்.

Fish drawing for kids

Image
"ஆங்கில எழுத்துக்களுடன் வரைபடம் கற்கலாம் வாங்க குழந்தைகளே" F-Fish படி 1: மீனின் உடலமைப்பை முதலில் பென்சிலால் வரைய வேண்டும். படி 2: மீனின் கண்கள் மற்றும் துடுப்புகளை கீழே உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 3: மீனின் உடல் பகுதி முழுவதும் வண்ணம் தீட்ட வேண்டும். படி 4: அடுத்ததாக மீனின் துடுப்புகளை வண்ணம் தீட்ட வேண்டும். படி 5: உங்களுக்கு விருப்பமான வண்ணங்களை தேர்வு செய்து மீனின் மீது தீட்ட வேண்டும்.

Easy Elephant pencil drawing

Image
"ஆங்கில எழுத்துக்களுடன் வரைபடம் கற்கலாம் வாங்க குழந்தைகளே" E-ELEPHANT  படி 1: முதலில் பென்சிலால் யானையின் முகத்தை கீழே உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 2: அடுத்ததாக யானையின் காதுகளை வரைய வேண்டும். படி 3: தற்போது யானையின் கால்களை வரைய வேண்டும்.  படி 4: யானையின் பின்னங்கால் மற்றும் தும்பிக்கையை வரைய வேண்டும். படி 5: அடுத்ததாக யானையின் கண்களை வரைய வேண்டும்  படி 6: யானையின் முழு உருவமும் தற்போது வரைந்து விட்டீர்கள். உங்களுக்கு விருப்பமான வண்ணங்களை தேர்வு செய்து யானையின் மீது தீட்ட வேண்டும்.